திங்கள், 15 ஜூன், 2015

கொழுப்பு படிதல் உடலும் உணவும்

குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் 'கொழுப்பு செல்கள்' உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது 'பாலின ஹார்மோன்கள்' ( Sex Hormones) உடலில் சுரக்க ஆரம்பிக்கும் நேரத்தில்தான் மறுபடியும் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாகிறது.
இந்த பாலின ஹார்மோனின் தூண்டுதலினால்தான், ஆண்-பெண் உடல் அமைப்புக்கு ஏற்ப உடலில் கொழுப்பு படிகிறது.
சுமார் 15 வயதிற்கு மேல் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான் இருக்கும். அந்த செல்களில் கொழுப்பு மட்டும் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
பருவ வயதைத் தாண்டியபிறகு சிலருக்கு புதிதாக, மிக அரிதாக, புது கொழுப்பு செல்கள் உருவாகும். இது எப்பொழுது தெரியுமா? 25 வயது வாலிபருக்கு, உடல் எடை கட்டுக்கு அடங்காமல், அதிக பருமனானால், புது கொழுப்பு செல்கள் அவரது உடலில் உருவாகும். அதேபோல், சிலரின் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பு செல்கள் முழுவதும் சுரண்டி எடுக்கப்பட்டு விட்டாலும் (Liposuction Surgery), புது கொழுப்பு செல்கள் அவர்களது உடலில் உருவாகும்.
இடுப்பு பகுதி, தொடைப்பகுதியைக் காட்டிலும் உங்கள் வயிற்றிலும், வயிற்றைச் சுற்றியும், அதிகமான கொழுப்பை நீங்கள் நிரந்தரமாக சுமந்து கொண்டிருந்தால், அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. இப்படி வயிற்றில் சேரும் கொழுப்புதான், ஆபத்தான நோய்களை உண்டாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
தினமும் வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு, தூங்கித் தூங்கி எழுந்துகொண்டிருந்தால், வயிற்றில் கொழுப்பு படியத்தான் ஆரம்பிக்கும். 'கை எலும்பு முறிவு, கால் எலும்பு முறிவு, ஆபரேஷன் முடிந்துவிட்டது, ஒரு மாதம் நடக்கக் கூடாது, படுக்கையிலேயே தான் இருக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார். நன்றாக சாப்பிட்டுவிட்டு நடக்காமல் இருந்தேன், இப்பொழுது வயிற்றில் கொழுப்பு படிந்து புதிய தொப்பை வந்துவிட்டது' என்று நிறைய பேர் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.
தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்குள் வைத்திருக்கும் நிறைய பேர், சில காரணங்களினால் உடற்பயிற்சியை சில மாதங்களுக்கு செய்ய முடியாமல் போனால் அவர்கள் வயிற்றில் கொழுப்பு படிந்து, வயிறு பெரிதாக வாய்ப்பிருக்கிறது. கட்டுப்பாடான உணவும், உடற்பயிற்சியும், உடலுழைப்பும் தினமும் இருந்தால் வயிறு பெரிதாகாது.
உடலுழைப்பு இல்லாமல் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தினமும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தால், வயிறு மட்டுமல்ல, உடல் முழுவதுமே பருமனாக ஆரம்பிக்கும்.
நாம் தினமும் சாப்பிடும் உணவில், நல்ல கொழுப்புள்ள உணவு எது?, கெட்ட கொழுப்புள்ள உணவு எது? என்று தேடிப்பார்த்து சாப்பிட முடியாது. ஆனால் முடிந்தவரை, நல்ல கொழுப்புள்ள உணவுகளை அதிகமாகவும், கெட்ட கொழுப்புள்ள உணவுகளை குறைவாகவும் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
கடைகளில் கொழுப்பில்லாத உணவு (Fat Free Diet) என்று சில உணவுப்பொருட்களின் கவர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் அதில் கொழுப்பு இருக்காது என்று நினைத்து, அதை இஷ்டத்துக்கு சாப்பிடக்கூடாது. 'கொழுப்பில்லாத உணவு' என்று குறிப்பிடப்பட்ட நிறைய உணவுப்பொருட்களில், அதிக சர்க்கரை, அதிக கலோரி இருக்கும். அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சத்தும் இருக்கும். அவையாவும் உடலுக்கு நல்லதல்ல.
ஒரு மனிதனுடைய உடலில் கொழுப்பு சேரச்சேர, அவனுடைய உடல் எடை, தானாகவே அதிகரிக்கும். உடலின் எல்லா இடத்திலேயுமே கொழுப்பு இருக்கிறது. மனித உடலில் கொழுப்பு இரண்டு விதமாக பிரிக்கப்படுகிறது. 1) வெள்ளைக்கொழுப்பு (White Fat) 2) பழுப்புக் கொழுப்பு (Brown Fat).
உடலுக்கு சக்தியைக் கொடுக்கவும், உடல் எந்த நேரமும் சூடாக இருக்கவும், உடலில் காயம், எதுவும் படாமல் உடலை மெத்தைபோன்று வைத்திருக்கவும் வெள்ளைக்கொழுப்பு உதவுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பழுப்புக்கொழுப்பு அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு பழுப்புக்கொழுப்பு மிக, மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். நாம் சாப்பிடும் கொழுப்புச்சத்துள்ள உணவில் 'ட்ரை கிளிசரைடு' (Triglyceride) என்று சொல்லக்கூடிய ஒருவகை ரத்தக்கொழுப்புதான் அதிகமாக இருக்கும்.
சில உணவுப்பொருட்கள், வயிற்றில் அதாவது இரைப்பையிலும், குடலிலும் அதிகமாக வாயுத்தொல்லையை (Gas) ஏற்படுத்தி விடுகிறது. அதிக அளவில் குளிர்பானங்களைக் குடித்தாலும், வயிறு பருமனாகிவிடும். அதிலும் அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து விடும். இதனால் ரத்தத்தில் இன்சுலின் அளவும் கூடும். இதன் காரணமாக உடலில் அதிகமாக உள்ள சர்க்கரை, சின்னச் சின்ன கொழுப்புக் கட்டிகளாக மாறுகிறது.
இக்கட்டிகள், வயிற்றில் படிய ஆரம்பித்து நிரந்தரமான தொப்பையை உண்டாக்கி விடுகிறது.
அசைவ உணவுப்பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் சமோசா, பக்கோடா, பர்கர், பப்ஸ், நக்கட்ஸ், கட்லெட் போன்றவைகளில் அநேகமாக கரையக்கூடியக்கொழுப்பு (Saturated Fat) அதிகமாக இருக்கும். இந்த கரையக்கூடியக் கொழுப்பு, சிறிய ரத்தக் குழாய்களை அடைப்பதோடல்லாமல், வயிற்றில் கொழுப்பு படிவதையும் அதிகப்படுத்துகிறது. இதுபோக இந்த மாதிரி வறுத்தெடுத்த, பொரித்தெடுத்த அசைவப் பண்டங்களில் உப்பு அதிகமாகப் போடப்பட்டிருக்கும். உப்பு அதிகமாக உள்ள உணவுகள், உடலில் தண்ணீரை அதிகமாக சேர்த்து வைக்க தூண்டிவிடும். இதனால் உடல் முழுவதுமே லேசான தண்ணீர் தேங்கி, உடல் வீங்கி பெரிதாகக் காணப்படும்.
சூயிங்கம் வாயில்போட்டு மெல்லும்போது, வாய்வழியாக காற்றை நாம் குடிக்கிறோம். சாதாரணமாக வாய்வழியாக காற்று உள்ளே போகும்போது எந்த பிரச்சினையையும் உண்டு பண்ணாது. ஆனால் அதிக அளவில் தொடர்ந்து மென்றுகொண்டே காற்றைக் குடிக்கும்போது, கண்டிப்பாக வயிற்றில் வாயு சேர்ந்து பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இதனாலும் வயிறு பெரிதாகும்.
முட்டைக்கோஸ் உடலுக்கு மிக நல்லது என்றாலும், நிறைய பேருக்கு வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். அதிலும் முட்டைக்கோஸை நிறைய பேர் சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதுண்டு. இது சரியல்ல. வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும். நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் மிகக் குறைவான அளவே வாயுத்தொல்லை உண்டாகும். பொதுவாக காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க நல்லதொரு வழியாகும். இதன் மூலம் வயிற்றிலுள்ள கொழுப்பும் குறையும். ஆனால் இந்த காய்கறிகளை எந்தமாதிரி நாம் சமைத்து சாப்பிடப்போகிறோம் என்பது மிக முக்கியம்.
வேகவைத்து சாப்பிடும் காய்கறிகளும், ஜூஸ், சூப் போன்றவைகள் செய்து சாப்பிடும் காய்கறிகளும், பச்சையாக சாப்பிடும் சில காய்கறிகளும் உடல் எடையைக் குறைக்கும். தொப்பையையும் குறைக்கும். இதற்கு மாறாக அதிக எண்ணெய்யில் பொறிக்கப்படும், வறுக்கப்படும் (Deep Fry) காய்கறி பதார்த்தங்கள் உடல் எடையைக் கூட்டி வயிற்றைப் பெரிதாக்கி விடும். மேலும் காய்கறிகளை அதிக நேரம் அதிக எண்ணெய்யில் வறுத்தெடுக்கும்போது, கெட்டக்கொழுப்பாகிய இடைக்கொழுப்பு (Transfat) நிறைய உடலில் சேர்ந்துவிடுகிறது. இந்த இடைக்கொழுப்பு, உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் எடையைக் கூட்டி, வயிற்றையும் பெரிதாக்கி விடுகிறது.
கட்டுப்பாடான உணவும், கொழுப்பு குறைந்த உணவும், வயிற்றிலும், உடலிலும் கொழுப்பை சேரவிடாது. அதோடு உடற்பயிற்சியும், உடலுழைப்பும் தினமும் இருந்தால், வயிற்றில் கொழுப்பு அறவே சேராது. ஒரு மாதம் தொடர்ந்து நடக்காமல் விட்டுவிட்டாலோ, தொடர்ந்து கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலோ வயிறு பெரிதாகிவிடும். ஆகவே உடலுழைப்பும், உணவுக்கட்டுப்பாடும் மிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    


சனி, 13 ஜூன், 2015

சிசேரியன் அதிகமாவது ஏன்?

‘என் மகளுக்குச் சுகப்பிரசவம்’ என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது?
“சிசேரியன் ஏன் அதிகரித்துள்ளது?”
“தாமதமான திருமணம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல், 30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.”
“எப்போது சிசேரியன் அவசியம்?”
“பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை (Position) இல்லாதிருந்தால், கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால், கர்ப்பப்பையில் வெடிப்பு அல்லது பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.”
“எப்போது கவனமாக இருக்க வேண்டும்?”
“கர்ப்ப காலங்களில் வலி தொடர்ந்து இருந்தாலும், பனிக்குடம் உடைந்து, குழந்தை மூச்சுத் திணறலால் அவதிப்பட்டாலும், தாய்க்கு கால் வீக்கம், ரத்தப்போக்கு இருந்தாலும், குழந்தை அசையும் திறன் குறைந்திருந்தாலும், இடுப்பு எலும்பு பலவீனமாக இருந்தாலும், குழந்தையின் தாய்க்குப் பார்வைக் குறைபாடு இருந்தாலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.”
“சிசேரியனைத் தவிர்த்திட கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?”
“கர்ப்ப காலங்களில் ஐந்து முறையேனும் மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதித்து கொள்தல் அவசியம் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். எனவே, ஒவ்வொரு மூன்று மாத கால (Trimester) இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம். முதல், இரண்டு, மூன்று என மூன்று மாத காலத்திலும் ஒவ்வொரு முறையும், பின்னர் மருத்துவர் அறிவுறுத்தும்போதெல்லாம் மருத்துவமனைக்குச் செல்தல் அவசியம்.
1. 36-வது வாரத்துக்கு மேல் ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
2.இரும்புச் சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்து மாத்திரைகளை, மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய, டாக்டர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்துகொள்ளலாம்.
எந்த ஒரு சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகள மேற்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே, கர்ப்ப கால யோகாசனங்களைச் செய்ய வேண்டும். நடப்பதும் நல்லது.
சரிவிகித உணவைப் பின்பற்ற வேண்டும். புரதமும், நார்சத்துக்களும் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டும். பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மீன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உணவை நான்கைந்து வேளையாகப் பிரித்து, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.
இயற்கைக்கு எதிராக நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துக் குழந்தை பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து, குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்தானது. பெரும்பாலான சமயங்களில் இந்த முயற்சி தோல்வியையே தழுவும் என்பதால், இதை காரணமாகக்கொண்டு சிசேரியன் செய்துகொள்ளக் கூடாது.”


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    


வெள்ளி, 12 ஜூன், 2015

ஆண்மை இழப்பை தடுக்கும் பழங்கள்..!

பொதுவாக ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போது 50 வயதிற்கு உட்பட்டவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டால், அது அவர்களது ஈகோவை பாதிக்கும்.எனவே ஆண்கள் எப்போதும் வலுவுடனும், ஆரோக்கியமான ஆண்மைத்தன்மையுடனும் இருக்க விரும்புவார்கள்.
 அப்படி நினைத்தால் மட்டும் போதாது, ஆண்மை இழப்பு ஏற்படாதவாறு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.குறிப்பாக ஆண்களுக்கு இப்படி ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறை தான். இதனால் மன அழுத்தம் அதிகரித்து, நிம்மதி போய், எதிலும் அவசரமாக இருப்பதால், உடலை ஆரோக்கியமாக பேணிப் பாதுகாக்க முடியவில்லை.
ஆகவே எப்போதும் ஆண்மை இழப்பு ஏற்படாமல் இருக்க, உண்ணும் உணவில் ஒருசில பழங்களை சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இங்கு ஆண்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பழங்களை சாப்பிட்டால், விறைப்புத்தன்மை குறைபாடு, ஆண்மை இழப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.
அன்னாசி: அன்னாசிப்பழம் ஆண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், அது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும். மேலும் இதில் மெக்னீசியம் இருப்பதால், இது நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட உதவியாக இருக்கும்.
தர்பூசணி: தர்பூசணி ஒரு வயாகரா. ஆகவே இந்த பழத்தை ஆண்கள் சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளானது ஆண்களின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, அவர்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படாமல் தடுக்கும்.
கொய்யாப்பழம்; கொய்யாப்பழத்திலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இதுவும் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்க வல்லது. எனவே ஆண்கள் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், அவர்களுக்கு ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் இயற்கையாகவே விறைப்புத்தன்மை குறைபாட்டை தடுக்கும் பொருள் உள்ளது. ஆகவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவது, ஆண்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையையும் விளைவிக்காமல் இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியும் ஒரு இயற்கை வயாகரா. அதிலும் இந்த இயற்கை வயாகராவை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் சக்தியானது அதிகரிக்கும். அதிலும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் 1 மணிநேரத்திற்கு முன், இதனை சாப்பிட்டால், நன்கு செயல்பட முடியும்.
கோஜி பெர்ரி: பாலுணர்வைத் தூண்டும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் கோஜி பெர்ரி. இந்த பழத்தில் மற்ற பழங்களை விட அதிக அளவில் பீட்டா கரோட்டீன் உள்ளது. இதனால் இது ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்களில் மிகவும் சிறந்தவையாக கருதப்படுகிறது

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    

வியாழன், 11 ஜூன், 2015

உடல் உறுப்புகளின் குறைகளை வைத்து நோய்களை அறியலாம்..!

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….?
-
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் :
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி….?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்:
போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி…?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்:
எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
-
4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி…?
-
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது
டிப்ஸ்:
குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி…?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால்
உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்:
அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி….?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்:
ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    

புதன், 10 ஜூன், 2015

முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!


பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது.

முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது. முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலுக்கு நன்மையை அளிக்க சில காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி படித்து அதன் நன்மைகளை அடைந்திடுங்கள்.

அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது முளைக்க வைக்கும் போது பயறுகளும் பீன்ஸ்களும் உயிர் பெற்ற தாவரமாக மாறுகிறது. இதனால் வைட்டமின் பி, சி மற்றும் கரோட்டின் போன்றவைகள் அதில் வளமையாக காணப்படும். மேலும் நம் உடல் கனிமங்களை நன்றாக உறிஞ்சிட உதவிடும். மேலும் இந்த செயல்முறை ஃபைடிக் அமிலத்தின் தாக்கத்தை நடுநிலையாக்கும்.

இந்த அமிலம் கனிமங்களுடன் சேர்ந்து, உடல் அவைகளை முழுமையாக உறிஞ்சுவதை முட்டுக்கட்டையாக இருக்கும். முளைக்காத பீன்ஸை காட்டிலும், முளைக்கட்டிய பீன்ஸில் அதிக புரதமும் குறைந்த ஸ்டார்ச்சும் உள்ளது.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    


செவ்வாய், 9 ஜூன், 2015

ஆண்மையை பெருக்க - சித்த மருத்துவர் அருண் சின்னையா

தண்ணீர்விட்டான் கிழங்குச் சூரணம் 1தேகரண்டி, தினமிருவேளை, 200மிலி பாலுடன் கொள்ள ஆண்மை பெருகும்.

1கிராம்தாமரைவிதையை அரைத்து.பாலில் கலந்து தினமிருவேளை சாப்பிட்டுவர தாதுபலம் பெறும்.

நெருஞ்சில்விதைகளை பாலிலவித்து,பொடித்து காலைமாலை அரைதேகரண்டி பாலில் கலந்து பருகிவர ஆண்மை பெருகும்.

துளசி இலையை குறிப்பிட்டளவு தினமுமுண்டுவர ஆண்மை அதிகரிக்கும்
தூதுவேளை பூவையுலர்த்திப் பொடித்து அரைதேகரண்டி தினம் காலை,பாலில் சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும்.

அரைக்கீரையை நெய்,மிளகு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டுவர தாதுபலம் அதிகரிக்கும்
முருங்கைவிதைசூரணம் இரவில் பாலுடன் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும்
.தோல் நீக்கிய முருங்கை விதையை பாலில் வேகவைத்து,தேன் கலந்து இரவில் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும். 

சுத்தம் செய்த ஆவாரைபிசின் 3கிராம்,100மிலி நீரில் இரவு ஊற வைத்து காலை பனங்கற்கண்டு கலந்து பருகிவர தாது விருத்தியடையும்.

நன்னாரி வேர் குடிநீர் சூடாக பருகிவர ஆண்மை பெருகும்.

பிரண்டைஉப்பு2கிராம்,ஜாதிக்காய்தூள்5கிராம் கலந்து சாப்பிட்டுவர தாதுநட்டம் குணமாகும்.

செம்பரத்தைபூச்சூ
ரணம்10கிராம்,மருதம்பட்டைச்சூரணம்5கிராம் கலந்து பாலில் சாப்பிட்டுவர தாதுபலம் பெறும்.ஆண் மலடு நீங்கும்.

செம்பரத்தை மகரந்தக்காம்பு சூரணம்5கிராம் பாலில் சாப்பிட்டுவர ஆண்மலடு நீங்கும்
செம்பரத்தைபூச்சூரணம்,முருங்கைபூ அல்லது விதைச்சூரணம் சேர்த்துச்சாப்பிட்டுவர ஆண்மைக்குறைவு நீங்கும் .

சர்க்கரைவேம்பின் பாலை 48 நாள் வைத்திருந்து சாப்பிட நாதம் தூய்மையாகும்.விந்து கட்டும்.பெண்மலடு நீங்கும்.

ஓரிதழ்தாமரையை அரைத்து 10கிராம்,பாலில் பருகிவர ஆண்மை பெருகும்.விந்து ஒழுக்கு நிற்கும்.

