வியாழன், 31 மார்ச், 2016

தோலில் படரும் தேமல் மறைய……

நாயுருவி என்னும் மூலிகையை 50 கிராம் கொண்டு வந்து சுத்தம் செய்து இரண்டு ஜாதிக்காயை அதனுடன் சேர்த்து மை போல அரைத்து தேமல் மீது தடவி வர விரைவில் தேமல் மறையும்.
எலி கடித்த விஷம் இறங்க…..
எலி கடித்தால் அது கொடிய விஷமாகி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே விளாமரத்தின் பூக்களைப் பறித்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் நீர்விட்டு அதில் விளாம் பூவைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பின் உள்ளுக்குச் சாப்பிட எலி விஷம் நீங்கும்.
உடல் பருமன் குறைய…..
பருமனாக உள்ளவர்கள் தினசரி கொள்ளுவை ரசம் வைத்து அரை டம்ளர் குடித்து வர ஒரு மாதத்தில் ஒல்லியாக மாறலாம்.
கர்ப்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீங்க……
சிலர் குழந்தை இல்லாது கவலை கொள்வார்கள். அத்தகையவர்களுக்கு கர்ப்பப்பைக் கோளாறு அல்லது மலட்டுத்தன்மை இருக்கும். எனவே அவர்கள் அரச மரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சொறி, சிரங்கு……
பூவரசம் மரத்தின் இலையை வெயிலில் உலர்த்தி அதனை எரித்து சாம்பல் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி சிரங்குகளின் மீது தடவி வந்தால் குணமாகும்.
இரத்தத்துடன் மலம் போவதைத் தடுக்க…..
சிலருக்கு இரத்தத்துடன் மலம் வெளியேறும். இந்த நோய் உள்ளவர்கள் ஒரு மாதுழம் பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட சில நாட்களில் குணமாகும்.
பேதி மருந்து…..
பூவரசம் மரத்தின் வேர்ப்பட்டையை நேர் விட்டுக் காய்ச்சி 25 மில்லியுடன் 5 மில்லி ஆமணக்கெண்ணெய் சேர்த்து காலை மாலை இருவேளை சாப்பிட பேதியாகும். பேதி நிற்க விரும்பினால் மோர் குடிக்க வேண்டும்.
சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற……
சில ஆண்களுக்க சிறுநீர் தாரையில் கற்கள் அடைத்துக் கொண்டு சிறுநீர் வெளியேறினால் உயிருக்கே உலை வைத்து விடும். அத்தகையவர்களுக்கு மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
படர் தாமரை நீங்க……
பூவரசம் மரத்தின் காயை நீர் விட்டு மைய உரைத்து படர் தாமரை மீது தடவ குணமாகும்.
சொறி சிரங்கு ஆற…..
மஞ்சளுடன் வேப்ப இலைகளை மைய அரைத்துச் சொறி சிரங்குகளின் மீது தடவினால் சில நாட்களில் ஆறிவிடும்.


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக