வியாழன், 30 ஏப்ரல், 2015

தினை அரிசியின் பயன்கள் - சித்த மருத்துவர் அருண் சின்னையா.

சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது.

உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர்.

இதனால் அம்மரங்கள் தெய்வீக முக்கியத்துவத்துடன் போற்றி வளர்க்கப்பட்டது. நாளடைவில், இவை தெய்வீக மரங்களாக உருப்பெற்று, மக்கள் மத்தியில் ஆன்மீக அந்தஸ்துடன் போற்றப்படத் தொடங்கியது.பழங்காலத்தில் இருந்து உருவான இந்த தெய்வீக மரங்கள் பல கோயில்களில் சில முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாக, மரங்களை தலவிருட்சமாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர்.

இதன் மூலம் கொடிய நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.சின்னஞ்சிறு செடி கொடிகளை முதல் பெரிய பெரிய மரங்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. புனித மரங்களாக போற்றப்பட்டது. தானிய வகைகளில் தினையும் இவ்வாறு புனிதத்துவம் பெற்றது.

தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது.

உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.

ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

தினைமா - கஞ்சி - சாதம்

* தினையரிசி - உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும்.

* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.

* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.

கி.மு. 2700களிலேயே சீனாவிலும் பின்னர் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியதாகவும், பின்னர் இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பயிரிடப்படுகின்றன.இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.


சத்துக்கள்

ஈரப்பதம் - 11.2%
புரதம் - 12.3%
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%
எனவும் உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புரதம்

தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும்.

இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.

மாவுச் சத்து

மாவுச்சத்து - 60%
ஸ்டார்ச்சு - 55%

சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.

கொழுப்புச் சத்து

தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.

உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.

கனிமச் சத்துக்கள்

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.

உயிர் சத்துக்கள்

தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.
தினையின் பயன்கள்

உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக்கொடுக்கின்றார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.

மேலும் இதனைக் கோழிகளுக்கும், கூண்டில் வளர்க்கும் பறவைகளுக்கும் கூடத் தீனியாக்கியுள்ளனர்.

தினையின் தாள்

* இதனைக் கால்நடைகளுக்குத் தீவனமாக்குகின்றனர். பூவிடும் பருவத்திலிருந்தும், தானியம் முற்றாமல் இளம் பருவத்தில் இருக்கும் வரை சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும்.

* மேலும் இதனை வீடுகளுக்குக் கூரை வேயவும், படுக்கை தயார் செய்யவும் பயன்படுத்துகின்றனர். தானியம் நீக்கிய கதிர், எரி பொருளாகவும், மெத்தை, தலையணை போன்றவை தயாரிக்கவும் பயன்படுகின்றது.


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in

சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை     (e-book) படிக்க…
சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

Android App                 

iOS App                    



புதன், 29 ஏப்ரல், 2015

பப்பாளியின் பயன்கள்

பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.

மருத்துவக் குணங்கள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100
கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.

இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.




மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்: www.drarunchinniah.in

சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை     (e-book) படிக்க…
சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

Android App                 

iOS App