வெள்ளி, 13 மே, 2016

சுவாச நோயின் வகைகள்:

மகா சுவாசம்
ஊர்த்வ சுவாசம்
சின்னச் சுவாசம்
சூத்ர சுவாசம்
தமரக சுவாசம்
என 5 ஆக சுவாச நோய் வகைப்படுத்தப்படுகிறது. மார்பிலும் விலாப்பக்கங்களிலும், வலி வயிற்றுப்பொருமல், தலையில் கடுமையான வலி முதலியன சுவாசநோயின் குணங்களாகும்


1.மகா சுவாசத்தின் குணங்கள்:
கர் முர் என மிகவும் சப்தத்துடன் மூச்சுத் திணறல் ஏற்படும் னேந்திரியங்கள் சரியான நிலையில் இருக்காது எதைக்கண்டாலும் வெறுப்பு காணும் மலமூத்திரம் தடைப்படும்.பேச முடியாமல் குரல் தடைப்படும் .நோயாளி விரைவில் பலவீனமாவான் அடிக்கடி தொண்டை வறண்டு விடும் .விரைவில் சிகிச்சை செய்யாவிட்டால் நோயாளி மரணமடைவான் சிகிச்சை செய்யாவிட்டால் நோயாளி மரணமடைவான்


2.ஊர்த்வ சுவாசம்:
வெளியே விடப்படும் சுவாசம் நீண்டும் உள்ளிழுக்கும் சுவாசநேரம் குறைந்தும் காணப்படும் மார்பில் கபம் கட்டிக்காணப்படும் . நோயாளி மேல் நோக்கி விழித்து ,விழிகளை அங்கும் இங்குமாய் உருட்டி விழிப்பான். அடிக்கடி மயங்கி விழுவான் வாய் வெளுக்கும் மர்ம உறுப்பில் வெட்டு விதைப்போன்ற குத்துவலி உண்டாகும் இதுவும் சிகிச்சை மேற்கொள்ள தாமதித்தால் மரணம் நிச்சயம்


3.சின்ன சுவாசம் 
மிகுந்த கஷ்டத்துடன் விட்டுவிட்டு மூச்சுவிடுவான். இருதயத்தைப் பிளப்பது போன்ற வலி உண்டாகும். வயிற்று உப்புசம்,மூர்ச்சை,கண்களில் நீர்வடிதல்,அடிக்கடி வியர்வை உண்டாதல்,கண் சிவத்தல்,வாய் உலர்தல், அடிக்கடி பிதற்றுதல்,தேகம் குன்றுதல் போன்ற குறிகளைக் காட்டி பிராண அவஸ்தை ஏற்படும்.


4.தமரக சுவாசம்:

வாயு தன்னிலை மாறி கபத்தை மேலே தள்ளி ,தலை கழுத்து,முதலான அங்கங்களை அடைந்து பீனிசத்தை (மூக்கில் நீர்பாயுதல்) உண்டாக்குகிறது.வாயுவினால் கபம் தடைப்பட்டு,மிகவும் கஷ்டம் உண்டாக்கூடிய வகையில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் அடிக்கடி மயக்கம் .நாவறட்சி விடாத இருமல் ,சிரமப்பட்டுபேசுதல்,படுத்தால் ,சுவாச இழுப்பு ஏற்படுதல் ,உஷ்ணமான பதார்த்தத்தில் விருப்பம் ஏற்படுதல்,கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படுதல் ஆகிய குறிகளை உடையது.
இந்நோயானது மேகம்,குளிர்ந்த நீர் ,குளிர்ந்த காற்று, கிழக்கிருந்து வீசும் காற்று, கபத்தை உண்டாக்கும் உணவுப் பதார்த்தங்கள் ஆகியவற்றினால் இந்நோய் அதிகமாகும்.
ஆரம்பநிலை தமரக சுவாச நோய் எளிதில் சிகிச்சைக்கு உட்படும்.
இது காறும் சித்த மருத்துவத்தில் சுவாஸ நோய் வகைகள் மற்றும் குறி குணங்கள் பற்றிக் கண்டோம் .இனி ஆஸ்துமாவை வராமல் தடுக்கும் முறைகளையும், வந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகளையும் பற்றி சற்றுக் காண்போம்.


Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

              www.drarunchinniah.com

காசத்தின் வகைகள்

1.வாத காசம்
2.பித்த காசம்
3.கப காசம்
4.சத காசம்
5.சய காசம்
என 5ஆக சித்த மருத்துவம் பிரிக்கிறது


1.வாத காசத்தின் குணங்கள்:
இருதயம் பொட்டு தலை,வயிறு,விலாப்பக்கங்கள் முதலிய இடங்களில் வலி முகம் வாடுதல் ,உடல் பலவீனமடைதல் குரல் வளம் குறைதல் கோழைக்கட்டு உண்டாதல் போன்ற குறிகளைக் காட்டி வறட்டு இருமலாக அடிக்கடி இருமச்செய்யும்


2.பித்த காசத்தின் குணங்கள்:
மார்பில் சுரீ ரென்ற எரிச்சல் ,காணுதல் ,அடிக்கடி சுரம் காணுதல் ,வாய்க்கசப்பு, குமட்டல்,தாகம் ,வாய் உலர்தல் பச்சை நிறமும் அதிகக் காரமுமானவாந்தி எடுத்தல் ஆகிய குறிகளைக் காட்டி இருமல் உண்டாகும் உடம்பு இரத்தம் சுண்டி வெளுத்துப் போகும்.


3.கப காசத்தின் குணங்கள்:

அடிக்கடி கோழை கட்டுதல், அடிக்கடி தலைவலி காணுதல் உடம்பு கணத்தல்,ருசியின்மை ஏற்படுதல் உடம்பில் அரிப்பு ஏற்படுதல் போன்ற குறிகளைக் காட்டி இருமல் வரும்

4.சத காசத்தின் குணங்கள்:
அடிக்கடி உடலுறவில் அதிக தூரம் நடத்தல் ,கண்டவரிடம் சண்டையிடுதல் அதிக பாரத்தைத் தூக்குதல் யானை, குதிரை இவைகளில் அடிக்கடி சவாரி செய்தல் போன்ற காரணங்களினால் வாயுக்கோளாறடைந்து வறண்ட தேகிகளின் மார்பைத்தாக்கி இருமலை உண்டாக்குகிறதுஆரம்பத்தில் வறட்டு இருமலாகக் காணாப்பட்டு பின்னர் இரத்தம் கலந்த கோழை வெளிப்படும் தொண்டையிலும் மார்பிலும் தாங்கமுடியாத வலி ஏற்படும்.மூட்டுக்களில் வலி காய்ச்சல் காணுதல் சுவாசம் வாங்கல் நாவறட்சி புறாவின் சப்தத்தையொத்த இருமலும் ஏற்படும்.


5.சய காசத்தின் குறிகள்:
பசியில்லாத வேளையில் சாப்பிடுதல் ,அல்லது நல்ல பசியில் குறைவாகச் சாப்பிடுதல் ,உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுதல் ,மல மூத்திர வேகங்களை அடக்குதல் அடிக்கடி உடலுறவில் ஏற்படுதல் ,போன்ற காரணங்களினால் வாத பித்த கப நாடிகள் மூன்றும் கோளாறடைந்து தேக பலம் கெட்டு காசத்தை உண்டாக்குகிறது
இதனால் நோயாளிக்கு உடம்பு வலி அடிக்கடி காய்ச்சல் காணுதல் மயக்கம் ஆகியன ஏற்பட்டு நாளுக்கு நாள் இளைத்து வருவான் தேகம் எலும்பும் தோலுமாகி இரத்தத்துடன் கோழை வெளிப்படும் .சய காசம் உடல் மெலிவு கொண்டவர்களுக்கு ஏற்பட்டால் குணப்படுத்துவது அசாத்தியம். ஒரளவு பலமுள்ளவர்களுக்கு சாத்தியம் கிழவர்களுக்கு சய காசம் கண்டால் குணப்படுத்த முடியாது.


Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

              www.drarunchinniah.com

ஸ்டீராய்டு மருந்துகள் (Steroids);

பெரும்பாலும் நவீன மருத்துவத்தில் ஆஸ்துமாவிற்கு ஸ்டீராய்டு சார்ந்த மருந்துகளே
தரப்படுகிறது. அது அவர்களுக்கு சரியாகவும் படுகிறது.ஸ்டீராய்டு மருந்துகள் உடனடியாக செயல்பட்டு மூச்சுக்குழலில் ஏற்பட்ட தொற்றினை (Inflammation) நீக்கி, உடனடியாக இயல்பான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது.
ஆஸ்துமாவிற்கு நவீன மருத்துவம் கீழ்க்கண்ட இரண்டு ஸ்டீராய்டுகளை பரிந்துரை செய்கிறது

1.அனபாலிக் ஸ்டீராய்டு (anabolic steroids)
2.கார்டிகோஸ்டீராய்டு ( corticosteroids)
ஸ்டீராய்டுகள் பெரும்பாலும் போதைத்தன்மை வாய்ந்தவை. ஆனால் ஆஸ்துமாவில் நவீன மருத்துவம் இவ்விரண்டு ஸ்டீராய்டுகளையும்( preventers), தடுப்பான்கள் என்று சொல்லுகிறது.

ஸ்டீராய்டு உள்ளிழுப்பான்கள்(steroids inhalers):ப்ளூட்டிகாசோன் (fluticasone)பட (budesonide)போன்ற ஸ்டீராய்டு உள்ளிழுப்பான்கள் பரவலாகக் கிடைக்கின்றன.
இத்தகைய உள்ளிழுப்பான்கள்,குறைந்த அளவில் செயல்படும் திறன் கொண்டவை .நோயாளிக்கு ஒரளவு குணம் கிடைக்கவே 5முதல் 7நாட்கள் வரை ஆகும் 
ஆஸ்துமா மிகத் தீவிரமாக நிலையில் (prednisolone என்ற ஸ்டீராய்டு மாத்திரை தரப்படுகிறது இந்த ஸ்டீராய்டு மாத்திரையானது ஸ்டீராய்டு உள்ளிழுப்பானை விட 30 பங்கு வீரியம் உள்ளதாகக் கூறப்படுகிறது இம்மாத்திரையை 5 முதல் 7 நாட்கள் உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏதுமில்லை என்று நவீன மருத்துவம் கருதுகிறது ஒரு வாரத்திற்கு மேல் இம் மருந்தை உபயோகித்தால் நாவறட்சி,வாய்ப்புண் தொண்டைப்புண், தொண்டை எரிச்சல் ஏற்படுவதாக நவீன மருத்துவம் கருதுகிறது 
சோடியம் குரோமோகிளைகேட் உள்ளிழுப்பான்கள் (sodium cromoglycate inhalers)
இவ்வகை உள்ளிழுப்பான்கள் மூச்சுக்குழலை உடனடியாக விரியச்செய்து,மூச்சுத் திணறலைப் போக்குவதாக குறிப்பிடுகிறார்கள் ஸ்டீராய்டு உள்ளிழுப்பான்களை விட இவ்வகை உள்ளிழுப்பான்கள் பக்க விளைவு இல்லாதது என்று குறிப்படுகின்றன .ஒரு நாளைக்கு நான்கு முறை வரை உபயோக்கலாம் என்று நவீன மருத்துவம் கூறுகிறது 
Theophyline,என்ற மாத்திரை ஆஸ்துமாவில் மிகச்சிறந்த பலன் தருவதாகவும் இதில் ஏதும் பக்க விளைவுகள் இல்லையென்றும் கூறப்படுகிறது இருப்பினும் நவீன மருத்துவம் மேற்கொள்ளும் நோயாளி,மருத்துவரிடம் கட்டுண்ட(addict)நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது  மேற்கூறப்பட்ட சிகிச்சை முறைகள் அனைத்துமே ஆஸ்துமாவை குணப்படுத்த செயற்படுத்தும் வழிமுறைகள் அல்ல அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். 
அது சரி எப்போது குணப்படுத்துவார்கள்..?அது அவர்களால் இயலாத காரியம்.

சித்த மருத்துவமும் ஆஸ்துமாவும்:
சித்த மருத்துவம் ஆஸ்துமாவைக் குணப்படுத்துகிறது என்றால் நீங்கள் நம்புகிறீர்களா?
நான் நம்புகிறேன்.கல்தோன்றி,மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடிமக்கள் வாழ்ந்த நம் தமிழ்நாட்டில் சித்தர்கள் அரிய மருத்துவ பொக்கிக்ஷ்ங்களை அழியாக் காவியமாய் விட்டுச் சென்றிருக்கிறார்கள் ஓலைச்சுவடிகளில் வரையப்பெற்ற ஒப்பற்ற மருந்துகள் தான் எத்தனை…?நோயை முற்றிலும் நீக்க அவர்கள் வரையறுத்த ஒழுக்க முறைகள் தான் எத்தனை …?ஒரே மருந்துதான் ஆனால் பல நோய்களுக்கும் பாங்காய் கேட்கும். ஆஸ்துமாவிற்கு ,சித்தர்கள் விட்டுச்சென்ற மருந்துகள் தான் எத்தனை…?நவீன மருத்துவத்தின் மோகத்திரையில் வீழ்ந்து வழியே இல்லையா என ஏங்கித் தவிக்கும் லட்சோபலட்ச மக்களையும் வாரியணைத்து வழிகாட்டும் மருத்துவம் நம் சித்த மருத்துவம்.

ஆஸ்துமாவிற்கு எண்ணற்ற மருந்துகள் நம் சித்தத்தில் உண்டு .அத்தனையும் நோயைக் குணப்படுத்தும் மணியான மருந்துகள்.,
ஆஸ்துமா –சித்தம் சொல்லும் காரணங்கள்:
கீழ்க்கண்ட காரணங்கள் ஆஸ்துமா வர ஏதுவாகும் என சித்த மருத்துவம் கூறுகிறது
1.புகை,கரித்தூள் போன்றவை மூக்கில் புகுதல்
2.ஜீரணிக்கப்படாத அன்னரசம் மேல்நோக்கித் தள்ளப்படுதல்
3.அதிக அளவில் தேகப்பயிற்சி செய்தல்
4.அடிக்கடி புசித்தல் விரைவாக புசித்தல்
5.தும்மல் போன்ற இயற்கை உபாதைகளை அடக்குதல்
போன்ற காரணங்களால்,பிராணவாயு உதானவாயுவுடன் சேர்ந்து கோளாறடைந்து இருமலை
உண்டாக்குகிறது இதுவே வளர்ந்த நிலையில் ஆஸ்துமா ஏன்றாகிறது.

Contact
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667
              www.drarunchinniah.com

ஆஸ்துமாவை கண்டறிய பரிசோதனை முறைகள்;

இரத்தத்தில் ஈஸ்னோபீலியாவின் அளவு கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், மூச்சுக்குழல்களில் எவ்வித அழற்சியும் ஏற்படுவதில்லை. எனவே, ஒவ்வாமைக்கு உட்பட்ட நபருக்கு இரத்தத்தில் ஈஸ்னோபீலியா அளவை கண்டறிதல் மிகவும் நல்லது.
ஆஸ்துமா நோயாளிகளை மலப்பரிசோதனைக்கு உட்படுத்திப்பார்த்தால்,மலத்தில் ஈஸ்னோபீலியா வேளியேறுவது தேரியவரும்.
இரத்தத்தில் IGE என்றொரு எதிர்ப்புத்திறன் (Antibody) உள்ளது. இது உடலில் உள்ள பூச்சிகளிலிருந்து நம்மைப்பாதுகாக்கிறது. IGE எதிர்ப்பு திறனை இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தால் எவருக்கு குறைவான IGE எதிர்ப்புத்திறன் உள்ளதோ அவர்களுக்கு ஒவ்வாமை சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.பின்பு இதுவே ஆஸ்துமா போன்ற நோயாக உருவெடுத்து வருகிறது.
IGE எதிர்ப்புத்திறன் சோதனை கண்டிப்பாக குழந்தைகளுக்கு செய்வதால் ஒவ்வாமை மற்றும்
ஆஸ்துமாவிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.
ஆஸ்துமாவை கண்டறிய மார்புப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து, அதன் தன்மையை தகுந்த மருத்துவர் மூலம் அறியலாம்.

ஆஸ்துமாவும் நவீன மருத்துவமும்;

நவீன மருத்துவம் ஆஸ்துமாவை நான்கு வகைகளாக பிரிக்கிறது. அவை
1.சாதாரண ஆஸ்துமா(instrucnstic asthma)
2.அந்நியமான ஆஸ்துமா(extrincsic asthma)
3.மருந்துவழி ஆஸ்துமா(drug induced asthma)
4.தொழில்வழி ஆஸ்துமா(occupational asthma)
ஆஸ்துமா பரம்பரை நோய்களில் ஒன்று ஒவ்வாமையினால் ஏற்படும் ஆஸ்துமாவில் தோல்
நோய்கள்,அரிப்பு,சொரி,சிரங்கு, நமைச்சல் போன்ற தோல் நோய்களும் ஏற்படும்.
ஊஊ
ஆஸ்துமாவில் இன்னொரு வகையும் உண்டு. அது இருதய ஆஸ்துமா (cardiac asthma) என்பதாகும்.இருதய கோளாறுடன் கூடிய ஒவ்வாமை உடைய ஆஸ்துமா நோய் மிகவும் கொடியது.நவீன மருத்துவம் (Allopathy) ஆஸ்துமாவை தீர்க்க முடியாத, குணப்படுத்த முடியாத நோயாக கோடிட்டு காட்டுகிறது.ஆஸ்துமாவை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.ஆனால் குணாப்படுத்த முடியாது என்பதில் நவீன மருத்துவம் முனைப்பாக இருக்கிறது.
மூச்சுத் திணறலை உடனடியாக நிவர்த்தி செய்யக்கூடிய மருந்துகளே மிகச்சிறந்த மருந்து
என்பது அவர்களின் கோட்பாடாகும்.
Bronchodilators;
இவ்வகையான மருந்துகள் ஒரு சில நிமிடங்களிலேயே மூச்சுத் திணறலை சரி செய்து விடுகிறது. பின்பு நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை மூச்சுத் திணறலுக்கான அறிகுறி
தென்படுவதே இல்லை. மார்பை இறுக்கிப்பிடித்தாற் போன்ற உணர்வு, மூச்சை இழுத்து விடுவதில் உள்ள சிரமம் ஆகியவை இம்மருந்தினால் உடன் களையப்படுகிறது.
இம்மருந்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று 4முதல் 6 மணி நேரம் நிவாரணம் அளிப்பதாகும். மேற்கூற்பட்ட மருந்து உள்ளிழுப்பான்( inhaiers) வடிவில் கிடைக்கிறது.இத்தகைய
உள்ளிழுப்பான்கள் சல்புட்டாமல்(salbutamol)டெர்பூட்டலின்(terbutaline)என்ற பெயரில் சாதாரணமாகக் கிடைக்கிறது
பெரும்பாலும் உள்ளிழுப்பானை(inhaler)பயன்படுத்துபவர்கள் கிட்டத்தட்ட அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் அவர்களால் இழுப்பான் இல்லாமல் இயங்குவது அரிதாகிவிடுகிறது
உள்ளிழுப்பானை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் (B.P)
வந்து விடுகிறது.
Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667
              www.drarunchinniah.com

ஆஸ்துமா-அறிகுறிகள்;

1.திடீரென மூச்சிரைப்பு ஏற்படுதல்
2.விடாத இருமல்
3.விட்டு விட்டு மூச்சிழுத்தல்
4.மார்பை இறுக்கிகட்டியதை போல் உணர்தல்
மேற்கண்ட காரணிகள் ஆஸ்துமா நோயிற்கான காரணிகளாகும்.
ஆஸ்துமாவை உருவாக்கும் பிற காரணிகள்;
1.பெரும்பாலோர், உடற்பயிற்சி செய்கின்றபோது, ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிக்கு உட்படுகிறார்கள்.
2.இன்னும் சிலருக்கு நோய்க்கான அறிகுறி இரவில்தூங்கி எழுந்து, அதிகாலையில் ஏற்படுகிறது.
3.பெரும்பாலானவர்களுக்கு, சளி,ஜலதோஷம் சுவாசம் சார்ந்த பிற கோளாறுகள், வைரஸ் கோளாறினால் ஏற்படும் காய்ச்சல் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறது.
4.சிகரெட் புகை, மாசுபட்ட காற்று, கரித்தூள் ஆகிடவற்றை சுவாசிக்கும் ஒரு சிலருக்கும் ஆஸ்துமா நோய்க்கான சிலருக்கு அவர்கள் தொழில் சார்ந்து இந்நோய்க்கான அறிகுறிகள் காணப்படுகிறது,நூற்பாலையில் வேலை செய்பவர்கள், இரசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் சுரங்கத் தொழிலில் தொழில் சார்ந்த ஆஸ்துமா ஏற்படுகிறது.
6.தீவிரமான மன உணர்ச்சிகளுக்கு உட்பட்டவர்கள்,தொடர்ந்து அழுகை,விடாத சிரிப்பு ஆகியவற்றினாலும் ஆஸ்துமா நோய் குறிகள் தோன்றுகின்றன.
7.பெண்களில் சிலருக்கு கர்ப்பமுற்றிருக்கும்போது,ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டினலும் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளினாலும் இந்நோய் தோன்ற் வாய்ப்புண்டு.
8.இன்னும் சிலருக்கு அவர்கல் பிற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் இந்நோய் தோன்றுகிறது. உதாரணமாக ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும் பெரும்பாலோர் ஆஸ்துமா நோய்க்கு உட்படுகிறார்கள்.
பெரும்பாலும், ஆஸ்துமா குழந்தைப் பருவத்திலும் டீன் ஏஜ் பருவத்திலுமே, தோன்றுகிறது. குழந்தைகளுக்கு இணைந்து இந்நோய் வர ஆரம்பிக்கிறது. சரியான முறையில் தடுப்பூசி போடாத குழந்தைகளையும் தாய்பால் சரிவர தரப்படாத குழந்தைகளையும் இந்நோய் வெகுவாகப் பாதிக்கிறது.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667
              www.drarunchinniah.com


மூச்சுக்குழல் பற்றி அறிவோம்.

மூச்சுப்பாதையினை மேற்பகுதி மூச்சுப்பாதை (Upper respiratory tract) கீழ்பகுதி மூச்சுப்பாதை(lower respiratory tract) என இருவகைகளாக பிரிக்கப்படுகிறது.
கீழ் பகுதி மூச்சுப்பாதையில்தான் மூச்சுக்குழல் உள்ளது. மூச்சுக்குழலனது,வலது மற்றும் இடதுகிளை பங்கு கொள்ளும்.
மூச்சுப்பாதையின் கடைசிப்பகுதி ஆகியவை அடங்கும்.
மூச்சுக்குழல் மார்புக் கூட்டினுள் நான்கு மற்றும் 5வது முதுகெலும்பின் இடைநிலையில் வலது மற்றும் இடது கிளை மூச்சுக் குழல்களாக பிரிகின்றது.

மூச்சுக்குழல் அழற்சி நோய்;
சிகரெட் புகை,தூசி, கரி, மண்,மற்றும் உலோகத்துகள், குளிந்த காற்று,குளிந்த உணவுப்பொருள்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்லள் போன்ற வெளிப்புற காரணிகளால், மூச்சுக்குழலில்அழற்சி நோய் எற்படுகிறது,இதே போல் கிளை மூச்சுக்குழல்அழற்சி நோய்( ,நுரையீரல் காற்றறை அழற்சி நோயும்( ) மேற்கண்ட காரணங்களால் ஏற்பாடுவதுண்டு, ஆக,மூச்சுக்குழல் சார்ந்த குறைபாட்டு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது.

Contact
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667
              www.drarunchinniah.com

ஞாயிறு, 8 மே, 2016

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் !!!

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆகுவதோடு அதனை இவ்வுலகிற்கு வரவேற்கவும் தயாராகிறாள். இந்த சமயத்தில் அவளுக்கு தேவையான உடல்நல பராமரிப்பு அவசியமான ஒன்றாகும்.
கர்ப்பகாலத்தில் என்ன உணவு சாப்பிடலாம் என்பதைப்பற்றி பலரும் பலவிதமாக கூறுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் இடையில் இருப்பவர்களின் அட்வைஸ்க்கு அளவிருக்காது. எல்லாவற்றையும் கேட்டால் நமக்கு குழப்பம்தான் மிஞ்சும். குங்குமப்பூ சாப்பிடு குழந்தை சிவப்பா பிறக்கும், கருப்பு திராட்சை சாப்பிடாதே குழந்தை கருப்பாயிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இதெல்லாம் உண்மையில்லை மூடநம்பிக்கைதான் என்று கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்பகாலத்தில் பழங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்து கண்டிப்பாக இருக்கிறது.
ஒரு பெண் எல்லா நேரங்களிலும் தன்னையும், தான் சுமக்கும் குழந்தையையும் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். கருவுற்றிருக்கும் காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எளிதில் தாக்கக்கூடும்.
கர்ப்பகால நீரிழிவு நோய் எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடிய ஒன்றுதான் அதேபோல் இரத்த அழுத்தமும் ஏற்படக்கூடும். இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்று ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கலாம். எனினும், சில பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும்.
இந்த பிரச்சனைகள் உங்களையும் உங்கள் குழந்தையும் பாதித்து உயிருக்கு போராடும் நிலைமையையும் ஏற்படுத்தும். பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன் இதனை கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் பல உள்ளன.
கர்ப்பகால இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். எனினும், அவர்களின் சிறுநீரில் ப்ரோடீன் சக்தி இருக்காது. கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்களை பிரசவத்திற்கு பின் ப்ரீ க்ளம்ப்சியா நோய் பாதிக்கும் பிரச்சனை உள்ளது. சில பெண்களுக்கு 20 வாரங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.
இதனை குரோனிக் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள். இந்த வகை இரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகும் தொடரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரணமாக பிரசவத்திற்கு பிறகு சுமார் 12 வாரங்களுக்கு தொடரும். சில பெண்கள் ப்ரீ க்ளம்ப்சியா நோய் மேலும் அதிகரித்தல் மற்றும் குரோனிக் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இது இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் சிலவகை வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிபெண்கள் சில மெல்லிய உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிபெண்கள் பின்பற்றவேண்டிய அடுத்த வழி ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கவழக்கம். எந்த காரணத்திற்காகவும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உங்கள் டாக்டர் ஆலோசித்து எந்த வகை உணவை சாப்பிடவேண்டும் என்று கேட்டு அதை பின்பற்ற வேண்டும்.
இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் தனது இரத்த அழுத்த அளவுகளை தொடர்ந்து பரிசோதித்து கொள்ளவேண்டும். போதுமான இடைவெளிகளில் பரிசோதிக்க வேண்டும். உங்கள் டாக்டர் தவறாமல் அணுகுவதன் மூலம் அவற்றை கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இது எல்லா கர்ப்பிணிப்பெண்களும் பின்பற்ற வேண்டிய முக்கியமான டிப்ஸ் ஆகும். அமைதியான மனம் எல்லா அழுத்தங்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் உங்களை காக்கும். தியானம் செய்வதன் மூலமாக சிறந்த பலனை பெறலாம். தினமும 15-20 நிமிடங்கள் தியானம் செய்து செய்யலாம்.
கருத்தரித்த ஏழு நாட்களுக்குள் கருவின் செல் பிரிதல்கள் உருவாகி, சிசுவின் உறுப்புகளை நிர்ணயம் செய்து விடுகின்றன. உதாரணமாக ஒரு செல் தலையாகவும் மற்றொரு செல் இருதயமாகவும் இன்னபிற உறுப்புகளாகவும் தீர்மாணிக்கப்படுகின்றன. இந்த விதமாக வளரும் கருவின் செல்களின் தலை விதியை தீர்மானம் செய்வதில் (Determination) போலிக் அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், கருத்தரிப்பு நிகழ்வு நடப்பது மாத விடாயின் மத்திம நாட்களில். ஆனால், கருத்தரித்த விஷயம் நமக்குத் தெரிய வருவது 8 முதல் 14 நாட்கள் கழித்து, மாதப் போக்கு வராத போதுதான். மாதப் போக்கு சில சமயங்களில் ஒன்று இரண்டு நாட்கள் தள்ளி வரவும் வாய்ப்பு இருப்பதால், உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம். அப்புறம்தான் மகப்பேறு மருத்துவரை பார்க்கிறோம், அல்லது கருத்தரிப்பை உறுதி செய்யும் பரிசோதனையைச் செய்கிறோம். இவையெல்லாம் நடந்த பின்னர்தான் நாம் கரு வளர்ச்சிக்கு பொறுப்பு கொள்கிறோம். அதன் பிறகு எடுக்கப்படும் போலிக் அமிலம் ஒன்றுக்கும் உதவாது. குறைபாடு ஏதேனும் இருப்பின், போலிக் அமிலத்தால் ஒன்றும் செய்ய முடியாது. காலத்தால் பயிர் செய் என்பதன் அர்த்தம் வேளாண்மையில் புரிகிறதோ இல்லையோ, கருவாக்கத்தில் அவசியம் புரிய வேண்டும். வேளாண்மையில் மாற்று ஏற்பாட்டிற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கலாம், ஆனால், கரு வளர் தீர்மானத்தை மாற்ற முடியாது. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆகவே போலிக் அமிலக் குறைபாடு கரு உருவாக்க குறைபாட்டை ஏற்படுத்தும். இதனைக் கையாளும் விதம் பற்றி இனி பார்ப்போம்.
1. குடிநீர்: நாம் அருந்தும் குடிநீரின் தன்மைக்கு ஏற்ப போலிக் அமில தேவை மாறுபடுகிறது. நான் இப்பொழுது கூறப்போகும் விஷயம் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். காரணம், நாம் குடிக்கும் தண்ணீர் பற்றி நாம் கொண்டுள்ள கருத்து அப்படி. உண்மையில் நம் வீட்டுத் மேல் நிலைத் தொட்டியில் பாசிப் பிடித்துள்ள நீரில் போலிக் அமிலம் கணிசமாக இருக்கிறது. இவ்வித நீரைக் கொதிக்க வைக்காமல் குடித்தால், நமக்குக் கனிசமான போலிக் அமிலம் கிடைக்கப் பெறுவோம். ஆனால், நமக்கு அவ்விதமாகக் குடிக்க மனசுதான் வராது. உண்மையில் இயற்கையாக எல்லா வித நுண்கிருமிகளையும் சம அளவில் கொண்டிருக்கும் இருக்கும் நம் மேல் தொட்டி நீர் அல்லது சுகாதாரமான குளத்து நீர் நம் நோய் எதிர்ப்புச் சக்திக்கும், உயிர்ச் சத்து (Vitamins) மற்றும் தாது (Minerals) சத்துகளுக்கும் மிகவும் நல்லது. நாம் அதிகமாக சுத்தகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரில் தாதுச் சத்துக்களும் குறைவு, போலிக் அமிலம் உள்ளிட்ட உயிர் தாதுக்களும் குறைவு. ஆக, சுத்தம் சுத்தம் என்று மினரல் வாட்டர் பருகுபவர்கள்தான், உயிர் மற்றும் தாதுச் சத்துகளின் குறைபாட்டிற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் கண்டிப்பாக இயற்கையான போலிக் அமிலம் மற்றும் இரும்பு உள்ளிட்ட இயற்கையான தாதுக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. சத்துணவுகள்: போலிக் அமிலத்தோடு சமச்சீர் புரதமும் சேர்த்து எடுக்கும் போது கரு வளர்ச்சி தரமாகவும் வலுவாகவும் இருக்கும். அதோடு, நாம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளும் போது அதனுடன் போலிக் அமிலமும் இருந்தால் இரும்புச் சத்து கிரகிப்பு மிக அதிகமாக இருக்கும். இரத்தச் சோகை உள்ளவர்கள் போலிக் அமில உருவில் இரும்புச் சத்தெடுக்கும் போது விரைவாக, சோகை நீங்கி குணம் கிடைக்கும்.
