செவ்வாய், 31 மார்ச், 2015

இயற்கை மருத்துவம் பகுதி - 19 சித்த மருத்துவர் அருண் சின்னையா.

சிறுவர்களுக்கு நீர்த்தாரை, ரத்த ஒழுக்கு நிற்க மருந்து:
சிறுவர்களுக்கு நீர்த்தாரையில் ரத்த ஒழுக்கு ஏற்படுவதுண்டு. இது வைசூரிகளில் ஒன்று. இதையே செங்கமாரி என்று கிராமத்து மக்கள் கூறுவர். இந்நோய்க்கு கீழாநெல்லியை வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நன்றாக இடித்துப் பிழிந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து அப்பொழுது கறந்த பசும்பாலில் சேர்த்து ஐந்தாறு நாட்கள் உள்ளுக்குள் சாப்பிட பூரண குணமாகும்.
கண் சதை வளர்ச்சிக்கு மருந்து:
சிலருக்கு கண்ணில் சதை வளர்ச்சி ஏற்படுவதுண்டு. இதற்கு சிக்கன வைத்தியமாக பேரீச்சம் பழத்தினுள்ளிருக்கும் கொட்டையை எடுத்து அதை பன்னீரிலோ, தாய்ப்பாலிலோ இழைத்து கண்ணுக்கு மை இடுவது போல போட... குணமாகும்.
தலைப்பாரம், தலைவலி தீர மருந்து:
சீதளத்தினால் தலைப்பாரம், தலைவலி ஏற்பட்டு தொல்லை தருவதுண்டு. அதற்கு கொஞ்சம் தும்பைப்பூவை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைப்பாரமும் தலைவலியும் நீங்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க மருந்து:
சில பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் இருக்கும். அவர்கள் நெல்லிக் கனிகளை அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தலையில் ஊறும்படி தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்தல் நின்றுவிடும்.
ரத்தத்தைச் சுத்தப்படுத்த மருந்து:
ஆரஞ்சுப்பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ளது. ரத்தத்தைச் சுத்தப் படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. பித்தத்தைத் தணித்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இருமல், நீரிழிவு, மார்பு மற்றும் ஈரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது.
தாய்ப்பால் சுரக்க மருந்து:
தாய்மார்களுக்கு சில நேரங்களில் பால்சுரப்புக் குறைவு ஏற்படும். அதற்கு மருந்துகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். முருங்கை, வெள்ளைப் பூண்டுகளை நிறைய சாப்பிட்டு வந்தாலே போதும், தாய்ப்பால் அதிகம் சுரக்கும். அத்துடன் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையும் ஏற்படாது.
தலைவலி நீங்க மருந்து:
தலைப்பாரம், தலைவலி நீங்க நொச்சி இலையை வதக்கி அதனுடன் உப்புத் தூவி பொறுக்கும் சூட்டுடன் நெற்றியில் பற்றுப் போட்டால் போதும், உடனே போய்விடும்.
கட்டிகள் பழுத்து உடைய மருந்து:
உடலில் ஏற்படும் கட்டியை பழுக்க வைத்து உடையச் செய்ய அந்திமந்தாரை என்னும் பத்திராட்சி செடியின் இலை நல்ல மூலிகையாகும். அதில் இரண்டு, மூன்று இலைகளை எடுத்து அதன் மீது விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வதக்கி இளஞ் சூட்டுடன் கட்டியின் மேல் போடலாம்.

சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667


இலவச சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற... 

Android AppiOS Appகுறிப்பு :

இந்த மின் புத்தகத்தை வாங்க சிரமம் இருந்தால்,drarunchinniah@gmail.com மின்அஞ்சல் செய்யவும். 


திங்கள், 30 மார்ச், 2015

இயற்கை மருத்துவம் பகுதி - 18 சித்த மருத்துவர் அருண் சின்னையா.

வாந்தி பேதி நிற்க மருந்து:
வாந்தி பேதி, மந்த பேதி ஏற்பட்டு தொல்லை தருமாயின் ஒரு புதுச்சட்டியில் இரண்டு மிளகாயைச் சேர்த்து கருகும்வரை வறுத்து எடுக்க வேண்டும். அந்த வறுத்த சட்டியில் இரண்டு, மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி பாதியாக சுண்டும் அளவு காய்ச்சி அந்நீரை ஒருவேளை உள்ளுக்குள் சாப்பிட்டால் போதும் வாந்தி நின்றுவிடும்.
தலை சொட்டை மாற மருந்து:
தலை முடி உதிர்ந்து சொட்டை ஏற்படுவதுண்டு. அதற்கு இலந்தை இலை நல்ல மருந்தாகும். அந்த இலையின் சாற்றை, சொட்டை விழுந்த இடத்தில் அழுத்தமாகத் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி வளரும்.
தொண்டைச் சதை வீக்கம் போக்க மருந்து:
சிறு குழந்தைகளுக்குத் தொண்டைக்குள் சதை அதிகமாய் வளர்ந்து தொண்டையையே மூடிவிடும். இதனால் காய்ச்சலும் திணறலம் இருக்கும். இதற்கு அமுக்கிரா கிழங்கு, சுக்கு ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து பசும்பாலிலிட்டு அரைத்துப் பாலில் கலக்கிக் குழம்புப் பதத்தில் காய்ச்சி இளஞ்சூட்டுடன் காதில் அடிப்பாகத்தில் தொண்டையின் இரு பக்கங்களிலும் மேல் பற்றாகப் போட, வீக்கம் குறைந்துவிடும்.
காமாலை நோய்க்கு மருந்து:
காமாலை நோயா? பூவரசு இலைக் கொழுந்துடன் ஐந்து மிளகு சேர்த்து அரைத்து ஒரு எலுமிச்சைப் பழ அளவு மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளை வீதம் சாப்பிட்டுவர ஏழு அல்லது பத்து நாட்களில் குணமாகும். அந்த நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு இளநீராவது சாப்பிட்டு வந்தால் நல்லது. உப்பு கலந்த உணவை அறவே நீக்க வேண்டும்.
கடுங்காய்ச்சல் குணமாக:
கடுமையான காய்ச்சலால் அவதிப்படுவோருக்கு வெந்நீரில் வெண் நொச்சி இலையைப் போட்டு நீராவி பிடிக்க நன்றாக வியர்க்கும். சிறிது நேரத்தில் காய்ச்சலும் தணியும்.

சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667


இலவச சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற... 

Android AppiOS Appகுறிப்பு :

இந்த மின் புத்தகத்தை வாங்க சிரமம் இருந்தால்,drarunchinniah@gmail.com மின்அஞ்சல் செய்யவும். சனி, 28 மார்ச், 2015

இயற்கை மருத்துவம் பகுதி - 17 சித்த மருத்துவர் அருண் சின்னையா.

காது குத்தல் மறைய மருந்து:
காது குத்தல் இருந்தால் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் சிறிது பெருங்காயத்தைப் பொரித்து பின் அந்த எண்ணெய்யை மட்டும் லேசான சூட்டில் சில துளிகள் காதில் விட குத்தல் குணமாகும்.
உதடு வெடிப்புகளுக்கு மருந்து:
பனிக்காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதுண்டு. அதற்குக் கரும்புத் தோகையை எரித்து சாம்பலாக்கி அத்துடன் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து குழைத்த உதட்டில் தடவி வர வெடிப்பு நீங்கும்.
கால் வீக்கம் குறைய மருந்து:
கால்களில் வீக்கமும், வலியும் ஏற்பட்டால் உத்தாமணி என்னும் வேலிப்பருத்தி இலையின் சாற்றை வீக்கத்தின் மேல் தடவ வீக்கம் குறைந்து வலியும் நீங்கும்.
பித்த சம்பந்தமான தொல்லைகள் மறைய மருந்து:
பித்தத்தினால் ஏற்படும் தொல்லை நீங்க இஞ்சிச் சாற்றில் கொஞ்சம் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 48 தினங்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். இச்சாற்றுடன் கொஞ்சம் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பல் சொத்தை நீங்க மருந்து:
பற்களில் சொத்தை ஏற்படுவதுண்டு. அதற்கு எருக்கம்பாலில் ஒரு சொட்டை, சொத்தை கண்ட இடத்தில் விட்டால் போதும். சொத்தை மேலும் பரவாமல் தடுக்கப்படும். அத்துடன் பல் கூச்சமும் நின்றுவிடும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்ய, பல் சொத்தை மீண்டும் வராது.
ஹிஸ்டீரியா நோய் மருந்து:
எலுமிச்சம் பழச்சாற்றில் பெருங்காயத்தைக் கலந்து தினம் மூன்று வேளைகள் சாப்பிட்டு வர ஹிஸ்டீரியா நோய் நீங்கும்.

சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667


இலவச சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற... 

Android AppiOS Appகுறிப்பு :

இந்த மின் புத்தகத்தை வாங்க சிரமம் இருந்தால்,drarunchinniah@gmail.com மின்அஞ்சல் செய்யவும். வெள்ளி, 27 மார்ச், 2015

இயற்கை மருத்துவம் பகுதி - 16 சித்த மருத்துவர் அருண் சின்னையா.

வேர்க்குரு தொல்லை மாற மருந்து:
கோடைக் காலத்தில் வேர்க்குருவின் தொல்லை நீங்க பனை நுங்கு கொண்டு வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்தால் பலன் ஏற்படும். நுங்கு கிடைக்கவில்லை யென்றால் சந்தனத்தை இழைத்துப் பூசினால் போதும்.
சீதபேதிக்கு எளிய மருந்து:
சீதபேதிக்கு எளிய வைத்தியமாக கடுக்காய்ப் பிஞ்சின் மீது ஆமணக்கெண்ணெய் தடவி வறுத்து, அதை நன்றாகப் பொடி செய்து கொடுத்தால் போதும், பேதி நிற்கும்.
தாது விருத்திக்கு மருந்து:
தாது விருத்திக்கும் உடல் வலிமைக்கும் முருங்கைப்பூ சிறந்ததாகும். ஒரு டம்ளர் பசும்பாலில் கொஞ்சம் முருங்கைப் பூக்களைப் போட்டு நன்றாகக் காய்ச்சி இரவு படுக்குமுன் அன்றாடம் சாப்பிட்டு வரவும்.
உள்ளங்கை வியர்வை மறைய மருந்து:
சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்கால்களில் மட்டும் வியர்வை கசிந்துகொண்டே இருக்கும். அதற்கு இலந்தை இலைகளில் கொஞ்சம் எடுத்து நன்றாக நசுக்கி அந்தச் சாற்றை உள்ளங்கைகளிலும், கால்களிலும் சில நாட்கள் தடவிவர வியர்ப்பது நின்றுவிடும்.
வயிற்று உப்புசம் நீங்க மருந்து:
வயிற்று உப்புசம் நீங்க சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து தெளிய வைத்த பின் அந்த நீரை அருந்தலாம்.
நரம்புத் தளர்ச்சிக்கு மருந்து:
நரம்புத் தளர்ச்சிக்கு வெங்காயம் சிறந்த நிவாரணம் ஆகும். வெங்காயத்தை நன்றாக வதக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சீர்படும்.

சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667


இலவச சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற... 

Android AppiOS Appகுறிப்பு :

இந்த மின் புத்தகத்தை வாங்க சிரமம் இருந்தால்,drarunchinniah@gmail.com மின்அஞ்சல் செய்யவும். வியாழன், 26 மார்ச், 2015

அனைவருடைய கைபேசியிலும் இருக்க வேண்டிய மருத்துவ நூல்கள் (e-books) ...........

அனைவருடைய கைபேசியிலும் இருக்க  வேண்டிய  மருத்துவ நூல்கள்....

1. உடல் நலம்  காக்கும் சித்த மருத்துவம் 
2. ஆரோக்கியம் காக்கும் கீரைகள் 
3. ஆஸ்துமா 
4. 200 மூலிகைகள்  2001  சித்த மருத்துவ குறிப்புகள்  
5. இயற்கை மருத்துவம் 
6. ஆண்மை குறைவு 
7. சமையல் மந்திரம் 
8. தாதுக்கள்

சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ நூல்களை
(e-book) படிக்க...

Android கைபேசியில் அருண் சின்னையா அவர்களின் iOS  மற்றும்  Android Application - ஐ (https://play.google.com/store/apps/details…) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பின்பு, ( http://www.drarunchinniah.in/ebook/ ) இணைய பக்கத்தில் Login செய்து,

புத்தகத்தை வாங்கி படித்து பயன் பெறவும்.

புத்தகத்தை (e-book)  iOS  மற்றும்  Android App - ல்  மட்டுமே படிக்க முடியும். 


இலவச சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற... 

Android AppiOS App
சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667


குறிப்பு :

இந்த மின் புத்தகத்தை வாங்க சிரமம் இருந்தால், drarunchinniah@gmail.com மின்அஞ்சல் செய்யவும். 

புதன், 25 மார்ச், 2015

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ' பாகற்காய் '

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.
இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.
“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.
ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.
“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.
`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில்,
பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.
அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.
“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.
அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.
பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.


சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ நூல்களை படிக்க...சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667


இலவச சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற... 

Android AppiOS App
செவ்வாய், 24 மார்ச், 2015

குடலைக் காக்கும் சித்த மருத்துவம் - சித்த மருத்துவர் அருண் சின்னையா.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து விரிவான தகவல்கள்.
செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் யாவை?
உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்.

செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள் என்ன?
வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச் சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.
குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?
உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப் பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
வாயுத் தொந்தரவு என்றால் என்ன?
சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.
வயிற்று வலி வருவது ஏன்?
வயிற்று வலி பெருமபாலும் குடல் புண்ணால்தான் உண்டாகிறது. ஆனால் புண் மட்டுமே காரணம் அல்ல. மேலும் புண் இருக்கும் உறுப்பைப் பொருத்தும் வயிற்று வலி மாறுபடும். இரைப்பையில் புண் இருந்தால் உணவு உட்கொண்டதும் வலி ஏற்படும். சிறுகுடல் முதல் பகுதியில் புண் இருந்தால் உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் வலி ஏற்படும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும். குடல்புண் தவிர செரிமான உறுப்புகளில் அழற்சி குடலில் கிருமிகள் இருப்பது இவற்றாலும் வலி உண்டாகக் கூடும்.
குடல் புண் வருவது எப்படி?
உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.
குடல் புண்ணால் ஆபத்தா?
இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க சித்தர்கள் சொன்ன யோசனைகள் என்ன?
மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்ற அளவிலே இருக்கவேண்டும் என்று சித்தர்கள் சொல்லிருக்கிறார்கள். உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாவிட்டால் கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் நாம் இப்போது சித்தர்கள் கூறிய முறையைக் கடைப்பிடிப்பதில்லை. வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளாததாலும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தில் குடல் புண்ணுக்கு மருந்து என்ன?
சித்த மருத்துவத்தில் குடல் புண், குன்மம் என்று அழைக்கப்படுகிறது. குடல் புண்ணைக் குணப்படுத்த ஏராளமான சித்த மருந்துகள் இருக்கின்றன. திரிபலா சூரணம், திரிபலாக் கற்பம், ஏலாதி சூரணம், நன்னாரி சூரணம், சீரக சூரணம், சீரண சஞ்சீவி சூரணம், தயிர் சுண்டிச் சூரணம், சிருங்கிப் பேராதி சூரணம் ஆகியவை உள்ளன. இது தவிர நன்னாரி லேகியம், இஞ்சி லேகியம், இஞ்சி ரசாயனம், அதிர்ஷட ரசாயனம் போன்ற லேகியங்களும், மிளகு தக்காளி எண்ணெய் போன்ற எண்ணெய்களும், அயச் செந்தூரம், சங்கு பற்பம், சிலாச் சத்து பற்பம் போன்ற பற்ப செந்தூரங்களும் பெரிதும் பயன்படுகின்றன.
குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?
புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.


சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ நூல்களை படிக்க...சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667


இலவச சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற... 

Android AppiOS App

சனி, 21 மார்ச், 2015

இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.
வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.


வைட்டமின் குறைபாடு நீங்க

கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
வீணாக கிடக்குதா புதினா?: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும்.


சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ நூல்களை படிக்க...
சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667

வெள்ளி, 20 மார்ச், 2015

வயாகரா - காய்கறிகளை உண்ணுங்கள்.

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.

மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற
காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.
முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.


சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ நூல்களை படிக்க...
சித்த மருத்துவர் அருண் சின்னையா,
தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கம் (தஸ்னா),
எண்.155, முதல்மாடி, 94வது தெரு, 15வது செக்டார்,
கே.கே.நகர், சென்னை 600 078.
மொபைல் : +91 98840 76667, +91 91761 76667