சனி, 27 பிப்ரவரி, 2016

கொய்யா,கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவர் அருண் சின்னையா

கொய்யா:-

1. பழுத்த கொய்யா பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

2. கொய்யா பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறும்.

3.
கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.

4.
கொய்யா இலையை மென்று தின்று, வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

கொத்தமல்லி:-

1. கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு அடுத்து நன்றாக மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்றாகப் பசியும் எடுக்கும்.


2. கொத்தமல்லியோடு, மஞ்சள் மற்றும் 
மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்க்காய்ச்சல் குணமாகும்.

3.
கொத்தமல்லிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் கொழுப்பு குறையும். ரத்த அழுத்தம் சீராகும்.

4.
கொத்தமல்லிச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்

மேலும் தொடர்புக்கு:


சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி    : 98840 76667, 98401 77783
மின் அஞ்சல்                  :  drarunchinniah@gmail.com
இணைய தளம் : www.drarunchinniah.in

சதகுப்பைக் கீரையின் பயன்கள்

1. சதகுப்பைக் கீரையில் கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.

2. சதகுப்பைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.


3.
சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் கர்ப்பப்பை கோளாறுகள் குணமாகும்.


4.
சதகுப்பைக் கீரையுடன், கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து இரவு உணவுக்குப் பிறகு லேகியம்போல் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி    : 98840 76667, 98401 77783
மின் அஞ்சல்                  :  drarunchinniah@gmail.com
இணைய தளம் : www.drarunchinniah.in

நிலப்பனங்கிழங்கு - பயன்கள்

காமத்தை விருத்தி செய்வதும் , உயிர் அணுக்களை அதிகரிப்பதும் இதன் செய்கைகளாகும் . அதுபோல் பெண்களுக்கு காணும் வெள்ளைப்படுதல் , முறையற்ற மாத விலக்கு ஆகியவற்றையும் இது குணமாக்கும்.
அபார ஆண்மைக்கு நிலப்பனைச் சூரணம்:
1. நிலப்பனங்கிழங்கு -50 கிராம்
2. சீந்தில் சர்க்கரை-50 கிராம்
3. பூனைக்காலி விந்து-50 கிராம்
4. நெல்லி வற்றல் -50கிராம்
5. சிறுநெருஞ்சில் முள்-50கிராம்
6. முள்ளிலவம் பிசின் -50கிராம்
7. கற்கண்டு-600கிராம்
சீந்தில் சர்க்கரை மற்றும் கற்கண்டு தவிர்த்து ஏனைய ஐந்து சரக்குகளையும் முறைப்படி சுத்தி செய்து, பொடித்து , சலித்து வைத்துக் கொள்ளவும் . சீந்தில் சர்க்கரை, கற்கண்டு இரண்டையும் தனித்தனியே பொடித்து சலித்து , சூரணத்துடன் கலந்து கொள்ளவும்.
அளவு: ½ கிராம் அளவு சூரணத்தை காலை , இரவு இரு வேளைகள் பால் அல்லது நெய்யுடன் கலந்து சாப்பிடவும் . வெட்டைச் சூடு அறவே நீங்கி தாது புஷ்டி தரும் . மருந்துண்ணும்போது இச்சாபத்தியமாய் இருந்தால் , மிகவும் பயந்தரும் மசாலா பண்டங்களை நீக்குவது நல்லது.
ஆண்மை தரும் கடுக்காய்:
கடுக்காய் பற்றிய வதந்தி இன்று நம்மிடையே உள்ளது . கடுக்காய் ஆண்மையை குறைப்பதாகக் கட்டவிழ்த்து விடப்படுகிறது . அது உண்மையல்ல . கடுக்காய் ஆண்மையை வளர்க்கும் அற்புத மருந்து . கடுக்காயை தனியாகவோ , பிற மருந்துகளுடன் கூட்டு மருந்தாகவோ சாப்பிடலாம் .
கடுக்காய் உடல் உஷ்ணத்தை தனித்து ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது . வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது .
கடுக்காய் மேற்கண்டபடி வேலைகள் செய்வதால் உடல் ஒரு கட்டுகள் வருகிறது . அதனால் கண்ட நேரங்களில் உடலுறவு வேட்கை வர விடாமல் தடுக்கிறது . அப்படி புணர்ச்சியில் ஈடுபடுகின்ற வேளையில் முழுமையாக வேகமாக இயங்க வலிமையும் தருகிறது. விந்து குறைபாடுகளையும் களைகிறது.
கடுக்காயும் கருப்பட்டியும் (பனைவெல்லம் ) கலந்து சாப்பிட்டால் எலும்பு மஜ்ஜை, விந்து உறுதியாகும்.
தென்னாட்டவருக்கு திரிபலைஎன்றொரு பழமொழி உண்டு.
தமிழ்நாடுஆந்திராகர்நாடகம்கேரளா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்களின் உடம்புக்கு திரிபலா அற்புதமான மருந்து . உடலில் காணும் அதிகபட்ச பித்தத்தைக் களைகிறது.
திரிபலா சூரணம் என்பது நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படுவது.
இது சாதாரணமாய் எங்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய மருந்து . வெட்டை நோயினால் பீடிக்கப்பட்டு ஆண்குறி அழுகி , சீழ்பிடித்து வந்த நோயாளிகளுக்கு கடுக்காய் கசாயம் மூலம் குறைகளை சரி செய்து குணப்படுத்தலாம்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in