வியாழன், 29 ஜனவரி, 2015

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. மருத்துவக் குணங்கள்;

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
2) இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
7) உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
8) மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
9) ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
10) கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
11) மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
12) நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
14) நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
16) மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
17) சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
18) ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
20) ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
25) முகம் அழகுபெற திராட்சை பழம்.
26) அஜீரணத்தை போக்கும் புதினா.
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு"

புதன், 28 ஜனவரி, 2015

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம் படைப்புகள்

தூதுவளை தோசை- முடக்கத்தான் சாம்பார்…

சித்த மருத்துவத்தின் அடிப்படையே உணவே மருந்து, மருந்தே உணவு. எதுவெல்லாம் உணவாக இருக்கிறதோ அதுவெல்லாம் மருந்து. எதுவெல்லாம் மருந்தாக உள்ளதோ அதுவெல்லாம் உணவு. சீரகத் தைலம் என்று ஒன்று இருக்கிறது. அது சீரகத்தை அடிப்படையாகக் கொண்டு செய்வது. சீரகம் நாம் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். அதேபோல வெள்ளைப் பூசணியை நாம் சாம்பார் வைத்து சாப்பிடுகிறோம். அதே வெள்ளைப் பூசணி சித்த மருத்துவத்தில் வெள்ளைப் பூசணி லேகியமாக உள்ளது. இது நீர் எரிச்சல், சிறுநீர் வியாதிகள் குணமாகிறது. எனவே உணவுப் பொருளே மருந்தாக ஆகிறது. தேன், நெய், சுக்கு, திப்பிலி, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் இதுபோன்ற பொருட்கள் மருந்து செய்யப்படுகிறது. ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகள் இருக்கும். சித்த மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. சித்த உணவியல் மருந்துகள் எந்த பக்க விளைவையும் தராது. நான் சித்த மருத்துவம் பற்றி நாற்பத்தெட்டு நூல்கள் எழுதி உள்ளேன்.
சித்த மருத்துவத்தில் உணவியல் துறையே இருந்தது. அந்தக் காலத்தில் ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூல் இருந்தது. அந்த நூலில் சித்தர்கள் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் என்னென்ன மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். உப்புக்கு என்ன குணம், நீருக்கு, பாலுக்கு, தாய்ப் பாலுக்கு என்ன குணம், அரிசிக்கு என்ன குணம், உளுந்துக்கு என்ன குணம் என்று நாம் உண்ணும் உணவு வகைளுக்கு உரிய குணங்களை நுணுகி ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள். எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எந்த நோய் வராது என்றும் விரிவாக சொல்லியிருக்கிறார்கள். அந்நிய கலாச்சாரம் வந்த பிறகு சித்த மருத்துவத்தின் பூர்வாங்க தன்மைகள் அழிய ஆரம்பித்தது. அதனால் நோய்களும் அதிகமாக வந்தது. எனவே உணவுதான் முக்கியம். அந்த உணவை முதன்மையாக் கொண்டது சித்த மருத்துவம்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்று மருத்துவமும் இந்திய முறை மருத்துவம். இதில் திராவிடக் கலாச்சாரத்துக்கு உட்பட்டது சித்த மருத்துவம். அதாவது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா ஆகிய நான்கு மாநில மக்களின் அடிப்படை அம்சங்களைக் கொண்டது சித்த மருத்துவம். உண்மையில் தமிழர்களுக்கே உரியது சித்த மருத்துவம். சித்த மருத்துவ மருந்துகள் சித்தர்கள் தங்கள் தவ வலிமையால் கண்டறிந்த மருத்துவம். தன் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொண்டால் ஒரு நோயாளியே மருத்துவராக மாறும் வாய்ப்பு சித்த மருத்துவத்தில் உண்டு. ஆயுர்வேத மருத்துவம் வட இந்தியாவை அடிப்படையாகக் கொண்டது. ஆயுர்வேதத்தின் மூல நூல்கள் எல்லாமே சமசுகிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடைவெளி அதிகம் இருக்கும். பஸ்பங்கள், செந்தூரங்கள், மூலிகைகள், உப சரக்குகள் இவைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் இருக்கும். ஆனால் ஆயுர்வேதத்தை விட சித்த மருத்துவம் மேன்மையானது. யுனானி அரபு நாடுகளின் மூலிகைகள் கொண்டு செய்வது. இவைகள் போக இயற்கை மருத்துவமும் உண்டு. இது முழுக்க முழுக்க உணவை அடிப்படையாகக் கொண்டது.
டாபர், ஜண்டு, ஹிமாலயா போன்ற நிறுவனங்கள் எல்லாம் ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள். அவர்கள் நிறைய மருந்துகளை ஆராய்ந்து அதை மாத்திரைகளாக மாற்றி உலகம் முழுதும் விற்பனை செய்கிறார்கள். அதில் சில மருந்துகள் நல்ல பலனை தருகிறது. ஹிமாலயா தயாரிக்கும், உலகம் முழுதும் புகழ் பெற்ற சிஸ்டோ என்ற மருந்தின் முக்கிய மூலப் பொருள் நெருஞ்சி. அந்த நெருஞ்சில்தான் சிறுநீரகப் பையில் உள்ள கல்லை கரைக்கக் கூடியது. அந்த மருந்துகள் விலை அதிகம். அந்த நெருஞ்சிலை உணவுப் பொருளாக மாற்றலாம். அந்தக் காலத்தில் கிராமங்களில் நெருஞ்சி முள் கஞ்சி செய்வார்கள். நெருஞ்சி முள், சோம்பு, சுக்கு, சீரகம் இவைகளை நன்றாக இடித்து ஒரு துணியில் கட்டி அரிசியில் போட்டு நன்றாக வேகவைத்து பிறகு அந்த துணி மூட்டையை எடுத்து விட்டு அந்தக் கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு குணம் அடையும். இதைத்தான் மருந்துகளாக ஜண்டு, டாபர், ஹிமாலயா ஆகிய நிறுவனங்கள் செய்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் சில தன்னிறைவான மருந்துகள் தயாரித்து அவர்கள் தன்னிறைவாக இருக்கிறார்கள்.
இப்போது உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் ஒவ்வாமையாக (foodpaison) ஆகிவிடுகின்றன. இதற்குக் காரணம் மனிதர்களின் சோம்பேறித்தனத்தை பணமாக்கும் காரியத்தை சில உணவகங்கள் செய்வதுதான். ஒரு தோசை சாப்பிட்டால் நாற்பது ரூபாய். ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவுதான் தேவைப்படும். அதற்கு நான்கு விதமான சட்னிகள் வைப்பதால் அதற்காகவே தோசை சாப்பிடுகிறார்கள். ஒரு தோசை உடலுக்குத் தேவையான கலோரியை கொடுக்குமா என்று யாரும் எண்ணுவதில்லை. இட்லி, போண்டா போன்ற உணவுகளில் நமக்குத் தேவையான கலோரி கிடைப்பதில்லை. நாம் இப்போது அதிகமாக பத்து பதினைந்து உணவு வகைகளைத்தான் உண்கிறோம். ஆனால் ஐநூறு வகையான உணவுகள் உள்ளன. அந்தக் காலத்தில் வரகு அரிசி, குதிரைவாலி, சாமை அரிசி, மூங்கில் அரிசி, நாயுருவி அரிசி, கைக்குத்தல் அரிசி இப்படி பல்வேறு விதமான அரிசிகள் இருந்தன. ஆனால் இப்போது வெள்ளை வெளேர் என்று இலகுவாக உள்ளிறங்கும் அரிசி சாப்பிடுகிறார்கள். இதனால் எந்தவிதமான சத்தும் கிடைப்பதில்லை. உடனடி உணவுகள், உறையில் அடைக்கப்படும் உணவுகளை நாம் அதிகம் உண்பதால் –அந்த நேரத்துக்குத் தேவையான பசி அடங்குமே தவிர நமக்குத் தேவையான சத்து கிடைக்காது. எனவே நாம் சாப்பிடும் உணவு சரியானதாக இருந்தால் எந்த நோயும் வராது. மருந்துகளையும் மருத்துவரையும் விட்டு விலகி இருப்பதற்கு நாம் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ருசிக்கும், பசிக்கும் மட்டுமல்ல உணவு. நம் உடலுக்கு என்ன தேவையோ அதை உண்ண வேண்டும். கால்சியம் வேண்டுமா, இரும்புச் சத்து வேண்டுமா அதற்கு உண்டான உணவுகளை உண்ண வேண்டும். அதன் அடிப்படையில்தான் நாங்கள் மூலிகை உணவகம் தொடங்க நினைத்திருக்கிறோம். இது காலத்தின் கட்டாயம். வல்லாரை தோசை, தூதுவளை தோசை, முடக்கத்தான் தோசை, ஆவாரம்பூ சாம்பார் போன்ற உணவு வகைகளை ஒரு திரைப்படத்தில் காட்சியாக வைத்திருப்பார்கள். இது மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. எனவே மக்களின் மனதில் அடிநாதமாக ஓடிக்கொண்டிருப்பது உணவு முறையில் விழிப்புணர்வு வராதா என்பதுதான்.
வரகு அரிசி எப்படிப்பட்ட மூட்டு வலியையும் போக்கிவிடும். ஏன் அதை நாம் மீண்டும் விளைவித்து உண்ணக்கூடாது? இந்தியா ஒரு காலத்தில் உணவுப் பொருளில் தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது. ஆனால் இப்போது உள்ள நிலையைப் பார்த்தால் எதிர்காலத்தில் இந்தியா அரிசியை இறக்குமதி செய்யக் கூடிய நிலை வந்தாலும் வரும். எல்லாம் நகரமயமாதல்தான் காரணம். உறைகளில் அடைத்த உணவு வகைகளை சாப்பிடுங்கள், ஏன் சமைக்கிறீர்கள் என்று மேலை நாட்டு உணவு வகைகள் நம்மை ஆதிக்கம் செலுத்துகிறது. பீசா எப்போது வந்தது? அந்தக் காலத்தில் இருந்ததா? ஆனால் இன்று பீசா சாப்பிடும் தமிழர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான சத்து பீசாவில் கிடைக்குமா? இதற்கு மாற்று வேண்டாமா என்று யோசித்தபோது சித்த உணவுகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. உளுந்தை இட்லிக்குதான் பயன்படுத்த வேண்டும் என்று யாரும் சட்டம் போடவில்லை. அந்த உளுந்தை முளைக்க வைத்து சாப்பிடலாம். முளைத்த உளுந்தை அடையாக செய்து சாப்பிடலாம். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதற்கான மாணவர்களை நாங்கள் உருவாக்குகிறோம். சித்த உணவுகளை நாங்கள் தயாரித்து அதை மாணவர்களுக்குக் கொடுத்து – நோயாளிகளுக்கு இந்த உணவு தொடர்பான விழிப்பைக் கொடுத்து –உணவை மருந்தாகும் ஒரு கலையை நாங்கள் சொல்ல இருக்கிறோம்.
சீரகத்தை வைத்து ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தலாம். கையளவு சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் ஊற்றிக் குளித்தால் ரத்த அழுத்தம் சரியாகும். ஏன் இதை செய்யக்கூடாது? ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து உடலில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு ஊற்றினால் வலி போய்விடும். வரகு அரிசி, குதிரைவாலி, சாமை அரிசி, மூங்கில் அரிசி, கறுப்பு எள், கருஞ்சீரகம், உளுந்து, வெந்தயம் மணத்தக்காளி வத்தல், சுண்ட வத்தல் போன்றவைகளில் பல உணவு வகைகள் செய்யலாம். தண்ணீர்விட்டான் கிழங்கில் இட்லி செய்யலாம், அமுக்கலாங் கிழங்கில் குழம்பு செய்யலாம் இதுபோன்ற மூலிகைப் பொருள்களை எப்படி உணவுப் பொருளாய் மாற்றுவது என்று முன்னூறு வகையான உணவுகளை பட்டியல் போட்டு –தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உணவகம் கொண்டுவருவது என்று அதற்கான பணிகளை தமிழ்நாடு சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் செய்து வருகிறது. சித்த மருத்துவ, இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் ஆதரவு தந்தால் இதை உலகம் முழுக்க கொண்டுசெல்ல வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.
இத்தனை நன்மைகள் உள்ள சித்த மருத்துவத்தை வளர்க்க அரசாங்கம் அக்கறை எடுக்கவில்லை. மாறாக சித்த மருத்துவத்தை எப்படி ஒழிக்கலாம் என்று மத்திய அரசும், மாநில அரசும் குறியாக இருக்கிறது. இது முழுக்க உண்மை. ஆரிய மருத்துவமான ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் இந்தியா முழுதும் இருநூறுக்கும் அதிகமான கல்லூரிகள் உள்ளன. நம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் பாளையங்கோட்டை, சென்னை அரும்பாக்கம், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில்தான் உள்ளது. இதில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை அடிப்படை வசதிகள் இல்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறி கல்லூரியை மூடிவிட மத்திய அரசு முடிவு எடுத்தது. பல போராட்டங்களால் அந்த முடிவு நிறுத்தப்பட்டது.
பி.எஸ்.எம்.எஸ். (Bachler of Sidda Medicines And Surgary) ஐந்தரை ஆண்டு படிப்பை தமிழக அரசு உருவாக்குகிறது. ஆனால் இப்போது சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் செய்யலாம் என்று நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டது. பி.எஸ்.எம்.எஸ். படைத்த சித்த மருத்துவர்கள் என்ன செய்வார்கள்? ஆங்கில மருத்துவர்களின் நிலை வேறு. தனியாக மருத்துவமனை வைத்து முன்னேறலாம். ஆனால் சித்த மருத்துவர்கள் மக்களோடு மக்களாக வாழவேண்டும். பாரம்பரிய சித்த மருத்துவம் இல்லாததால், சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் செய்யலாம் என்ற நிலை வந்ததால் பட்டதாரிகளே இப்போது சித்த மருத்துவத்தை பயன்படுத்துவதில்லை, ஆங்கில மருந்துகளை கொடுத்து, அன்றாடம் ஐநூறு, ஆயிரம் வந்தால் போதும் என்ற நிலையை அரசே உருவாக்கி இருக்கிறது. ஒரு பக்கம் பாரம்பரிய சித்த மருத்துவர்களை ஒடுக்கிவிட்டு இன்னொரு பக்கம் சித்த மருத்துவ பட்டதாரிகளை ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதி அளித்த அரசு ஒட்டுமொத்தமாக சித்த மருத்துவத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. சித்த மருத்துவம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தரமான சித்த மருத்துவர்களைக் கண்டறிந்து –அவர்களின் திறமையை ஊக்குவித்து சித்த மருத்துவத்தை வளர்க்க இருக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார்கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667