நிலப்பனங்கிழங்கினோடு நீர்முள்ளிவித்தும் கூட்டி,புலப்படும் நெருஞ்சிவித்திற் பூனைக்காலி விதையினோடு,இலப்படும் இவற்றையிடித்து தூள்செய்து பாலில் கொண்டால் பலப்படும் விந்து என்று பேசினோர் பெரியோர்தாமே! 

ஓரிதழ்தாமரைசூரணம்5கிராம் பாலில்பருக சுக்கிலம் பெருகும்.விந்திழப்பு தீரும்
தூதுவேளைஇலை,அம்மான்பச்சரிசிஇலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர தாது,உடல் பலப்படும்.

நாட்டுவெங்காயத்தை நெய்யில் வதககி உண்டுவர ஆண்மை அதிகரிக்கும்
அம்மான்பச்சரிசி,கீழாநெல்லி இலைகள் சம அளவெடுத்து, 

எலுமிச்சையளவரைத்து,200மிலி எருமைதயிரில் சாப்பிட்டுவர விந்துஒழுகுதல் கட்டுப்படும்.உடம்புஎரிச்சல்,நமைச்சல்,மேகரணம் தீரும்
பிராய்பாலுடன் வறுத்த கடலைமாவைப்பிசைந்து,பட்டாணியளவு மாத்திரை செய்து காலைமாலை 2மாத்திரை சாப்பிட்டுவர ஆண்மை அதிகரிக்கும்
முருங்கைவிதை,பூனைக்காலிவிதை,நிலப்பனை,பூமிசர்க்கரைகிழங்கு சமனெடுத்துப்பொடித்து,5கிராம்,5மிலி அத்திப்பாலில் காலைமாலை 20நாள் உட்கொள்ள அளவுகடந்த தாதுவளர்ச்சி தரும்.

ஆலம்பழம்,விழுது,கொழுந்து சமனரைத்து,எலுமிச்சையளவு காலை 120நாள் உட்கொள்ள ஆண்மலடு நீங்கும்.

அமுக்கராசூரணம்10 கிராம், கசகசா30கிராம், பாதாம்பருப்பு 10கிராம்.சாரபருப்பு 5கிராம் ஊறவைத்தரைத்து 200பாலில் சர்க்கரை சேர்த்து காலையில் பருகிவர தாது விருத்தியாகும்.இளமை திரும்பும்.

எருக்குஇலையை அரைத்து,நெல்லிக்காயளவு,பாலில் கலந்து 48,96நாள் சாப்பிட ஆண்மலடு நீங்கும் .

கீழாநெல்லி.ஓரிதழதாமரை சமனரைத்து, நெல்லிக்காயளவு,பாலில் மண்டலம் கொள்ள வாலிப வயோதிகம் நீங்கும் .

கோரைக்கிழங்குசூரணம் அரைதேக்கரண்டி,தேனில் தினமிருவேளை கொள்ள புத்திக்கூர்மை,தாதுவிருத்தி,பசித்தீவனம்,உடற்பொலிவு உண்டாகும்.

தாளிக்கீரைஇலைகளை பருப்புடன் கூட்டாக சமைத்து நெய் சேர்த்துண்டுவர விந்திழப்பு குணமாகும்.

கானாவாழைசமூலம்,தூதுவேளைபூ,முருங்கைபூ சேர்த்து 2ல்1ன்றாய்க்காய்ச்சி பால்,கற்கண்டு கலந்து மண்டலம் கொள்ள தாது பலம்பெறும் .

கருவேலம்பிசின்2கிராம் நெய்யில் வறுத்துப்பொடித்து சாப்பிட்டுவர தாது பலம்பெறும்தீரும்.தாதுபலப்படும் .

வெண்தாமரைபருப்பை தூள்செய்து நீடித்து சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும் தாதுபலம்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App:    


திங்கள், 8 ஜூன், 2015

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.

நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.

உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை  (e-book) படிக்க…     சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 Android App:  

iOS App: