வெள்ளி, 29 ஏப்ரல், 2016

இருதயக்கோளாறும், ஆண்மையும்:-

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. அப்படி ஈடுபட்டால் உடம்பில் இரத்த ஓட்டம் மிகுதியாகி, இதயத்திற்கு கேடு உண்டாக்கும். இதய நோயும் ஆண்மையை பாதிக்கும்.
இதய நோய்களுக்கு சில மருந்துகள்:
1. கஸ்தூரி மாத்திரை
2. அமுக்கரா மாத்திரை
3. சிருங்கி பற்பம்
4. மகாவசந்த குசுமாகரம்
5. மருதம்பட்டை கசாயம்
6. அர்ஜீனாரிஸ்டம்
7. அரவிந்தாஸவம்
8. தாளிசாதிச் சூரணம்
9. சீரகச் சூரணம்
10. இஞ்சி சூரணம்
11. பஞ்சதீபாக்னி சூரணம்
12. தாமரைப்பூ
போன்ற மருந்துகள் இதயத்தை பலப்படுத்தும் மருந்துகளில் குறிப்பிடத்தக்கது.
இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகு புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது. மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் புணர்ச்சியில் ஈடுபடலாம். புணர்ச்சியில் ஆவேச உணர்வு, வக்கிரம் காட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

இயற்கை உணவே இனிய உணவு

இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.
இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், "ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.
இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு.
இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள்.
இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான். இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை.
ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.
இந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறார்.
உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார். எப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.
நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.
அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.
ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.
கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.
புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.
தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.
ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.
தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.
ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.
வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.
மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.
எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

முள்முருங்கை தோசை

முள் முருங்கை கீரை-சிறிதளவு
பச்சரிசி மாவு-1 கப் அல்லது ஒரு உழக்கு அளவு
உளுந்து மாவு- கால் கப் கால் உழக்கு அளவு
உப்பு-தேவயான அளவு
மிளகுத்தூள்-1 டீஸ்பூன்
செய்முறை:
முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கொள்ளவேண்டும். சிறுகச் சிறுக தண்ணீர் விட்டு தோசைப் பதத்திற்கு கரைத்துகொண்டு ஒரு அளவு கரண்டி மாவு எடுத்துத்
தோசையை வார்க்க வேண்டும். இதை ஆலிவ் எண்ணெய் விட்டு புரட்டிப் போட்டு முறுகலாகச் சுட்டுப் போட்டால் இன்னும் ரெண்டு குடுங்க
என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
இதையே அடையாகச் சுடலாம்.
முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்,
ஒரு சிறு துண்டு இஞ்சியை மிகவும் சன்னம்சன்னமாக வெட்டி அதையும் சேர்த்து பிசைஞ்சு சின்னச் சின்ன உருண்டைகளாக
எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடையைவிட கொஞ்சம் பெரிய சைசுக்குத் தட்டி, தோசைக் கல்லுலப் போட்டு
மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம். இப்பொழுது முள் முருங்கை அடை ரெடி.
இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும்.
இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
முள்முருங்கையின் மருத்துவக் குணங்கள்:
முள்முருங்கை இலை-தளிர் அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும்.
கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

வியாழன், 28 ஏப்ரல், 2016

முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை
முடக்கத்தான் கீரை
தேவையான உப்பு
தேவையான மிளகுத்தூள்
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.
இதை தொடர்ந்து காபி,டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும்.
இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.
இந்த கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம். துவையலும் செய்யலாம். பச்சைக்கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் தெரியாது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்
தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.
மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்:-
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
மருத்துவ குணம்: -
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம்,கொள்ளு துவையல்,கொள்ளு குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி
சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்
உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்
பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்
கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

Fatty Liver

Fatty liver, or steatosis, is a term that describes the buildup of fat in the liver. While it’s normal to have some fat in your liver, more than 5 to 10 percent of your liver weight is fat in the case of fatty liver.
Fatty liver is a reversible condition that can be resolved with changed behaviors. It
often has no symptoms and typically does not cause permanent damage.
The liver is the second largest organ in the body. The liver’s function is to process everything we eat or drink and filter any harmful substances from the blood. This process is interrupted if too much fat is in the liver. The liver commonly repairs itself by rebuilding new liver cells when the old ones are damaged. When there’s repeated damage to the liver, permanent scarring takes place. This is called cirrhosis.
Fatty liver is common. Around 10 to 20 percent of Americans have too much fat in their liver, but no inflammation or damage is present. Most cases of fatty liver are detected in people between ages 40 and 60. When fatty liver is caused by an underlying condition, it can become harmful to the liver if the cause is not recognized and treated.
What Are the Symptoms of Fatty Liver?
Ads by CoronaBorealisAd Options
Advertisement
Fatty liver typically has no associated symptoms. You may experience fatigue or vague abdominal discomfort. Your liver may become slightly enlarged, and your doctor can detect this during a physical exam.
Excess fat can cause liver inflammation. If your liver becomes inflamed, you may have a poor appetite,weight loss, abdominal pain, weakness, and confusion.

Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

டயட். . .

குளிர் காலமாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சுண்டல் வகைகள், முளை கட்டிய தானியங்களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் இருவேளை உணவில் காய், கீரை மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்கவும்.
முருங்கைக்கீரை, பேரீச்சை, திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. புளிக்காத தயிர் மற்றும் மோர் சேர்க்கலாம். வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் இரும்புச் சத்தை உட்கிரகித்துக் கொள்ள உதவும். சத்தான உணவு முறை மூலம் குளிர்கால நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

புதன், 27 ஏப்ரல், 2016

ரத்த விருத்தி சில சித்த மருந்துகள்:

1. முத்து பற்பம்
2. முத்துச்சிற்பி பற்பம்
3. நத்தை பற்பம்
4. பவள பற்பம்
5. சிருங்கி பற்பம்
6. வங்க பற்பம்
7. தங்க பற்பம்
8. வெள்ளி பற்பம்
9. அப்பிரக பற்பம்
10. பூர்ண சந்திரோதயம்
11. அச்செந்தூரம்
12. அயக்காத்த செந்தூரம்
13. அன்னபேதிச் செந்தூரம்
14. லோக மண்டூரம்
15. ஆறுமுகச் செந்தூரம்
16. வெள்ளிச் செந்தூரம்
17. அப்பிரகச் செந்தூரம்
18. தங்கச் செந்தூரம்
19. அமுக்கரா சூரணம்
20. கோரோசனை மாத்திரை
21. கஸ்தூரி மாத்திரை
22. குங்குமப்பூ மாத்திரை
23. மகா வசந்த குசுமாகர மாத்திரை
24. அமுக்கரா மாத்திரை
25. லிங்க செந்தூரம்
26. அமுக்கரா லேகியம்
27. தேத்தான் கொட்டை லேகியம்
28. வெண்பூசணி லேகியம்
29. நெல்லிக்காய் லேகியம்
30. சிட்டுக்குருவி லேகியம்
உடல் வலிக்கும் , ஆண்மைக்கும் சில ஆயுர் வேத மருந்துகள்:
1. அஸ்வகந்தாரிஷ்டம்
2. பலாரிஷ்டம்
3. பப்பூலாரிஷ்டம்
4. பிருங்கராஜ ஸ்வம்
5. சந்தனாஸ்வம்
6. தாசமூலாரிஷ்டம்
7. லோஹாஸவம்
8. அஸ்வகந்தி சூரணம்
9. அஸ்வகந்தி லேகியம்
10. சூஸ்மாண்ட லேகியம்
11. சதாவரீ லேகியம்
12. அமிர்தப்ராச கிருதம்
13. ப்ருஹச்சாகலாத்ய கிருதம்
14. ஜாத்யாதி கிருதம்
15. நரசிம்ம கிருதம்
16. சந்தனாதி வடி
17. ப்ருஹத்வாத சிந்தாமணி
18. சதுர்முக ரஸ
19. சந்திர பிரபாவடி
20. கோஷீராதி குக்குலு
21. க்ரம விருத்த லஷ்மி விலாஸ ரஸ
22. மகரத்வஜ பில்ஸ்
23. நஷ்ட புஷ்பாந்தக ரஸ
24. ஸ்வர்ண மாலீனிவஸந்த ரஸ
25. மகரத்வஜ செந்தூரம்
26. பூரண சந்திரரோதய
27. ஸ்வர்ண பஸ்ம
28. ரஜத பஸ்ம
29. சிருங் பஸ்ம
30. பலஸர்பிஸ்

Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

தேன், நெய் சேர்த்து செய்யப்படும் மருந்துகள் :