செவ்வாய், 27 ஜனவரி, 2015

சித்த மருத்துவம்: தோற்றம்

உலகில் பல்வேறு இனங்கள் இருக்கும் போதிலும் அவர்கள் அனைவருக்கும் தனித்துவமான மருத்துவமுறை என ஒன்று இருக்கவில்லை, ஆனால் தமிழரின் பெருமையை நிலைநாட்டும் விதமாக சித்த மருத்துவம் என்பது தமிழர்க்கே உரிய மிகத் தொன்மையான மருத்துவ முறைகளுள் ஒன்றாகும். சித்தர்களின் தவ வலிமையால்,ஞானத்தால் கண்டறியப்பட்டதின் பேரில் சித்த மருத்துவ முறை என்று அழைக்கப்படுகிறது.
இதனை கண்டறிந்த விதம் மிகவும் சுவாரசியமானது. திருமூலர் ஒரு பாடலில் “அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என்று கூறுகிறார். எதுவெல்லாம் இவ்வுலகில் உள்ளதோ அதுவெல்லாம் நம் உடலின் வடிவில் உள்ளது, என்பதின் இலக்கணமாக சித்த மருத்துவம் விளங்குகிறது. ஒரு பொருளின் நிறம் வடிவம் தன்மை ஆகியவற்றை வைத்து அவை எந்த வகையான மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று அறிந்தனர். இதய வடிவில் உள்ள இலைகளான அரச இலை, வெற்றிலை இவற்றை இதய நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தினர். சிறுமூளை வடிவில் உள்ள வல்லாரை கீரையை நினைவாற்றல் மருந்தாகவும், நுரையீரலை ஒத்து இருக்கும் தூதுவளை இலையை சுவாசம் சார்ந்த கோளாறுகளுக்கு பயன்படுத்தினர்.
கீழா நெல்லி என்பது நம் உடலிலுள்ள பித்தப்பை வடிவில் இருக்கும், மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியை விடவும் சிறந்த மருந்து இல்லை என்று நவீன மருத்துவர்களே ஒப்புக் கொள்கின்றனர். அதே போல் கணையத்தை ஒத்து இருக்கும் நாவல் விதை இன்சுலின் சுரப்பு குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாகும்.இது போல பல நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன [அக்காலத்தில் இதய, கணைய வடிவம் இன்னதென எப்படி தெரியும் என்று கேட்பவர்களுக்கு தெரிவிப்பது; அன்றே நாம் ஒட்டு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் உடல்கூறு, உடலியல் ஆகியவற்றில் வல்லமை பெற்றிருந்தோம்].
நம் சித்த மருத்துவ முறை பண்டைய காலத்தில் தென்னாடு எனப்படும் தற்கால தமிழ் நாடு கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் ஆகிய பகுதி முழுவதும்பரந்து விரிந்து இருந்தது.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் பறக்கும் சித்து வல்லமை பெற்றவர். சித்தர்கள் அஷ்டமா சித்து எனப்படும் எட்டு வகை சித்துக்களில் ஏதேனும் ஒன்று கொண்டிருப்பர் அவை அணிமா- உடலை அணு அளவில் சுருக்குதல், மகிமா- உடலை மலைபோல் பெரிதாக்கல், கரிமா- திடப்பொருளாக மாற்றல், இலகிமா- பறவை பொல இலகுவாகி பறத்தல், ப்ராத்தி- தேவையானவையை அடைதல், ப்ரகாமியம்- இயற்கையை வென்று எங்கும் போகும் திறன், ஈசாத்துவம்- உருவாக்கல் காத்தல் அழித்தல் , வசித்துவம்- வசிகரித்தல். அதன் மூலம் போகர் இலகிமா சித்தைக்கொண்டு அக்காலத்திலேயே சீனம் வரை சென்று மூலிகைகளை கொண்டு வந்து இருக்கிறார். மேலும் சில ரச வாதங்களை கொண்டும் மருந்திட்டு உள்ளார். ஒன்பது மூலிகை மருந்துகளை கொண்டு பழனி முருகன் சிலையை வடித்திருக்கிறார்.இப்படி அக்காலத்தில் பல எல்லைகளைத் தொட்டு சித்தர்களின் பல ஆய்வுகளினூடே உருவாக்கப்பட்ட சித்த மருத்துவத்துக்கு இன்று பெரும்வாரியான முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
அறிவியல் என்ற போர்வையில் வந்த நவீன மருத்துவத்தின் தாக்கத்தால் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வுக்குட்பட்டு கண்டறியப்பட்ட சித்த மருத்துவமுறை புறம் தள்ளப்பட்டு அறிவியல் முறையிலான ரசாயன மருந்துகள் வழங்கப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சித்த மருத்துவம் அழிந்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் மேற்கத்திய கலாச்சாரத்தின்தாக்கத்திற்கு நாம் அடிமை ஆகி வருவதே ஆகும். ஏனெனில் சித்த மருத்துவத்தின் மூலக்கரு “எது நமது உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும்” என்பதே.
ஆனால் நம்மில் பலர் மேற்கத்திய ருசிக்கு அடிமைப்பட்டு அந்நிய உணவுகள் என்ற வகையில் பிட்சா , பர்கர் , குளிர்பானம்,செயற்கை வளர்ச்சி கோழி போன்ற இயற்கையை விட்டு விலகிய உணவுகளை அருந்த தொடங்கியதின் காரணமாக நம்மை அறியாமலே நம்முள் நோய்கள் பல விதைக்கப் படுகின்றன. மேலும் உடற்பயிற்சியின்மையும் நோய்கள் உருவாக ஒரு முக்கிய காரணமாகின்றது. பின்பு அதற்கு ஆங்கில மருத்துவத்தையும் நாடுகிறோம்.எந்த ஒரு நோயும் ராம் கோபால் வர்மா படம் போல ஒரே வாரத்தில் வந்துவிடுவதில்லை, அது நமது ஷங்கர் படத்தை போல பல ஆண்டுகள் எடுத்து மெல்ல மெல்ல உடலில் புகுந்து ஒரு நோயாக உருவெடுக்கிறது. எந்தொரு நோய் வந்தவரின் முந்தைய மூன்று ஆண்டுகால வாழ்வை ஆராய்ந்தாலும் இந்த உண்மை புரியும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார்கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667

திங்கள், 26 ஜனவரி, 2015

சித்த மருத்துவம் - சித்த மருத்துவர் அருண் சின்னையா

1. கண் எரிச்சல் தீர:
நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும்.
2. ரத்தக்கொதிப்பு குணமாக:
நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
3.தொண்டைக் கட்டு நீங்க:
சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும்.
4. சுளுக்கு வலி தீர:
புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும்.
5.நரம்பு பலம் பெற:
சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
6. வயிற்றுப்புண் தீர:
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டு செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
7.வயிற்றுவலி குணமாக:
அகத்திக்கீரையை நன்கு  வேக வைத்துத் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.
8. இடுப்புவலி தீர :
வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி குணமாகும்.
9. உடல் பருமன் குறைய:
பொன்னாவரைக் கீரை விதையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
10. முடி நன்கு வளர:
காரட், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர முடி நான்கு வளரும்.
வாழைக்குறுத்தைப் பிரித்துச் சுட்ட தீப்புண் மீது கட்டினால் தீப்புண் கொப்பளங்கள் குணமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார்கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667சனி, 24 ஜனவரி, 2015

சர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் – சித்த மருத்துவர் அருண் சின்னையா

அந்தக்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய உணவு என்பது மிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக இருந்தன. அது போல் உணவுகளுக்குத் தகுந்த உழைப்பு அன்று இருந்தது. இன்று பற்பல இயந்திர வருகைக்குப் பின் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்து போய், இன்று மூளைக்கு வேலை கொடுக்கும் அளவில் பணிகள் மாறிப்போனதால் உணவின் மூலம் பெறப்பட்ட கலோரித் திறனை எரிக்கக்க்கூடிய தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்து போய் விட்டது.
அதுபோல் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுவதும், ருசியின் அடிப்படையிலேயே இன்று உணவுகளை உண்பதுமான சீரழிவு நம்மிடையே புகுத்தப்பட்டதின் விளைவால் நம்மால் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண முடியாத சூழல் உருவாகிவிட்டது. அதில்லாமல் இன்று எதுவெல்லாம் சுவையாக இருக்கிறதோ அதை மட்டும் சாப்பிடுவதால் இன்று நீரிழிவு என்பது இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலிடம் எனக் கூறக்கூடிய அளவிற்கு அபாரமாக வளர்ந்து இன்று ஒவ்வொரு மனிதனையுமே நடைப்பிணமாக மாற்றக் கூடிய அளவிற்கு மாறிவிட்டது.
ஒரு காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது கிராமங்களில் பார்ப்பது மிக அரிதாக இருக்கும். இன்று அந்தக் கிராமங்களுக்கு அருகில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே மாதக்கணக்கில் மருந்து வாங்கக் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகரித்து விட்டது. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும்போது நகர்ப்புறத்தில் எடுக்கக் கூடிய உணவுகளையே இன்று கிராமத்து மக்களும் எடுத்துக்கொள்வதால், நகர்ப்புறத்திற்கு இணையான நோயும் நொடியும் பல்கிப்பெருகி விட்டது. அதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் உடல் நலம் பெற்ற, வீரம் செறிந்த இளைஞர்களைப் பார்ப்பது மிக அரிதாகி விட்டது.
என்னென்றால், சமீபத்தில் சர்க்கரை நோய் ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும் இன்று இதயநோயின் பாதிப்பு தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும் போது பெரும்பாலும் இதயநோய் தனியாக வருவதில்லை. உடல் நலம் என்பது ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், ரத்தம் கெட்டுப்போகாத நிலையில் இருக்கும் போதும், கல்லீரல் ஒழுங்காக வேலை செய்யும் போதும், சிறுநீரகம் சரியாக வேலை செய்யும் போது இதயம் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் வருவது கிடையாது.
அதுபோல் இதயநோய் என்பது ஒரே நாளில் உருவாகி விடுவதும் கிடையாது. பெரும்பாலும் பார்த்தோம் என்றால் சர்க்கரை நோய் இருக்கக் கூடிய நோயாளிகளுக்கு, இந்த நோயினால் பாதிப்பு அதிகமானால் இதன் சார்பு நோயாக இதய நோய் வரும். சர்க்கரை நோய் வந்தால் உணவுக்கட்டுப்பாடு வேண்டும். ஆனால் ஒரு நோய் வந்த பின்புதான் எதுவெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறோமோ அதை எல்லாம் சாப்பிடக்கூடிய எண்ணம் இங்கு அனைவருக்கும் இருக்கிறது.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிச்சயமாக இதய நோய் வருவதற்கான கூறுகள் அதிகம் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றால் ஒரு சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் உணவில் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் அளவை முழுமையாகக் குறைக்கும் போதுதான் இது மற்ற பரிமாணமாக மாறாது.
அதிகபட்ச மாவுச்சத்தை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடும் போது நம் உடல் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். இதை ”லிபிட் புரோபைல்“ என்று கூறுவார்கள். அந்த லிபிட் புரோபைலில் டிரை கிளிசரைட்ஸ் என்ற சத்து அதிகமாகி விடும். ஒரு மனிதனுக்குச் சராசரியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டிய டிரை கிளிசரைட்ஸ் அளவு 150 –க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த 150 அளவை விட அதிகமாக மாறும் போதுதான் இதயத்திற்குச் செல்லக் கூடிய ரத்தக்குழாய்களில் இந்தக் கொழுப்புப் பரிமாணம் அதிகமாகி இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ஆக சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் கண்டிப்பாக இதயநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால் எச்சரிக்கையாக உணவு விசயத்தில் இருக்க வேண்டிய காலம் இது. சர்க்கரை நோய் வந்தது என்றால் இந்த நோயை மட்டுமே கட்டுப்படுத்துவது பிரச்சனை இல்லாமல் இருக்கும். சர்க்கரை நோயின் சார்பு நோய்கள் என்று பார்க்கும் போது இதயநோய்க்குத்தான் முதலிடம்.
