சனி, 28 பிப்ரவரி, 2015

பருப்புகீரை அடை

கோடையில் ஊருக்குப் போகுமுன் தொட்டிகளில் அறுவடையான பருப்பு கீரைக் குச்சிகள்தான் இருந்தன. திரும்பி வந்து பார்த்தால் .... வாவ் ! எங்கும் படர்ந்திருந்தது.
அடுத்தடுத்து சில தடவைகள் பறித்தேன். விதை விழுந்து குட்டிகுட்டிச் செடிகள் முளைத்துக் கொண்டே இருந்தன. சந்தோஷமாக இருந்தது. பின்னே இருக்காதா ? ஒரு சிறு கட்டு $ 2:00 க்கு வாங்குவேனாக்கும்.
அதன்பிறகு குருவிகள் வந்து குத்தாட்டம் போட்டு, முளைத்து வரும் துளிர்களைக் கொத்தி விடுவதால் இவை வளர்வதேயில்லை. இன்னமும் விதைகள் இருந்து, முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன, குருவியும் விடாமல் கொத்திக் கொண்டேதான் உள்ளது.
வீட்டுக்கு வெளியே பெரியபெரிய புல்தரைகள், ரோஜாக்கூட்டங்கள், ஆஃப்ரிக்கன் லில்லி என எவ்வளவோ இருந்தும் எங்க வீட்டுக்குத்தான் அவர்களின் விஜயம் எனும்போது நானும் நல்ல மனசோடு 'செடிகள் போய்ட்டு போவுது'ன்னு விட்டுட்டேன்.
இப்போ அடைக்கு வருவோமா !!

தேவையானவை:

கேழ்வரகு மாவு _ ஒரு பங்கு
பருப்பு கீரை _ இரண்டு பங்கு
சின்ன வெங்காயம் _ இரண்டு
பச்சை மிளகாய் _ காரத்திற்கேற்ப
இஞ்சி _ சிறிது
கறிவேப்பிலை _ கொஞ்சம்
உப்பு _ சுவைக்கு
நல்லெண்ணெய் _ தேவைக்கு

செய்முறை :

வழக்கம்போல கீரையை அரியாமல் நன்றாக அலசி நீரை வடியவிட்டு, சின்னசின்னதா இருக்குமாறு தண்டுப் பகுதியில் ஆங்காங்கே ஒடித்துக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும். மாவை ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி, அதில் உப்பு போட்டு, அதனுடன் அரிந்து வைத்துள்ளவற்றைக் கொட்டி நன்றாகப் பிசையவும்.
பிசைந்த மாவை உருண்டையாக்கி சிறிது நேரம்(ஒரு 10 நிமி?) ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பிலேற்றி காயவிடவும்.
ல் காய்வதற்குள் மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து ஒரு ஈரத்துணியில் வைத்து மெல்லியதாகத் தட்டவும்.
இப்போது கல் காய்ந்ததும் அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு அடையைச் சுற்றிலும் & மேலேயும் எண்ணெய் விட்டு மூடி வேகவிடவும்.
எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விட்டால்தான் அடை வேகும். இல்லையென்றால் மாவு வேகாமல் வெள்ளையாகவே இருக்கும்.
எண்ணெய் அதிகம் சேர்க்க முடியாதென்றால் ஒரு பேப்பர் டவலில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு அடையின் மேல் எல்லா இடத்திலும் படுமாறு தடவிவிடலாம்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
இட்லித்தூளுடன் சாப்பிட்டுப் பாருங்க. அடையிலுள்ள பச்சைமிளகாயின் காரமும், தூளிலுள்ள மிளகு & காய்ந்தமிளகாயின் காரமும் சேர்ந்து, நீங்களே 'ஆஹா'ன்னு சொல்லுவிங்க பாருங்க‌.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667

aadhavansiddhacure@gmail.com
arunchinniah@gmail.com
drarunchinniah@gmail.com
Android App

iOS App


வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மூலம்,மது பழக்கத்தை மாற்றும் மாதுளம்பழம் !!!!


நெல்லைக் குத்தினால் உடலைப் போஷிக் கும் சத்தான அவல் கிடைக்கும்அவலை உணவாக்கி இந்த உடலின் ஆயுளை நீட்டலாம்அதேபோல் நம் மனமென்னும் நெல்லைக் குத்தி சீராக்கினால்நம்முள் சிவலயம் உண்டாகிஆத்ம மேம்பாட்டிற்கான உன்னத வழி நமக்குள் உருவாகும் மனம் ஒரு முரண்டு பிடிக்கும் குரங்கு. "செய்யாதேஎன்றால் செய்யத் துடிக்கும்; "சாப்பிடுஎன்றால், "பசியில்லைஎன்று சொல்லும்; "உட்காருஎன்றால், "பரவாயில்லை நிற்கிறேன்என்று சொல்லும்இப்படி சஞ்சலமும் சபலமும் கொண்ட மனதை அந்த சிவபெருமானாலேயே கடைத்தேற்ற முடியும்.
மாதுளையில் வீற்றிருக்கும் மகேசனேஉம் கருணையினால் மனமதைச் செம்மையாக்கி செழிப்பாய் வாழ முனைகிறோம் ஐயனேஉம் அருள்பெற்ற மாணிக்க வாசகரைப்போல் உம்மையே நினைக்கும் மனதை எமக்கும் தாரும் ஐயா!
கீழ்வேளூர் சிவத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனேஉம் திருவடி சரணமே இப்பிறவி யின் பயனாம்பெருமான் உறைந்த மாதுளையை மருந்தாக்கி மக்கள் பிணி தீர்க்க முனைகிறோம் இறைவா!
விடாத இருமல் தீர...
உலர்ந்த மாதுளம்பூ மொட்டுசுக்குசித்தரத்தைஅதிமதுரம்காய்ந்த திராட்சைதனியா ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும்இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துபாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும்இதில் பனங்கற்கண்டு சேர்த்து காலைமாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப் பட்ட இருமலும் தீரும்சிலருக்கு குடற்புண் உண்டாகிஅதனால் தொண்டைக்கட்டுஇருமல் உண்டாகும்மேற்கண்ட கஷாயம் இப்பிரச்சினைக்கும் நல் மருந்தாய் அமையும்.
வயிற்றுப்போக்கை நிறுத்த...
ஒரு மாதுளம்பிஞ்சுஅதிவிடயம்கோரைக் கிழங்குவிளாம்பழ ஓடுசுண்டைக்காய்கசகசாமாம்பருப்பு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து அரைத்துகட்டித் தயிரில் நெல்லிக்காய் அளவு கலந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுப்போக்கும் நொடியில் விலகும்.
மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் தீர...
மாதுளம்பூமாசிக்காய்அருகம்புல் ஆகிய மூன்றையும் வகைக்கு பத்து கிராம் எடுத்து கஷாயமிட்டுபாதியாகச் சுண்டச் செய்து சாப்பிடமூக்கிலிருந்து அடிக்கடி உண்டாகும் ரத்தப்போக்கு சரியாகும்.
பற்களைப் பற்றிய வியாதிகள் தீர...
மாதுளை துளிர்மாதுளம் மொட்டுமாதுளம்பூமாதுளம்பிஞ்சுமாதுளை ஓடுஆலம்பட்டைஅரசம்பட்டைமருதம்பட்டைகருவேலம்பட்டைமாசிக்காய்கடுக்காய்இந்துப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேகரித்து தூள் செய்துஇத்துடன் 20 கிராம் அளவு பச்சைக் கற்பூரத்தையும் தூள் செய்து கலந்து வைத்துக்கொள்ளவும்இந்தப் பற்பொடியில் பல்துலக்கி வர முக வசீகரம் உண்டாகும்மேலும் பல்வலிபல்கூச்சம்பல்ஈறுகளில் ரத்தம் வடிதல்ஈறுவீக்கம்ஈறுஅரிப்புபல் அசைவுசொத்தைப்பல் போன்ற பற்களைப் பற்றிய அனைத்து வியாதிகளும் தீரும்மேலும் நாக்கில் உண்டாகும் புண்நாசியில் உண்டாகும் புண்தொண்டைப்புண் போன்றவையும் இப்பற் பொடியால் தீரும்.
ரத்த பேதி நீங்க...
மாதுளம்பூஅத்திதுத்திஆவாரம்பூபிரண்டைபொடுதலைவில்வம்வில்வ ஓடுமாதுளை ஓடு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு சேர்த்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும்இதனை ஐந்து கிராம் அளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வரரத்தபேதி மற்றும் ரத்த மூலம் குணமாகும்மேலும் ஆசனவாய்ப் பகுதியில் உண்டாகும்புண்அரிப்புதடிப்புவெடிப்பு போன்ற குறைபாடுகளும் முழுமையாய் நீங்கும்.
வாந்தியை நிறுத்த...
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை நிறுத்துவது அவ்வளவு சுலபமான காரியமல்லவாந்தியை நொடிப்பொழுதில் நிறுத்தும் சக்தி மாதுளைக்கு மட்டுமே உண்டுசித்த மருத்துவ மருந்துக்கடைகளில் கிடைக்கும், "மாதுளை மணப்பாகுஎன்ற மருந்தினை வாங்கிமணிக்கு ஒருமுறை கொடுத்து வாருங்கள்ஐந்தாறுமுறை கொடுத்தபின் வாந்தி வருவது நின்றுவிடும்கடைகளில் வாங்க இயலாதபட்சத்தில் இங்கே குறிப்பிட்டபடி உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
மாதுளைச் சாறுநெல்லிச் சாறுஆரஞ்சுச் சாறு ஆகியவற்றை வகைக்கு 100 மி.லிஎடுத்து ஒன்றாக்கி, 300 மி.லிதேனுடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரிக்கவும் சாறுசுண்டி பாகுபதம் வரும்பொழுது எடுத்து பத்திரப்படுத்தவும்எளிய முறையில் செய்யப் படும் இம்மாதுளை மணப்பாகு கடுமையான வாந்தியை நிறுத்தும் வல்லமை கொண்டது.
விக்கலை நிறுத்த அற்புதமான வழி...
மதுப் பழக்கத்தினால் கல்லீரலைக் கெடுத் துக் கொண்ட அன்பர்களுக்குஅவர்களையும் வாழ்விக்கும் பொருட்டு அரிய மருந்தொன்று சொல்கிறேன்தீவிர மதுப்பழக்கம் உடையோ ருக்குகல்லீரல் கெட்டு ரத்த மாறுபாடுகள் உண்டாகி விக்கல் நோய் உண்டாகும்விக்கல் நோயை முற்றாகக் குணப்படுத்தும் வல்லமை மாதுளைக்கு உண்டென்பதை அடித்துச் சொல்லலாம்.
மாதுளம் பிஞ்சுமாதுளம்பூவறுத்த சீரகம்கீழாநெல்லிகரிசலாங்கண்ணிமஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும்இதனை விக்கல் கண்டபோது தேனில் குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும்மேலும் அடிக்கடி விக்கல் நோயால் அவதிப்படு பவர்களும்குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்களும் இதனைத் தொடர்ந்து பயன் படுத்தலாம்கல்லீரல் சார்ந்த பிற நோய்களான கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம்கல்லீரலில் உண்டாகும் புண்கட்டிசீழ்க்கட்டிபித்தப் பையில் உண்டாகும் புண்கட்டிகற்கள் போன்றவற்றையும் அதிசயமாய் குணப் படுத்தும்இம்மருந்தினைஎம்பெருமான் ஈசனை சரணடைந்து சாப்பிடுங்கள்சகலமும் பெறுவீர்கள்.
மன உளைச்சலுக்கு மாதுளையே மாமருந்து...
சமீபத்திய மேலைநாட்டு ஆய்வறிக்கை, "மாதுளம்பழச் சாறை மனநோயால் பாதிக் கப்பட்டவர்கள்ரத்த அழுத்த இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்என்று தெரிவிக்கிறது.
ஆண்மைக் குறைவு நீங்க...
மாதுளை ஓடுஜாதிக்காய்ஜாதிப்பத்திரிஅக்கிரகாரம்பூனைக்காலி விதைப்பருப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்இதனை காலைமாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரநீர்த்துப் போன சுக்கிலம் கட்டியாகிபோக உணர்வு விருப்பம் போல் நீடிக்கும்.
உயிரணுக்கள் பெருக...
மாதுளை ஓடுநெருஞ்சில்கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்துபசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும்நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும்இதனை காலைமதியம்இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வரஉயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும்வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும்உங்கள் வீட்டில் ஈசன் அருளால்மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும்குறிப் பெடுத்துக் களைத்துவிடாமல்மருந்து செய்யும் வேலையை மகேசனை வேண்டி ஆரம்பியுங்கள்!                                                                                           
                                    - சித்தமருத்துவர் அருண்சின்னையா
மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667

aadhavansiddhacure@gmail.com
arunchinniah@gmail.com
drarunchinniah@gmail.com
Android App

iOS App