3. போலிக் அமில உணவுகள்: போலிக் அமிலம் அதிகமாக உள்ள கீரைகளான பசலைக் கீரை, புளிச்சைக் கீரை, அசைவ உணவுகளான முட்டை, ஈரல், பால், நெய், வெண்ணை, உலர்ந்த திராட்சை, பீன்ஸ், துவரை, சோயா, தேங்காய், முளைக் கட்டிய பயறுகள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, பீட்ரூட், காரட், முட்டைக் கோஸ், புருக்கோலி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப் பழம், ஆரஞ்சு, பீச், முழு தானிய உணவுகள், பாதாம், பிஸ்தா ஆகியவற்றில் கனிசமான போலிக் அமிலங்கள் இருக்கின்றன.
4. போலிக் அமிலத்தை திருடும் உணவுகள்: இரசாயன குளிர் பானங்கள் (Soft Drinks), பனிப்பாகு (Ice Creams), பாலாடை இனிப்பு (Chocolate), துரித உணவுகள் (Fast Foods) தேனீர் (Tea), குழம்பி (Coffee) உள்ளிட்ட உணவு வகைகள் நம் உணவிலும் இரத்தத்திலும் உள்ள போலிக் அமிலத்தை திருடிக் கொள்ளும். இந்த வேண்டாத விஷயத்திற்குப் பணம் செலவு செய்து பாதிப்பை வாங்க வேண்டுமா?
அன்பான தோழியர்களே! போலிக் அமிலக் குறைபாடு இருப்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட அறிகுறிகள் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
1. கை கால்கள் சில்லிட்டுப் போதல்.
2. கை கால்களில் சிறு உதறல் ஏற்படுதல்
3. குதிக்கால் வலி பிரதாணமாக இருத்தல்.
4. தோல் வெளுப்பாக இருத்தல்.
5. ஞாபக மறதி அதிகமாக இருத்தல்
6. சதைப் பிடிப்பும், வாய்வுப் பிடிப்பும் அதிகமாக இருத்தல்
7. நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல்.
8. இரத்தச் சோகை அதிகரித்தல்
9. மத்தியம் சாப்பிட்ட பின், கொஞ்சமாவது தூங்கினால்தான் அடுத்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுதல்.
இல்லறப் பெண்களே! போலிக் அமிலம் எடுப்பீர்!
வளமான, தரமான கரு வளர்ச்சியை பெறுவீர்!
கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை... 
பொதுவாக பெண்கள் தமது கற்பகாலத்தில் எவ்வாறான உணவு உட்கொள்ளவேண்டும் என்பதை தெரியாமல் சில உணவுகளை தவிர்த்து விடுகின்றார்கள். ஆகவே கர்ப்பிணிப் பெண்களுக்கான சில மருத்துவக் குறிப்புக்கள்.
கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மருந்து உட்கொண்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழைப்பழம் விதவிதமாக இருக்கும்.
கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. தேவைக்கேற்ப குடிக்கலாம். 
கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இரும்பு சத்து..
குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன் அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால், அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
நச்சாகும் இரும்பு சத்து...
சிறு குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
காய்கறிகள் கீரைகள்...
சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.
முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக் கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன், ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது
கருப்பு திராட்சை...
கருப்புத் திராட்சையில் வைட்டமின் `ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது, அந்தத் தாய்க்கும் நல்லது. இப்பழத்தில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்புத் திராட்சை குறித்த அச்சம் வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குங்குமப்பூ...
கர்ப்பகாலத்தில் பாலில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது இதுவும் உண்மையில்லையாம். குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. கரு உருவாகும் பொழுதே குழந்தையின் நிறம் மற்றும் இதர பண்புகளுக்கு, ஜீன்களே முக்கிய காரணம்.அதேசமயம் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, அதனை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் வலுப்பெறும். ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.
மேலும் குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
நெல்லிக்காய், ரோஜா இத்ழ்கள், தேன், கல்கண்டு, சேர்த்து குல்கந்து செய்து சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும்.
குழந்தை வளர்ச்சிக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை விரிவடைய புரதச்சத்து மிகவும் ஆவசியம். ஆகையால் உணவில் அதிகமாக பால், முட்டை, சீஸ், பயறு சேர்க்கவும்.
இருப்புச்சத்து நிறைந்த மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளை 5வது மாதத்தில் இருந்து எடுக்கவும்.
அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள், ஈரல் சேர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
அதிக காரமான உணவுகள், எண்ணெய் பண்டங்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
உணவுகள் அதிகம் சூடு இல்லாமல் சாப்பிடவும்.
மலசிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்லவும்.
மனச்சோர்வுடன் இருந்தால் உடலில் சுரக்கும் சில சுரப்பிகள் சரியாக செய்யல்படாமல் போய்விடும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு எடை கம்மியாக பிறக்க வாய்ப்பிருக்கு. ஆகையால் எப்போதும் கலகலப்பாக இருங்கள்.
தினசரி சிறிது நேரம் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்ச்சி செய்யவும்.
முடிந்த வரை நிறைய நேரம் ஓய்வெடுங்கள்.
வயிற்றை காய போடாமல் 2 மணினேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.
கர்ப்பகாலம் பெண்களின் தவக்காலம் என்பார்கள். பத்துமாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. அதற்கு
தாயானவள் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுத்தால் அது குழந்தையின் தலைமுறையை பாதிக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். எனவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.
துத்தநாகம்..
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு துத்தநாகச்சத்து சரியான அளவில் இருக்கவேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஏற்றது. எனவேதான் கர்ப்பிணி தாய்மார்கள் தினசரி உணவில் 15 மில்லிகிராம் புரதச்சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி பிறக்கும் குழந்தைகளுக்கு தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும் என்று மருத்துவர்கள் அச்சுறுத்துகின்றனர்.