அடுத்து சிறுநீரக நோய், கல்லீரல் நோய், கண்பார்வைக் கோளாறு, பாத நரம்புகள் மரத்துப்போவது, அதாவது கேங்கரின் என்று சொல்லக்கூடிய புண் காலில் வரும். அதன் பின் கண்ணில் ஹைப்போ கிளேசீமியா என்ற நோய் வரும். ஆக இந்தப் பிரச்சனை எல்லாம் சர்க்கரை நோயினால் வரக்கூடியது. சிலருக்கு இந்த சர்க்கரை நோயினால் மேலும் பக்கவாதம் வரலாம், ரத்த அழுத்தம் வரலாம். இவ்வளவு நோய் வரும் எனக் கூறுவது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல. நம்மை முன்னெச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தே இதைக்கூறுகிறேன். ஆக உணவுகளை ஒழுங்கு செய்தால் இந்தப் பிரச்சனைகளை நாம் சரி செய்யலாம்.
ஒரு வேளை சர்க்கரை நோய் வந்தவருக்கு இதயநோய் வந்துவிட்டது என்றால் அப்போது சர்க்கரை நோயாளி எப்படி எல்லாம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? என்பதைப் பார்ப்போம். இன்று தமிழகத்தில் எதையும் தாங்கும் இதயத்தோடு இருந்த தமிழர்களுக்கு இதயநோய் வந்துவிட்டது என்றால் கூனிக்குறுகி வீட்டிலேயே முடங்கக்கூடிய சூழலை இன்றைய மருத்துவ உலகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
ஏன் அப்படி என்றால், இதய நோய் வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதன் அடர்த்தி சீராக இருக்க வேண்டும் என்பதற்காக சில ஆங்கில மருந்துகளை, வாய்வழி மருந்துகளை கொடுத்துப் பழக்கப்படுத்திவிடுகிறார்கள். இன்றைய கால நவீன மருத்துவர்கள் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது உணவின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும். உணவின் அவசியத்தை எடுத்துக்கூறாமல் இட்லி, பொங்கல், பூரி, எண்ணெயில் வறுத்ததைச் சாப்பிடலாம். ஆனால் நாங்கள் கொடுத்த மருந்தை எல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.
ஒரு நோய் ஒரு மனிதனுக்கு வருகிறது என்றால் கண்டிப்பாக உணவு ஒவ்வாமையால் மட்டும் வருமே தவிர வேறு எதனாலும் வரக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அதற்கடுத்து மருந்துகளினாலும் சில நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அது என்னவென்றால் உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இதயநோயாளிக்கு சிகிச்சை அளிப்பது கூடாது. உணவைப் பிரதானப்படுத்தி மருந்தின் அளவைக் குறைக்கும் போது இதய நோய்களைச் சரி செய்ய முடியும். அதனால் சர்க்கரை நோய் வந்து  இதயநோய்க்கு ஆட்பட்ட அன்பர்கள் கண்டிப்பாகத் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு என்ன மாதிரியான உணவுகள் எடுக்கலாம் என்று பார்க்கும் போது தினசரி ஒரு கீரையை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகளில் நல்ல நார்ச்சத்து இருக்கிறது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அது போல் இந்தக் கீரைகளில் “குளோரோபில்” என்று சொல்லக்கூடிய ஒரு சத்து உண்டு. இச்சத்து இதயநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. அதற்காக இதய நோய் வந்துவிட்டது என்றால் நிறைய மருந்துகள் எடுக்க வேண்டும். இந்த மருந்துகள் எடுத்துக்கொண்டு மருந்து கூடவே அடிமைத்தனமாய் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நம் உடலுக்கு நோய் என்று வந்த பின்பு பகுத்துப் பார்க்கக் கூடிய தன்மை நமக்கு வரவேண்டும். நமக்கு நாமே இதைச் சுய பகுப்பாய்வு செய்து பார்த்தோமானால் மருந்துகளிலிருந்தும், மருத்துவர்களிடமிருந்தும் நிச்சயமாக விடுதலை பெறலாம். அதற்காகத்தான் நாம் நிறைய உணவுகளைப் பற்றியே பேசுகிறோம். அதனால் இதய நோயாளிகளுக்கு நாம் பட்டியலிடக் கூடிய தமிழர் உணவுகள், தமிழர்கள் பயன்படுத்திய சித்தர், உணவியல் மருந்துகள் என்னென்ன? என்பதைப்பற்றி இனி பார்ப்போம்.
நம் இதயம் எப்போதுமே உணர்ச்சிகரமானது, மிகவும் மென்மையானது, எந்த அதிர்ச்சியையும் தாங்க முடியாத நிலை கொண்டதே இதயம். அதனால்தான் மன உளைச்சல், மன அழுத்தம், இருந்தால் முழுமையாக பாதிக்கப்படுவது இதயமே. நல்ல நண்பன் நமக்குத் துரோகம் செய்தாலோ, குடும்பச்சிக்கலினாலோ, எதிர்பாராத தோல்விகளினாலோ, முழுமையாகப் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு எதுவென்றால் இதயம் தான். அவ்வளவு உணர்ச்சிமிக்க இதயத்திற்கு, சித்தர்கள் உணர்ச்சிவசமான மருந்துகளை அந்தந்தக் காலத்திலேயே கூறியிருக்கிறார்கள்.
அந்த மருந்துகள் என்னவென்றால் ‘மான்கொம்பு பஸ்பம்’ என்ற ஒன்று உண்டு. தவிர “சிறுங்கி பஸ்பம்” என்றும் உண்டு. இந்த சிறுங்கி பஸ்பமானது  மானின் கொம்புகளில் இருந்து எடுக்கக்கூடிய மருந்தாகும். அதாவது மானின் கொம்பை நறுக்கி இதனுடன் அகத்திக்கீரைச்சாற்றைப் போட்டு நன்கு அரைத்து துவையல் மாதிரி செய்து, இதை ஒரு மண்பானையில் வைத்து, இந்த மண்பானை மேல் ஒரு மண் பானையை கவிழ்த்து, இதைத் துணியால் நன்கு சுற்றி, சாண எருவை அடுக்கிய பின் இதில் அப்பானையைப் புடம் போடுவர். இதன் பின் உள்ளிருக்கும் மான்கொம்பு பஸ்பமாக மாறிவிடும். இது சித்த மருத்துவத்தில் உள்ள மிக அருமையான ஒரு மருந்து சிறுங்கிப் பஸ்பமாகும்.
மான்கொம்பில் இருக்கக்கூடிய சுண்ணாம்புச்சத்தை (கால்சியம்) மருந்தாக மாற்றி உடலில் இருக்கும் சூட்டைத் தணிக்கும் அகத்திக்கீரையால் அரைத்து இதை மருந்தாக மாற்றி தினசரி இரண்டு வேளை சிட்டிகை அளவு காலை, இரவு வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ஒரு முழுமையான பலன் கிடைப்பதோடு இதயம் பலம் பெரும் என்று சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
