சனி, 12 மார்ச், 2016

சித்த மருத்துவக் குறிப்புகள் - சித்த மருத்துவர் அருண் சின்னையா

பீச்சி அடிக்கும் பேதி உடனே நிற்க மருந்து…..
மாங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து பசும்பாலுடன் கலந்து மைய அரைத்து அந்த விழுதை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் உடனே நிற்கும்.
காக்காய் வலிப்பு நிற்க……
வலிப்பு கண்டவுடன் வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு எடுத்து அந்தச் சாற்றை இரண்டு காதுகளிலும் ஊற்றினால் காக்காய் வலிப்பு உடனே நிற்கும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க…..
தொட்டால் சிணுங்கி இலையை பறித்து வந்து நீர் விட்டு அரைத்து சிறு உருண்டையை பசுந்தயிர் கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
பித்தம், மூலக்கொதிப்புக்கு மருந்து…..
நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கறி வேப்பிலையைச் சாப்பிட்டு வர மேற்படி இரண்டு நோய்களும் நம்மை அணுகாது.
ஒற்றைத் தலைவலிக்கு…..
எட்டிக் கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்குக் குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.
நகச் சொத்தை நீங்க…..
படிகாரத்தைப் பொரித்து நீர் விட்டு கெட்டியாக குழைத்து நகச் சொத்தையின் மீது வைத்துக் கட்ட குணமாகும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க…..
மணத்தக்காளியை அடிக்கடி சமைத்துச் சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் வியாதிகளைப் போக்கலாம்.
பசி ஏற்பட……
வேப்பம்பட்டை, கிராம்பு, நிலவேம்பு இம்மூன்றையும் 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து பசி இல்லாத நேரங்களில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர பசி எடுக்கும்.
நட்டுவாக்களி விஷம் இறங்க…..
நட்டுவாக்களி கொட்டி விட்டால் உடனே ஒரு துண்டு தேங்காயை நன்றாக மென்று தின்ன விஷம் இறங்கும்.
தொண்டை வலிக்கு மருந்து……
சுண்ணாம்பும் விளக்கெண்ணையும் மைய குழைத்துக் காய்ச்சி பொறுக்கும் சூட்டுடன் தொண்டையில் தடவி வர தொண்டை வலி குணமாகும்.
படையை நீக்க மருந்து……
வெள்ளைப் பூண்டும் நவச்சாரமும் சம அளாவு எடுத்து மைய அரைத்து படையின் மீது தடவ குணமாகும்.


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக