வியாழன், 30 ஜூன், 2016

எலும்பு மண்டலம்:

நமது உடலை ஒரு கட்டடமாக உருவகப்படுத்திப் பாருங்கள்.
எலும்பின் முக்கியமான மூலப்பொருள் (சத்து) கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு. பழங்கால வீடுகளுக்கு சுண்ணாம்பு எனப்படும் வெந்த கற்களை (இன்றைய சிமெண்டுக்கு மாற்று) பாலில் நீர்த்து, அத்துடன் கடுக்காய், பனை வெல்லம் சேர்த்துக் குழைத்துக் கட்டடம் எழுப்புவர்.
வேகவைத்த சுண்ணாம்புக் கற்களை பால், இளநீர் சேர்த்துக் கரைப்பதால், பாலில் உள்ள சுண்ணாம்பு சத்தும், இளநீரில் உள்ள சுண்ணாம்புச் சத்தும் சேர்த்து சுண்ணாம்புக் கற்களுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. இத்துடன் நின்று விடவில்லை. கடுக்காயும் சேர்க்கப்படுகிறது. அந்தக் கடுக்காயில் என்ன இருக்கிறது?
சுண்ணாம்புச் சத்தை இரும்பைப்போல் இறுக்கும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயின் துவர்ப்புத்தன்மை, சுண்ணாம்புச் சத்துடன் சேரும்போது கட்டடத்தின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. எல்லாம் சரி, பனை வெல்லம் சேர்ப்பது ஏன்?
பனை மரத்தின் சீவிய பாளையில் இருந்து கிடைக்கும் பதநீருடன் தக்க அளவில் சுண்ணாம்புச் சேர்த்துக் காய்ச்சிக் கிடைப்பது தான் பனை வெல்லம். பனைவெல்லத்தில் உள்ள இனிப்புத் தன்மைக்குப் பதநீரும், சுண்ணாம்பும்தான் காரணம். பதநீரின் துவர்ப்பு, சுண்ணாம்பு இரண்டும் பனை வெல்லத்தில் இருப்பதால், இதை கடுக்காயுடன் சேர்த்து தூளாக்கி, சுண்ணாம்புடன் கலந்து வீடு அல்லது கட்டிடம் கட்டும்போது அது உறுதியாக, பல நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும்.
சுண்ணாம்பு (இயற்கை தாது)+ பால் (இயற்கை) + இளநீர் (இயற்கை) + கடுக்காய் (இயற்கை) + பனை வெல்லம் (இயற்கை) என, இயற்கை மூலகங்களால் உண்டான கட்டடங்களே பல நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும்போது, இயற்கை மூலகங்களில் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தை நாம் உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிடும்போது நமது எலும்புகள் பலம் பெற்று, உறுதியாகி, உடல் வலிமைபோடு நூறு ஆண்டுகள் வாழ முடியும் இல்லையா?
இதுதான் சித்த சூத்திரம்.
ஆக, எலும்புகள் உறுதி பெற, இயற்கை மூலகங்களில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ள மூலிகைகள் மற்றும் உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும். இதுவே சித்தர்களின் தீர்ப்பு.


Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

வரகரிசி முருங்கைக் கீரை சூப்

தேவையான பொருள்கள் :
1.
ஊற வைத்த வரகரிசி - 2 ஸ்பூன்
2.
பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்
3.
சாம்பார் வெங்காயம் - 2
4.
சுக்கு - 1 மொச்சை அளவு
5.
மிளகு - 6
6.
திப்பிலி - 2
செய்முறை :
மேற்கூறிய எல்லாவற்றையும் 4 டம்ளர் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைத்துப் பிறகு ஒரு பிடி அளவு முருங்கைக் கீரையை இட்டு கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கினால் வரகரிசி முருங்கைக்கீரை சூப் தயார்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667


உடல் பருக்க நினைப்பவர்களுக்கு….

பறித்த பச்சை நிலக் கடலை நூறு கடலையும் நேந்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
உடல் வழவழப்புடன் பளபளக்க…..
ஆவாரம் பூவினுடைய தூள் மற்றும் கடலை மாவு இந்த இரண்டையும் குளிக்க தேவையான அளவு எடுத்து மைய அரைத்து உடல் முழுக்க தேய்த்துக் குளித்து வர பத்து நாட்களிலேயே பலன் காணலாம்.
உடல் பருமன் குறைய…..
தினசரி சமையலில் காரட் சேர்த்துக் கொள்வதுடன் இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும் போட்டு மைய அரைத்து குடித்து வர ஒரு வாரத்தில் இருந்து உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
கக்குவான் இருமலைப் போக்க……
சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் இருமலின் வேகம் குறையும். 
குடிநீரில் எந்த மருந்தைக் கலந்தாலும் வைரஸ் கிருமிகள் தாண்டி வந்து விடுகின்றது. அதனால் வியாதியும் வந்து விடுகின்றது. இந்த நச்சு தண்ணீரை கொதிக்க வைப்பதன் மூலமே வைரஸ் கிருமிகள் சாகின்றன. எனவே தண்ணீரை கொதிக்க வைத்துத் தான் சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சிகள் ஒழிய……
வசம்பை துண்டுகளாக நறுக்கிக் கொண்டும் பனங்கற்கண்டை சிறிது எடுத்துக் கொண்டும் இந்த இரண்டையும் ஒரு சட்டியில் போட்டு சிவக்க வறுத்து சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கும்.
முகப்பருவை போக்க…..
வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப் பால் விட்டு மைய அரைத்து முகப்பருக்களின் மீது தடவ முகப்பரு மறையும்.
சளித்தொல்லை நீங்க…..
யூகலிப்டஸ் மரக்கொழுந்து இலைகளைக் கொண்டு வந்து 1 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி அரை டம்ளராகச் சுண்டியதும் சாப்பிட சளித்தொல்லை குணமாகும்.
காலரா நோய்க்குப் பாதுகாப்பு….
காலரா நோய் பரவி வந்தால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டின் ஓரங்களிலும் வெளியிலும் டெட்டால் தெளித்து வைக்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சம் பழங்கள் இரண்டினை அரிந்து போட்டு வைக்க வேண்டும். கிராமங்களில் மாட்டின் சாணத்தில் சூடான தண்ணீரை ஊற்றி கரைத்து வீட்டின் சுற்றுப் புறத்தில் தெளித்து வைத்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

பொடுதலைக் கீரை:

கீரைகள் எல்லாமே சாப்பிடச் சுவையாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.அந்த வகையில் பொடுதலைக் கீரை சாப்பிட சுவையாக இருக்காது.இருந்தாலும்,இதற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு.
நீடித்த வயிற்றுப் போக்கு,சீதபேதி போன்றவற்றால் தொல்லையுறுபவர்கள் இக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு சட்டென்று நின்றுவிடும்.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களையும் வாத நோய்களையும் குணமாக்கவல்லது.
இந்தக் கீரையில் சுவை இல்லையே என்று வருந்தவேண்டாம்.இத்துடன் வெங்காயம்,மிளகாய்,தேங்காய் போன்றவற்றைச் சேர்த்து சுவையாகச் செய்து சாப்பிடலாம்.
இந்தக்கீரை மிக முக்கியமான மருத்துவ குணமுள்ளது.தலைமுடியில் வரும் பொடுகுகளை ஒழித்துவிடும்.இந்தக்கீரையை அரைத்து தலையில் தேய்க்கலாம்.அல்லது எண்ணையுடன் இந்த இலையின் சாற்றைக் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளிக்க,பொடுகுகள் ஒழியும்.தலையில் புண் இருந்தாலும் ஆறிவிடும்.Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667

மூக்கரட்டைக் கீரை:

சக்திவாய்ந்த மூலிகைகளுள் மூக்கரட்டைக் கீரையும் ஒன்று.மருந்துகள் தயாரிப்பதற்குப் பெரிதும் பயன்படுகிறது. இந்தக் கீரையை யாரும் தனியே பயிரிடுவது கிடையாது. தானே சில இடங்களில் படர்ந்திருக்கும். அதைக் கண்டுபிடித்து இலைகளைப் பறித்து சமைத்து உண்ணலாம்.
இந்தக் கீரை சாப்பிட சுவையாக இருக்காது, கசப்பாக இருக்கும். அதனால் இக்கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம்.
இந்தக்கீரை உணவு உண்ண ஆவலைத் தூண்டும்.இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் கண் சம்பந்தமான நோய்கள் வராது. கண் நோய்க்கு இதன் சாற்றை கண்களில்விட குணமாகும்.
இது சிறுநீரைத் தாராளமாக வெளியேற்றும். மலச்சிக்கல் இருந்தாலும் போக்கும் குணம் இதற்கு உண்டு. சிறுநீர் உறுப்பு சம்பந்தமான பல தொல்லைகளை நீக்கும்.ஆற்றல் பெற்றது. கிட்னி பாதிப்பு இருந்தாலும் போக்கவல்லது.
இதய சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதுடன் இதயத்திற்கு பலத்தையும் அளிக்கவல்லது. இந்தக் கீரையைக் கிடைக்கும் போதெல்லாம் சாப்பிடலாம்.Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Pondichery
Karur

For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667