ஏன் மாட்டுக்கொம்பில் சித்தர்கள் பஸ்பம் செய்திருக்கலாம் அல்லது பிற மிருகங்களின் கொம்புகளில் இருந்து சித்தர்கள் இதைச் செய்திருக்கலாமே! ஏன் மான்கொம்பில் செய்தார்கள்? என்று நீங்கள் நினைக்கலாம். இந்த மானை ஏன் சித்தர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் மான் ஒரு உணர்ச்சிப் பூர்வமான விலங்கு. ஆபத்து நேரத்தில் மிக வேகமாய் ஓடக்கூடிய தன்மை உண்டு. ஆனால் இந்த மானை ஒரு இடி இடித்தால் கூட சில வேளைகளில் இறந்துபோகும் வாய்ப்பு உண்டு. அதனால் இந்த உணர்ச்சியுள்ள மானின் கொம்பில் உள்ள சுண்ணாம்புச்சத்தை எடுத்து இதயத்தை வலுவாக்குவதற்காக சித்தர்கள் பஸ்பமாக மாற்றிக் கொடுத்தார்கள்.
இன்று நவீன ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒரு முறை என்னவென்றால் இதயத்தைத் தாங்கியிருக்கக்கூடிய, அதாவது இதயத்திற்கு வெளிப்புறமாக இருக்கக்கூடிய, பெரிக்கார்டியம் என்று சொல்லக்கூடிய இதய உறையானது பழுதுபடாதவரை இதயத்திற்கு எந்தப்பாதிப்பும் கிடையாது. இந்தப் பெரிக்கார்டியம் என்பது முழுக்க முழுக்க சுண்ணாம்புச்சத்தால் நிறைந்த ஒரு உறுப்பு. அதனால் இந்தப் பெரிக்கார்டியத்தைப் பாதுகாக்கக்கூடிய தன்மை எதற்கென்றால் மானின் கொம்புகளுக்கு உண்டு. அதனால் சிறுங்கிப் பஸ்பம் என்பது இன்றைக்கும் உலகளாவிய அளவில் சித்தமருத்துவத்தை, சித்தஉணவியல் மருத்துவத்தை முழுமையாக நம்பக்கூடிய நம் தமிழர்கள் நிச்சயமாக அருந்தி வருகிறார்கள்.
இது கூடவே சித்த மருத்துவத்தில் ‘ஏலாதி சூரணம்’ என்பர். ஏலாதி என்றால் ஏலக்காயைப் பிரதானப்படுத்திப் பண்ணக்கூடிய ஒரு சூரணமாகும். இந்த ஏலாதி சூரணத்தையும், சிறுங்கிப் பஸ்பத்தையும் வைத்துச் சாப்பிடும் போது எப்படிப்பட்ட இதய நோயாக இருந்தாலும் முழுமையாகக் குணமாகிறது. தற்போது எடுத்ததெற்கெல்லாம் ஆஞ்சியோ பண்ணுவது, பைபாஸ் சர்ஜரி பண்ணுவது இதெல்லாம்விட, சுயமாக நம்மை நாமே பரிசோதித்துக் கொண்டால் பல மருந்துகளை நாம் தவிர்க்க முடியும்.
ஆகையால் தான் நம் இதயம் மிக உணர்ச்சிப்பூர்வமான உறுப்பாகும். அப்போது அறிவானது எது என்று பார்த்தோமானால் உலகத்தில் மலர்ந்து கிடக்கின்ற அத்தனை மலர்களும் உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடியது. ஒரு அழகான மலர் பூத்துக்குலுங்கினால் “வா என்னைப் பார்” எனச் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கும். ஒரு நந்தவனத்தில் நாம் நடந்து செல்லும் போது பல மலர்களைக்கண்டு நாம் இதமாகிப் போகிறோம். அதனால் இந்த பூக்களே மருந்தாகும் பொழுது இதயம் வலுவடையும் எனச் சித்தர்கள் அறிந்தனர்.
இதனால் சித்தர்கள் கமலம் என்று அழைக்கக்கூடிய தாமரைப் பூவை இதய நோய்க்குத் தேர்ந்தெடுத்தனர். இந்தத் தாமரைப்பூவிலிருந்து செய்யக்கூடிய கசாயமானது இதயத்தை வலுப்படுத்தும். தவிர ஆவாரம் பூ, ரோஜாப்பூ தாமரைப் பூ, செம்பருத்திப் பூ இந்த நான்கு பூக்களையும் சம அளவு எடுத்து அதாவது 50 கிராம் அளவு எடுத்து இதனுடன் 10 கிராம சுக்கு, 10 கிராம் ஏலக்காய் சேர்த்து தினசரி டீத்தூள் போல செய்து சாப்பிட்டோம் என்றால் இதயம் வலுவாகும்.
இந்தப் பூக்களிலும் சுண்ணாம்புச்சத்து  எனச் சொல்லப்படும்  கால்சியம் உண்டு. எப்போதுமே ஒரு மனிதனுக்குப் போதுமான அளவு கால்சியம் இருந்தால்தான் அவர்கள் முகத்தில் ஒரு சிரிப்பைப் பார்க்க முடியும். இந்தச்சத்து குறைவானால் சிரிப்பு சுருங்கிவிடும் என கிராமங்களில் கூறுவர். உடலில் உள்ள எலும்பு தனது வன்மையை இழந்துவிட்டது என்றால் நிச்சயமாக மனிதனின் மகிழ்ச்சி குறைந்து விடும். அதனால் மனிதர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் இருக்க வேண்டும். அதே நேரம் இதயம் நன்றாக இருக்க வேண்டும். இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதயத்தைச் சுற்றி உள்ள சுண்ணச்சுவர் நன்றாக இருக்க வேண்டும். இந்தச் சுண்ணச் சுவரை ஒழுங்குபடுத்தக்கூடிய தன்மை பூக்களுக்கு உண்டு. அதனால் இந்தக் கசாயத்தைத் தொடர்ந்து சாப்பிடும்பொழுது அற்புதமான பலன் கிடைக்கும்.
அதனால் பூக்களிலிருந்து கிடைக்கக் கூடிய சுண்ணாம்புச் சத்தால் இதய உறை பாதுகாக்கப்படுவதால் இதயம் வலுவடையும். எந்த ஒரு மனிதனுக்கு இதயவலு இருக்கிறதோ அவனால் தான் தீர்க்கமான சிந்தனையைப் பெற முடியும். இந்த தீர்க்கமான சிந்தனையைச் செயல்முறைப்படுத்தினால் அதற்கு இதயவலு கண்டிப்பாக வேண்டும். அதற்காக இதயத்திற்கு வலு சேர்க்கும் உணவுகளில் பூக்களுக்கு முக்கியப்பங்கு உண்டு. பண்டைய தமிழர்கள் உணவில் பார்த்தோமென்றால் செம்பருத்திப்பூ பருப்புக்கஞ்சி உண்டு.  செம்பருத்திப்பூ  இதயத்திற்கு நல்லது என்று இன்றைய நவீன விஞ்ஞானம் ஒத்துக்கொண்டுள்ளது. அதனால் இந்த செம்பருத்திப் பூவையும், சிறு பருப்பையும், அரிசியையும் போட்டு பருப்புக்கஞ்சி போல செய்து சாப்பிட்ட தமிழ்ச் சமூகம் இருந்தது.
அது போல உணவுகளை உண்ணும்போது உணர்ச்சிப்பூர்வமான வாழ்க்கை வாழ்ந்தனர். அன்று பார்த்தோமானால் ஒரு காலகட்டத்தில் ஒரே வீட்டில் 15 பேர் உட்கார்ந்து உண்ட கூட்டுக்குடும்ப அமைப்பு இருந்தது. இன்றைக்கு ஒரு நான்கு பேர் ஒரு குடும்பத்தில் இருந்தால் கூட ஒற்றுமையாக இருக்க முடியாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. அந்தக்காலத்தில் கூட்டமைப்பு முறையில் குடும்பங்கள் இருந்ததால் நிறைய திருவிழாக்கள் நடந்தது. இந்தத் திருவிழாக்கள் அவர்களின் மழுங்கிப்போன உணர்ச்சிகளை கூர்மைப் படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே இருந்தது. இன்றைக்குப் பார்த்தோமானால் தமிழ்நாட்டில் திருவிழாக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்து மனிதர்களின் உணர்ச்சிகள் மழுங்க ஆரம்பித்துவிட்டது.