போலிக் அமிலம்...
போலிக் அமிலச் சத்தானது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. எனவேதான் தினசரி 400 முதல் 800 மைக்ரோகிராம் வரை போலிக் அமிலம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். இது பச்சைகாய்கறிகளிலும், இலைக்காய்கறிகளிலும் காணப்படுகிறது.
மெக்னீசியம்..
கர்ப்பகாலத்தில் உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மெக்னீசியம் உதவுகிறது. எனவே தினசரி 200 மில்லிகிராம் அளவிற்கு மெக்னீசியம் சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தானியங்கள், பருப்புகள், இலைக்காய்கறிகளில் மெக்னீசியம் அதிக அளவில் கிடைப்பதால் கர்ப்பகாலத்தில் அவற்றை தவறாமல் உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பி வைட்டமின்கள்...
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. எனவே வைட்டமின் பி உணவுகள் இந்த மனஅழுத்தத்தை தடுக்கிறது. தினசரி 200 மில்லிகிராம் பி6 வைட்டமின்களை உட்கொண்டால் அது கரு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் வைட்டமின் பி 12 உணவுகள் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஏற்றது.
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனித மூளைக்கு அவசியமானது. டிஹெச்ஏ குறைபாடு ஏற்படாமல் இது தடுக்கிறது. சல்மான், டுனா வகை மீன்களை கர்ப்பிணிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 1500 மில்லிகிராம் வரை கால்சியம் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி சத்தும் அவசியமானது. கால்சியம் மாத்திரைகளாக உட்கொள்வதை விட யோகர்டு போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
இரும்பு சத்து...
கர்ப்பிணிகள் தினசரி 18 முதல் 36 மில்லிகிராம் வரை இரும்புசத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடினால் அனீமியா ஏற்படுவதோடு அது பிரசவத்தை சிக்கலாக்கிவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பகாலத்தில் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. எனவே தைராய்டு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் கர்ப்பிணிகள் தினசரி சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இல்லையெனில் உதடு, வாய் போன்றவை வறட்சியாகிவிடும். எனவே கர்ப்பகாலத்தில் உடம்பில் தண்ணீர் சத்து குறையாமல் அடிக்கடி தண்ணீர் பருகவேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 8000 யூனிட்டிற்கு மேல் வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல் கர்ப்பகாலத்தில் புகைப்பதையோ, மது அருந்துவதையோ தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் கர்ப்பகாலத்தில் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வதையோ, 102 டிகிரிக்கு மேல் சூடான நீரில் குளிப்பதையோ தவிர்க்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.
கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது !!!
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள், பல விதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை சந்திப்பார்கள். கர்ப்பத்தோடு சம்பந்தப்பட்டுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாகவே இவ்வகை மாற்றங்கள் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்திட இவ்வகை ஹார்மோன் மாற்றங்கள் அவசியமான ஒன்றே. ஆனால் அதே நேரம், கர்ப்ப காலத்தில் சில கஷ்டங்களையும் நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். கர்ப்ப காலத்தில், அனேகமாக அப்படி அனைத்து பெண்கள் சந்திக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை தான், மென்மையாக மாறும் மார்பக காம்பு.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு உங்கள் உடல் தயாராகிக் கொண்டிருக்கும். இதற்கு சம்பந்தமான உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மார்பக காம்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மார்பக காம்புகளின் அளவு பெரிதாவது அல்லது மிகவும் மென்மையாக மாறுவது போன்றவைகளே மார்பக காம்புகளில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்.
பிரசவ நேரம் நெருங்கும் வேளையில், உங்கள் மார்பக காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் உருவத்திலும் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும். சில நேரம் காம்பிலிருந்து கடும்புப்பால் எனப்படும் மஞ்சள் நிற திரவம் வெளியேறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்குவதற்கான அறிகுறிகளே இவைகள்.
கர்ப்ப காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை. கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. அவ்வாறான சில ஐடியாக்களை பற்றி இப்போது பார்க்கலாமா?
வசதியான ப்ராவை அணியுங்கள் கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான ப்ராவை (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த பிராவை வாங்கி அணியுங்கள். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் பராமரிப்புக்கு சிறந்த ஐடியாவாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். காம்புகளின் மீது சோப்பு கூடாது மார்பக காம்புகளின் மீது சோப் பயன்படுத்தாதீர்கள். அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும். அதனால் வாசனையுள்ள சோப்புக்கு பதிலாக நல்லொதொரு மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது. மாய்ஸ்சுரைசிங் க்ரீம் மார்பக காம்புகள் வறட்சியாக இருந்தால் நல்லதொரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது
காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வழியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் வலியெடுக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். ஐஸ் பேட் பயன்படுத்துங்கள் கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும். கர்ப்பமாக காலத்தில், மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் பின்பற்றுங்கள். மார்பக பேட் மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்துங்கள். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திடுங்கள். மார்பக காம்புகளை பராமரிக்கும் போது இதையும் மறந்து விடாதீர்க
பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. 
இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
தைராய்டு, சுகர் போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
குழந்தைகள் உணவில் மாச் சத்துக்களே அதிகமிருப்பதால் வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு

Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667