ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தமிழ் சித்த மருத்துவ குறிப்புக்கள் - மருத்துவர் அருணசின்னய்யா

சாதிக்காய்:
சாதிக்காயைச் சுட்டுப் பொடித்துத் தேனுடன் கலந்து தினம் இருவேளை நாவில் தடவி வரக் காதிரைச்சல் வயிற்று போக்கு , சீதபேதி ஆகியன குணமாகும். 


கசகசா:
ஒரு கிராம் கசகசாவைப் பாலிட்டுக் காய்ச்சி குழந்தைக்கு கொடுக்க நல்ல தூக்கமுண்டாகும்.சிறுகண்பீளை:
சிறுகண்பீளை சமூலத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து விதிப்படி செய்து 30 மிலி தினம் இருவேளை குடித்து வர நீரெரிச்சல் சிறுநீரில் குருதி வருதல் , சிறுநீரக கற்கள் , வெள்ளை ஆகியன குணமாகும்


சீரகம்:
ஐந்து கிராம் சீரகத்தை பொன்வறுவலாக வறுத்து சூரணம் செய்து அத்துடன் சோற்றுப்பும் நெய்யும் கலந்து சுடுசாதத்துடன் பிசைந்து உண்டு வரச் சுவையின்மை, பசியின்மை, வயிற்று பொருமல் ஆகியன தீரும்.


சிவதை:
சிவதை வேரை பாலில் வேகவைத்து , வெயிலில் காய வைத்து சூரணம் செய்து 1 கிராம் அளவாக வெந்நீருடன் இரவில் மட்டும் கொடுக்க வயிற்று வலியின்றி மலம் வெளிப்படும்.


அம்மான் பச்சரிசி:
அம்மான்பச்சரிசி செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி , தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்கு பால் சுரக்கும் , முகத்தில் பூசி வர , முகபரு , எண்ணெய்ப்பசை ஆகியன மாறும்., காலில் பூசிவர காலாணி தீரும்.

அரிவாள்மனை பூண்டு:
அரிவாள்மனை பூண்டின் இலைகளை நன்கு அரைத்து தேனில் கலந்து வெட்டுக் காயங்களில் மீது பூசி வர காயங்கள் ஆறூம், தழும்புகள் ஏற்படாது.


ஆடாதோடை:
ஆடாதோடையிலைகளை எடுத்து துடைத்து நடுநரம்பை நீக்கி ஒன்றிரண்டாக கத்தரித்து கைப்பிடியளவு எடுத்து 4 டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளர் காய்ச்சி வடித்து பனங்கற்கண்டு சேர்த்து தினம் இரு வேளை குடித்து வர இருமல் , சள் , இரைப்பு , தொண்டைக்கட்டு ஆகியன தீரும்.


ஆடுதிண்டாப்பாளை:
ஆடுதீண்டாப்பாளை இலைகளை பிழிந்து எடுத்து சாறு 50 மிலி உடன் தேங்காயெண்ணெய் 50 மிலி சேர்த்து காய்ச்சி மேலுக்கு தடவி வர தோல் நோய்கள் , சிரங்கு , கரப்பான் , வண்டு கடி ஆகியன தீரும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us சிசேரியன் அதிகமாவது ஏன்?

‘என் மகளுக்குச் சுகப்பிரசவம்’ என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். சிசேரியன் எப்போது அவசியம், சிசேரியனை எப்படித் தவிர்ப்பது?

“சிசேரியன் ஏன் அதிகரித்துள்ளது?”
“தாமதமான திருமணம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல், 30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.”
“எப்போது சிசேரியன் அவசியம்?”
“பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை (Position) இல்லாதிருந்தால், கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால், கர்ப்பப்பையில் வெடிப்பு அல்லது பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.”
“எப்போது கவனமாக இருக்க வேண்டும்?”
“கர்ப்ப காலங்களில் வலி தொடர்ந்து இருந்தாலும், பனிக்குடம் உடைந்து, குழந்தை மூச்சுத் திணறலால் அவதிப்பட்டாலும், தாய்க்கு கால் வீக்கம், ரத்தப்போக்கு இருந்தாலும், குழந்தை அசையும் திறன் குறைந்திருந்தாலும், இடுப்பு எலும்பு பலவீனமாக இருந்தாலும், குழந்தையின் தாய்க்குப் பார்வைக் குறைபாடு இருந்தாலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.”
“சிசேரியனைத் தவிர்த்திட கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?”
“கர்ப்ப காலங்களில் ஐந்து முறையேனும் மருத்துவமனைக்குச் சென்று, பரிசோதித்து கொள்தல் அவசியம் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். எனவே, ஒவ்வொரு மூன்று மாத கால (Trimester) இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம். முதல், இரண்டு, மூன்று என மூன்று மாத காலத்திலும் ஒவ்வொரு முறையும், பின்னர் மருத்துவர் அறிவுறுத்தும்போதெல்லாம் மருத்துவமனைக்குச் செல்தல் அவசியம்.
1. 36-வது வாரத்துக்கு மேல் ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
2.இரும்புச் சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்து மாத்திரைகளை, மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய, டாக்டர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்துகொள்ளலாம்.
எந்த ஒரு சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகள மேற்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே, கர்ப்ப கால யோகாசனங்களைச் செய்ய வேண்டும். நடப்பதும் நல்லது.
சரிவிகித உணவைப் பின்பற்ற வேண்டும். புரதமும், நார்சத்துக்களும் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டும். பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மீன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும். வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உணவை நான்கைந்து வேளையாகப் பிரித்து, சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.
இயற்கைக்கு எதிராக நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துக் குழந்தை பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து, குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்தானது. பெரும்பாலான சமயங்களில் இந்த முயற்சி தோல்வியையே தழுவும் என்பதால், இதை காரணமாகக்கொண்டு சிசேரியன் செய்துகொள்ளக் கூடாது

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் இறுதிப் பகுதி

இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.

 அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.

அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து ,  அதிக சோடியம் சத்து ஆகியவை   அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது.  இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால்  இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை  நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய  வரியே இதற்குக் காரணம் ஆகும்.

 இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.

சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு  இருக்க வேண்டும்.

அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.

அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக் கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.


சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது. அதனால் இந்த  சார்பு நோயைப் பற்றி இன்னும் விளாவரியாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.  நன்றி, வணக்கம்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சளியுடன் கூடிய இருமல் குணமாக

சளியுடன் கூடிய இருமல் குணமாக :

                1) சுக்கு               -  10 கிராம்
                  வெள்ளைமிளகு     -  10 கிராம்
                  சித்தரத்தை         -  10 கிராம்
                  காய்ந்த திராட்சை   -  10 கிராம்
                  வெள்ளரிவிதை     -  10 கிராம் 
                  முந்திரிப் பருப்பு     -  10 கிராம்
                  மஞ்சள்                       10 கிராம்
இவைகளை தூளாக்கி, இரண்டு லிட்டர் நீரில் கசாயம் செய்யவும். இதில் வேளைக்கு அரை டம்ளர் (100 மி.லி.) அளவில் காலை, மாலை சாப்பிட்டு வர சளி, இருமல், புகைச்சலுடன் கூடிய இருமல் குணமாகும்.

        2)தூதுவளை        -  50 கிராம்
                   துளசி            -  50 கிராம்
                   ஆடாதொடை     -  50 கிராம்
                   கண்டங்கத்திரி    -  50 கிராம்
                   முசுமுசுக்கை     -  50 கிராம்
                   சுக்கு             -  50 கிராம்
                   மஞ்சள்           -  50 கிராம்

                இவைகளை ஒன்றுகலந்து தூளாக்கி  ஒரு ஸ்பூன் அளவில் காலை, மாலை தேனில் குழைத்துச்சாப்பிட சளி, இருமல் தீரும்.

                3) சுக்கு             -  100 கிராம்
                  மிளகு            -  50 கிராம்
                   திப்பிலி           -  50 கிராம்
                 அக்கிரகாரம்       -  50 கிராம்
                 மஞ்சள்            -  50 கிராம்
                 அதிமதுரம்         -  50 கிராம்
                 ஆளிவிதை         -  50 கிராம்
                 கடுக்காய்           -  50 கிராம்

                இவைகளை ஒன்றுகலந்து தூளாக்கவும். இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, இரவு தேனில் சாப்பிட்டுவர எப்பேர்ப்பட்ட சளி, இருமலும் மூன்று தினங்களில் குணமாகும்.

                4) தும்பைப்பூவை மஞ்சள் சம அளவில் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் அளவு காலை, மாலை சாப்பிட சளி, இருமல் தீரும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us