தேன் - 35 கிராம்
நெய் - 35 கிராம்
சதகுப்பை - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்
தேன், நெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்க. சதகுப்பை, இந்துப்பு இரண்டையும் தூள் செய்து வைக்கவும்.
200 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து அத்துடன் தேன், நெய், சதகுப்பை, இந்துப்பு சேர்த்துப் பயன்படுத்துக.
மேற்கண்ட மருந்தினால், சிறுநீர்க்கடுப்பு, வாதம், பித்தம் தீரும். விந்துவை வளர்ப்பதில் மிகச் சிறந்த மருந்து. உடலைச் செழிப்பாக்கும். உடல் வலிமைக்கும், ஆண்மைக்கும் சிறந்தது.
மற்றொரு முறை:
தேன் - 75 கிராம்
நெய் - 75 கிராம்
பால் - 100 மிலி
தண்ணீர் - 100 மிலி
மேற்கண்டவைகளை ஒன்றாய் கலந்து, காயச்சி உபயோகிக்க, உடல் வலிமையாகும். ஆண்குறிப்புண், குறி விம்முகையில் ஏற்படும் வலி, சிறுநீர்ப்பை அழற்சி ஆகியவை தீரும்.
வேறொரு முறை:
பசுநெய் - 35 கிராம்
நல்லெண்ணெய் - 35 கிராம்
வேகவைத்த ஆடு
எழும்பினுள் இருக்கும்
மஜ்ஜை - 35 கிராம்
கொட்டைக்கரந்தை
அரைத்த விழுது - 15 கிராம்
இந்துப்பு - 5 கிராம்
மேற்படி அனைத்தையும் ஒன்றாக்கி, கொதிக்க வைத்து மருந்தாக்கவும்.
வாத, பித்த, சிறுநீர்க் கோளாறுகள், விந்துக் கோளாறுகள்,
பால்வினை நோய்கள் தீரும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

அதிகப் புணர்ச்சியால் தோன்றும் நோய்கள்:

1. அடிக்கடி உறவு கொள்வதால் தேகம் இளைத்து, பலவீனமடையும்
2. ஆஸன்வாய், ஆண்குறி, சிறுநீர்ப்பை, முழங்கால், கணுக்கால், இடுப்பு எலும்பு ஆகியவற்றில் வலி ஏற்படும்.
3. இதயநோய்கள், ஆஸ்துமா, விந்துவுடன் இரத்தம் கலந்து வெளியேறுதல் காணும்.
4. விந்து தானே வெளியாகுதல், பயம், கை கால் நடுக்கம், செவிட்டுத்தன்மை ஏற்படும்.
5. விரைவீக்கம், வாயு, சிறுநீர், மலம் தடைபடிதல், மனத்தளர்ச்சி நோய் ஆகியன ஏற்படும்.
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால், சிறுநீரின் நிறம் மாற்றமடையும். ஆண்குறி, சிறுநீர்ப்பை, விதைப்பை ஆகியவற்றில் வலி ஏற்படும். இவைகளுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், ஆண்குறி துவண்டு, விறைப்பு நிலை ஏற்படாது, விதைப்பை வீக்கம் ஏற்படும்.
சிகிச்சை முறைகள் :
கோரைக்கிழங்கு - 10 கிராம்
விளாமிச்சைவேர் - 10 கிராம்
சிற்றாமுட்டி - 10 கிராம்
சரக்கொன்றை - 10 கிராம்
கடுகு ரோகிணி - 10 கிராம்
மஞ்சிட்டி - 10 கிராம்
மூக்கிரட்டை - 10 கிராம்
தான்றிக்காய் - 10 கிராம்
சீந்தில்கொடி - 10 கிராம்
மூவிலை வேர் - 10 கிராம்
ஓரிலை வேர் - 10 கிராம்
கண்டங்கத்தரி - 10 கிராம்
முள்ளுகத்திரி - 10 கிராம்
நெருஞ்சில் - 10 கிராம்
ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாய் பொடித்துக் கொள்ளவும்.
இவைகளை அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதுக்க வைத்து நாலில் ஒரு பங்காய் சுண்டக் காய்ச்சவும். பின்னர் வடிகட்டி, அத்துடன் 1லிட்டர் பசும்பால் சேர்த்து, மீண்டும் கொதிக்க வைக்கவும். இதையும் நாலில் ஒரு பங்காய் சுண்டக் காய்ச்சவும்.
இத்துடன், ஆட்டுக்கால் சூப் கால் லிட்டர், நெய் 100 கிராம்,
தேன் 100 கிராம், சதகுப்பைத்தூள் 20 கிராம், இந்துப்பு 10 கிராம் சேர்த்து, இளஞ்சூட்டில் சாப்பிடவேண்டும்.
இம்மருந்தினால், உடலில் சதை வளரும். வலிமை பெருகும். விந்துவை வளர்க்கும். அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபட்டு, மெலிந்துபோன தேகத்தை தேற்றும். இருமல், இரைப்பு, தொடையிடுக்கில் வரும் கட்டி, வீக்கம், சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி, சிறுநீர்ப்பிடிப்பு, சிறுநீர்க் கடுப்பு ஆகியன தீரும்.
வேறொரு முறை:
கொட்டைக்கரந்தை - 45 கிராம்
கோதுமை - 10 கிராம்
கருப்பு உளுந்து - 10 கிராம்
சுண்டல் - 10 கிராம்
துவரம் பருப்பு - 10 கிராம்
பச்சை பயிறு - 10 கிராம்
பச்சரிசி - 10 கிராம்
எள் - 10 கிராம்
கொள்ளு - 10 கிராம்
பீன்ஸ் பயிறு - 10 கிராம்
இவைகளையும் ஒண்றிரண்டாய்ப் பொடித்து
கொட்டைக்கரந்தையுடன் சேர்த்து, கால் லிட்டர் தண்ணீர், கால் லிட்டர் பால் சேர்த்துக் காய்ச்சவும். பால் மட்டும் எஞ்சியிருக்கும் பதத்தில் இறக்கி தேன், நெய், இந்துப்பு சேர்த்து சாப்பிடவும்.
புணர்ச்சியின் போது மேல் மூச்சு வாங்குதல், அதிகமாய் வியர்த்தல், உடம்பு முழுக்க பரவியுள்ள வாதம், சிறுநீர்க் கோளாறுகள் ஆகியவற்றை நீக்கி நல்ல நினைவாற்றல் தரும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

மூளை பலமடைய லேகியம்:

பருத்தி விதைப்பருப்பு - 35 கிராம்
வாதுமைப் பருப்பு - 35 கிராம்
சாரப்பருப்பு - 10 கிராம்
கசகசா - 10 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
மூங்கிலுப்பு - 5 கிராம்
ஜாதிபத்திரி - 5 கிராம்
மேற்கண்டவைகளை நன்கு பெற்றது பொடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்.
பசுநெய் - 75 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
பன்னீர் - 100 கிராம்
பன்னீரில் சர்க்கரையைக் கரைத்து பாகாக்கி, சூரணத்தைக் கொட்டி கிளறி. நெய் சேர்த்து இறக்கவும்.
காலை, மாலை 10 கிராம் அளவில் சாப்பிட, மூளையைப் பலப்படுத்தி, தாது விருத்தியும், ஆண்மையும் உண்டாகும்.
மூளையைப் பலப்படுத்த, வல்லாரை மாத்திரை, தூதுவளை லேகியம், சங்கு புஷ்பம், அமுக்கரா சூரணம், வாளுளுவை அரிசி சூரணம், கஸ்தூரி மாத்திரை, லிங்கச் செந்தூரம், ஸாரஸ்வதா அரிஷ்டம் போன்ற மருந்துகள் மூளையைப் பலப்படுத்தவும், இரத்த விருத்தி உண்டு பண்ணவும் மிகச் சிறந்த மருந்துகளாகும்.
இனி ஈரல் பலப்பட சில மருந்து முறைகளை வரும் பக்கங்களில் காணலாம்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை ஒரு அறிவியலாளர் கண்டறிந்துள்ளார்.

விடியும்வரை தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுவதால் ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக 60 வினாடிகளில் எளிதாக உறங்க '4-7-8டெக்னிக்' முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.


இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிறது. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது. இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் கூறியுள்ளார்.


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

இராஜ உறுப்புகளின் பலவீனமும், ஆண்மைக் குறைவும்:

உடம்பின் மிகப்பிரதானமான உறுப்புகளான மூளை, இருதயம், ஈரல், சிறுநீரகம் இவை நான்கின் செயல்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், நரம்பு மண்டலமும், இரத்த ஓட்டமும் மிகவும் சீர்கேடடைந்து, ஆண்மையும் சீர்கேடடைகிறது. ஆக, ஆரோக்கியமான உடற்கூறுக்கும், ஆண்மையைப் பெருக்குவதற்கும், இராஜ உறுப்புகளை பலப்படுத்த வேண்டியிருக்கிறது.
மூளையைப் பலப்படுத்த சில மருந்துகள்:
அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடுதல், கள், சாராயம், பிராந்தி, அபின், கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாதல் எடுத்துக் கொண்ட வேலையில் அதீத ஈடுபாடு காட்டி, சூழ்நிலையை மறப்பது, சில அதிர்ச்சியான செய்திகள் மனநிலையைப் பாதிப்பது ஆகியன மூளையை பலவீனப்படுத்துகிறது. இதனால் மூளை நினைவாற்றலை சிறிது சிறிதாக இழக்கிறது.
ஞாபக மறதி, மனக்குழப்பம், மன உளைச்சல், மன பயம் இவைகளால் நரம்புகள் தளர்ந்து, தாது நக்ஷ்டத்தையும், ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்துகிறது.
கடுக்காய் தோல் - 50 கிராம்
தான்றிக்காய் - 50 கிராம்
நெல்லிமுள்ளி - 50 கிராம்
கற்கடகசிங்கி - 50 கிராம்
இவைகளை நன்கு சூரணித்து வைத்துக் கொள்ளவும்.
பசு - 100 கிராம்
தேன் - 500 கிராம்
தேனை அடுப்பேற்றிக் காய்ச்சி, நுரைநீக்கி சூரணங்களைப் போட்டுக் கிளறி, நெய்யை உருக்கி சேர்த்துப் பத்திரப்படுத்தவும்.
காலை,மாலை இரு வேளைகள் 10 கிராம் வீதம் சாப்பிட, அதி உக்ஷ்ணம் தணிந்து, இரத்தம் சுத்தமாகி, நரம்புகள் விரைப்பான நிலை அடையும். கபாலசூடு தணிந்து, மூளை பலமாகும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

இயற்கை உணவு;

எது ரத்தத்தை சுத்திகரிக்கிறதோ, எது ரத்தத்தில் பிராண சக்தியை அதிகப்படுத்துகிறதோ,அதுவே மிகச் சிறந்த மருந்து.
ஆம் இயற்கை உணவே மருந்து , இயற்கை உணவு தயார் செய்யும் முறை கீழே விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இம்முறையை அனைவரும் பின்பற்றி பயன் பெற வேண்டும்.
பச்சடி செய்முறை;
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள் அனைத்தையுமே பச்சடியாக செய்து உண்ணலாம். உதாரணமாக,
புடலங்காயை சிறிதாக அரிந்துகொள்ளுங்கள்,சாம்பார் வெங்காயம் இரண்டு, பச்சைமிளகாய் இரண்டு,கொத்தமல்லி இலை தேவையான அளவு,இவைகளையும் சிறிதாக அரிந்து புடலங்காயுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சம்பழம் முழுவதும் பிழிந்து, ஒரு கப் தயிர் சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்றாக பிசையுங்கள்.
இதோ பச்சடி தயார். காலை உணவில் தினசரி ஒரு பச்சடி வரும்படி பார்த்துக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை ஒரு வேளை உணவுக்கு பதிலாக கீழே சொல்லப்படுகிற காய்களை பச்சடியாக செய்து பயன்படுத்தலாம்.
சிறந்த பச்சடிகள்;
1.பகற்காய் பச்சடி 
2.கோவைகாய் பச்சடி
3.சுண்டைக்காய் பச்சடி 
4.வாழைத்தண்டு பச்சடி
5.வாழைப்பூ பச்சடி 
6.வெங்காயப்பச்சடி
7.அவரைப்பிஞ்சு பச்சடி 
8.புடலங்காய் பச்சடி
9.கத்திரிப்பிஞ்சு பச்சடி 
10.பீர்க்கம் பிஞ்சு பச்சடி

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரை வகைகள்;

1.முருங்கைக்கீரை 2.அகத்திக்கீரை
3.பொன்னாங்கண்ணிக்கீரை 4.சிறுகீரை
5.அரைக்கீரை 5.வல்லாரைக்கீரை
7.தூதுவளைக்கீரை 8.முசுமுசுக்கைக்கீரை
9.துத்திக்கீரை 10.மணத்தக்காளிக்கீரை
11.வெந்தயக்கீரை 12.கொத்தமல்லிக்கீரை
13.கறிவேப்பிலை
கீரைகளில் பெரும்பான்மையாக், கால்சியம், புரதம், இரும்புச்சத்துகள் கிடைக்கிறது. கீரைகளில் மாவுப்பொருள் மிகவும் அரிது. எனவே கீரைகள் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழவகைகள்;
1.விளாம்பழம் -50கிராம்
2.அத்திப்பழம் -3எண்ணிக்கை
3.பேரிச்சம்பழம் -4 எண்ணிக்கை
4. பெரிய நெல்லிக்காய் -5 எண்ணிக்கை
5.அருநெல்லிக்காய் -100 கிராம்
6.நாவல் பழம் -100கிராம்
7.மலை வாழை -30 கிராம்
8.அன்னாசிப்பழம் -40கிராம்
9.மாதுளம்பழம் - 90கிராம்
10. எலுமிச்சை -1 எண்ணிக்கை
11.ஆப்பிள் -75 கிராம்
12.பப்பாளிப்பழம் -75கிராம்
13. கொய்யாப்பழம் -75கிராம்
14.திராட்சை -100கிராம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழங்களில் ஏதேனும் ஒன்று மட்டும் தினசரி சாப்பிடலாம். கொடுக்கப்பட்ட எடையளவு மற்றும் எண்ணிக்கையை மனதில் கொண்டு சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயின் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் நேரடி இனிப்பு சாப்பிட நேர்ந்தால் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு, பிற உணவு பொருட்களையும் மாவுப்பொருட்களையும், தவிர்ப்பது நல்லது. அப்படி இருக்கும் பட்சத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட குளுகோஸ் எளிதில் ஜிரணிக்கப்படுகிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும் சாறு வகைகள்;
1.எலுமிச்சை சாறு -200மில்லி
2.இளநீர் -200மில்லி
3.வாழைத்தண்டு சாறு -200மில்லி
4.அருகம்புல் -100மில்லி
5.நெல்லிக்காய் சாறு -200மில்லி
6.கருவேப்பிலை சாறு -100மில்லி
7கொத்தமல்லி சாறு -100மில்லி
(கொடுக்கப்பட்டுள்ள சாறுகளில்) ஏதேனும் ஒன்று மட்டும் எடையளவு மீறாமல் தினசரி சேர்த்துக் கொள்ளவும்.
சர்க்கரை நோயாளிகள் இளநீர் சாப்பிடக்கூடாது என்ற தவறான் அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகிறது.
இளநீரில், இளமைத்தன்மையுள்ள கால்சியம் காணப்படுகிறது.அதாவது மருத்துவ குணம் கொண்ட கால்சியம் இதனால் இளநீர் உள்ரணம் ஆற்றுவதிலும், எலும்புகளைப் பலப்படுத்துவதிலும், மூத்திரை தாரைகளை சுத்தப்படுத்துவதிலும்,சிறுநீரகங்களை நன்கு இயங்கச் செய்வதிலும் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒன்று அல்லது இரண்டு இளநீர் சாப்பிடலாம் தவறில்லை.
இயற்கை உணவும் நீரிழிவும்;
நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும், நிரந்தர குணம் தருவதிலும் இயற்கை உணவின் பங்கு மிக இன்றியமையாதது, இயற்கை உணவுகளில் கார்போஹைட்ரேட் மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகிறது.இதனால் இயற்கை உணவை உணவாக கொண்டால் நீரிழிவுக்கு நிரந்தர குணம் விரைவில் காணப்படும்.
ரத்த சிவப்பணுக்களைப் பெருக்கி உடம்புக்கு எதிர்ப்புத்திறன் தருகிறது. ரத்தத்தில் கலந்துள்ள கார்4பன் மூலக்கூறுகளை வெளியேற்றுகிறது .ரத்தத்தில் பிராண சக்தி அதிகரிக்கிறது.
இதனால் இதயம், மூளை, நரம்பு,எலும்பு,சிறுநீரகம் பலப்படுறது.
ஒரு காயை சமைத்தாலோ, அல்லது எண்ணேயிலிட்டு வறுத்தாலோ,அதில் கார்பன் மூலக்கூறுகள் மிகுந்து விடுகிறது.ருசிக்கு அடிமைப்பட்ட மனித தேகம் தான் நித்தம் ஒரு வியாதியில் விழ்ந்து கிடக்கிறது.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in