அன்று திருவிழாவின் போது வீடுகளில் பலகாரம் சுடுவார்கள். எங்க வீட்டில் பனியாரம், அதிரசம் போட்டாங்க, உங்க வீட்டில என்ன பலகாரம்? என்று பகிர்ந்துகொண்டு உண்பார்கள். அதுபோல் கிராமத்தில் கூட்டஞ்சோறு ஆக்கி கூடிச்சாப்பிடுவர். இது போல் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் முறையின் போது உணர்ச்சிகள் பரிமாறப்பட்டது. இன்று இந்த உணர்ச்சிகள் பரிமாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்துபோன காரணத்தினால் அவனது வாழ்க்கைப் பாதை மாறி இதயநோய் வரக்கூடிய வாய்ப்பும் அதிகமாகிப்போனது. அதனால் உணர்வுரீதியான பகிர்வு இங்கே வேண்டும்.
இந்தப் பூக்களை மருந்தாக எடுத்துக்கொள்ளக்கூடிய மக்கள் கண்டிப்பாக உணர்ச்சியோடு இருப்பார்கள். இவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்களும் வராது. அதுபோல் உணவுகளில் உளுந்தங்களி, வெந்தயக்களி இதில் உள்ள சுண்ணாம்புச்சத்தை எவனொருவன் மருந்தாக மாற்றுகிறானோ நிச்சயம் இதயவலுவோடு இருக்கலாம். நம் உடலுக்கு உளுந்தானது திடகாத்திரமான உணவாகும். இந்த உளுந்தை பலர் இன்று இட்லிக்கும், தோசைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தவிர உளுந்தை இன்று கடுகோடு சேர்த்து தாளிக்கின்ற ஒரு பொருளாக  மாற்றிவிட்டோம். இந்த உளுந்தை என்று நாம் பிரதான உணவாக மாற்ற ஆரம்பிக்கிறோமோ அன்று தேகக்கட்டு வரும். எலும்பு முறிந்தால் கூட நாட்டுக்கோழி முட்டையையும், இந்த உளுந்தையும் வைத்து உடலில் பத்துப்போடும் போதுதான், உடைந்த எலும்பு கூட, கூடும் தன்மை வருகிறது.
அப்போது ஏன் நாம் உளுந்தை உணவாகச் சாப்பிடக் கூடாது? அதனால் இதய நோய்க்கு மற்றொரு மருந்தே உளுந்து. சித்தர்கள் உளுந்துச் சோற்றை உளுந்தோதனம் என்று கூறுவர். நான்கு பங்கு அரிசியும், ஒரு பங்கு உளுந்தும், கொஞ்சம் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு உளுந்துச் சோறாக  வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து இதயநோயாளிகள் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் இதய நோய் முற்றிலும் குணமடையும்.
தவிர ஒரு மரத்தின் அபரிமிதமான சத்துக்கள் எல்லாம் மரப்பட்டையில் தேக்கி வைக்கப்படும். இந்தப் பட்டைகள் எல்லாமே துவர்ப்பானது. அதனால் மருதம்பட்டை, ஆவாரம் பட்டை இந்த இரண்டு பட்டையையும் கொதிக்க வைத்துத் தொடர்ந்து சாப்பிடும் போது சர்க்கரை நோயும் கட்டுப்படும். அதே நேரம் இதய நோயும் குணப்படும்.
சர்க்கரை நோயோடு இதயநோயும் சேர்ந்தது என்றால் மனிதனின் முழுச்செயல்பாடும் தடைபடும். வெளியூருக்குத் தானாக போக முடியாது. ஒரு பயம் தானாகவே கவ்விக்கொள்ளும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயநோய் வந்தது என்றால் அவரின் நரம்புகள் பலகீனப்படும். ஆகையால் நரம்பு பலகீனப்படும்போது நேர்மறை சக்தி முழுமையாகக் குறையும். அதனால் அவரால் கூட ஒரு காரியம் ஆற்ற முடியாது. அடுத்தவர் உழைப்பில் எப்படி முன்னேறலாம் என்ற குறுக்குப் புத்தியும் வரும்.
ஆரோக்கியமாக இருக்கும் மனிதரால்தான் ஆரோக்கியமாகச் சிந்திக்க முடியும். ஆரோக்கியமான சிந்தனையால்தான் ஆரோக்கியமான சமூகத்தை நாம் உருவாக்க முடியும். அதனால் இதயநோய் வந்துவிட்டது என்றால் பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், இன்று இருக்கும் நவீன மருத்துவர்களிடம் சென்று அடிமையாகாதீர்கள். உங்கள் உணவை சீர்படுத்துங்கள். ஏனென்றால் இந்தியாவிலேயே (கிரானிக் டிசீசஸ்) எனப்படும்  தீராத நோய் விதைக்கப்படுகிறது. இதைத்தான் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன்.
நவீன மருத்துவம் என்ற போர்வை நம் மக்கள் மீது போர்த்தப்படுகிறது. அங்கே நம் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. இதயநோயாளிகளுக்கு விற்பனையாகக்கூடிய மருந்துகளைப் பார்த்தீர்கள் என்றால் வெளிநாடுகளில் இருந்து இங்கே முதலீடு செய்து பண்ணக்கூடிய மருந்துகளாக இருக்கும். இந்த மருந்துகளை எல்லாம் நாம் கூட்டம் கூட்டமாகச் சென்று வாங்கும் பொழுது நிச்சயம் நம் நிதி ஆதாரம் நவீன மருந்துகளால் கொள்ளையடிக்கப்படும்.
இச்சூழலில் பழைய பாட்டி வைத்தியம் ஏன் வரக்கூடாது. ஒரு அஞ்சறைப் பெட்டியிலேயே முழுமையான மருத்துவத்தைப் பார்த்த சமூகத்திலே நாம் பிறந்து வளர்ந்தவர்கள்.  சித்தர்கள் சொன்ன சித்த மருந்துகளை மீண்டும் நாம் உயிர்ப்பித்து பயன்படுத்த வேண்டும். நான் கூறிய ஏலாதி சூரணம், தாலிசாதி சூரணம், பஞ்ச தீபாக்னி சூரணம், சிறுங்கி பஸ்பம் இந்த நான்கு விதமான மருந்துகளை உண்டாலே இதயநோய் சரியாகிவிடும்.
அதுபோல் நெல்லிக்காய் லேகியம், தேத்தாங்கொட்டை லேகியம், வெள்ளைப்பூசணி லேகியம் இந்த மருந்துகள் அபரிமிதமான பலன் தரக்கூடியது. இதயநோய் வந்தது என்றால் இதயத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்நோய் வந்தால் ஒரு வேளை உணவு கீரை கஞ்சியாக இருக்க வேண்டும். ஒரு வேளை உணவு கீரையோடு சேர்ந்த அரிசி உணவாக இருக்க வேண்டும். இதுபோல் உண்ணும் போது நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயால் இதய நோய் வந்தது என்றால் சர்க்கரையையும் குறைக்க வேண்டும், முழுமையான உணவுக்கட்டுப்பாடும் வேண்டும். உணவில் நிறைய நார்ச்சத்துகள் உணவை எடுக்க வேண்டும். நார்ச்சத்து உணவு எதுவென்று பார்த்தோமானால் பண்டைய தமிழர் பயன்படுத்திய வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், வெள்ளைச்சோளம், கேழ்வரகு இவை எல்லாம் அற்புதமான பலன் உள்ள சிறு தானியங்களாகும். இந்த மாதிரியான உணவுகளை தொடர்ந்து எடுங்கள். நான் கூறிய மருந்துகளையும் விடாமல் எடுங்கள். கண்ட நவீன மருந்துகளை உண்பதை நீக்கிவிட்டு சுயசிந்தனையோடு யோசித்து செயல்படுங்கள். எளிமையான வேலைகளைச் செய்யுங்கள், இலகுவாக இருங்கள், இதன்படி இருந்தால் இதயநோயோடு சர்க்கரை நோயையும் வெல்லலாம். மறுபடியும் தமிழர்கள் நோயின்றி நல்ல வாழ்க்கை வாழலாம் நன்றி.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார்கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667

வெள்ளி, 23 ஜனவரி, 2015

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் - சித்தமருத்துவர் - அருண் சின்னையா

வணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு  நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்? இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இப்போது நாம் எதைப்பற்றி பேசப் போகிறோம், என்றால் சர்க்கரை வியாதி நோயைப்பற்றியே. சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது  . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால்  மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள்.  உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த  உணவின் மூலம்  பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள்  ஆட்படுகிறார்கள்       என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று.  இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும்  பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது  மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள்  இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates  என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த  அரிசியையே  தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
 இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.
இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள் என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய்:
அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.
அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது.  நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக் கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக் கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :
அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
அன்றைய மது மேகத்தில் சித்தர்கள் சொன்ன உணவுகள் எல்லாம் இதுதான். சித்தர்களுடைய விஞ்ஞான பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லாம். அதாவது அன்றைய காலத்தில் மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்தி கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ போன்றவைகளையே மருந்தாகக் கொடுத்தனர். என்ன இது எருமை மாடு சாப்பிடுவதை மருந்து எனச்சொல்கிறாரே என்று நினைத்தால் அது தவறு.
இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய் பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு  மாத்திரையால் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால் பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம்  இந்த இரண்டு கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு மருந்தாகச் செலுத்தினார்கள்.
இப்பொழுது DNA கூட்டமைப்பு உள்ள human Insulin இன்று உலகம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது, பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலேயும், கோரைக் கிழங்கிலேயும், எள்ளுப் புண்ணாக்கிலேயும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்து அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்- ஐ முழுமையாகக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
அதனால் தான் இன்றும்  எனது கிராமத்தில் சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால் நீரிழிவால் வரக்கூடிய  கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. அதில் தங்கத்தின் சத்து இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் இப்பூவை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அதில் தங்கத்தின் கூறுகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால்  சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க முழுக்க உண்மை.
இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை  நாங்கள் கண் கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள்  என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின் ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும் பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது  மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு  சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை  மென்மைப் படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட் சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
 அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து ,  அதிக சோடியம் சத்து ஆகியவை   அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது.  இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால்  இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை  நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய  வரியே இதற்குக் காரணம் ஆகும்.
 இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு  இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக் கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது. அதனால் இந்த  சார்பு நோயைப் பற்றி இன்னும் விளாவரியாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம். நான் மறுபடியும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி, வணக்கம்.
                                                                          - தொடரும்

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார்கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667