திங்கள், 28 மார்ச், 2016

புளிய மரம் - பயன்கள்

1. புளிய இலை, உப்பு, கடுகுமூன்றையும் நன்றாக அரைத்துப் பற்றுப்போட்டால் சுளுக்கு, ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவை குணமாகும்.

2. புளிய மரத்தின் கொழுந்தையும், மஞ்சளையும்ஒன்றாகச் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்துவந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம்.

3.
புளிய மரத்தின் பூவை நன்றாக அரைத்து கண்கள் மீது வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டிக்கொண்டால், கண் வலி உடனே குறையும்.

4.
புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் பசைபோல் வரும். அந்தப் பசையை தேனீ கொட்டிய இடத்தில் தடவினால் கடுகடுக்கும் வலி உடனே நின்றுபோகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக