வெள்ளி, 31 மார்ச், 2017

துவரம் பருப்பு:

துவரம் பருப்பு அரிசி , பூண்டு மிளகு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் காய்ச்சல் உடனே குணமாகும்.
துவரம் பருப்புடன் முட்டைக்கோஸை அரித்து போட்டு வேகவைத்து கடைத்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.
துவரை இலையை வேகவைத்து அந்த தண்ணீரி வலி உள்ள இடங்களில் கரு சேர்த்து அரைத்து பற்றுப்போட்டால் உடைந்த எலும்புகள் விரைவில் கூடும்.

கீழாநெல்லியின் பயன்கள்:கீழாநெல்லி வேரை இடித்துப் பிழிந்து கறந்த பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
கீழாநெல்லி இலையைச் சாறு பிழிந்து கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
கீழாநெல்லிக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும் .
கீழாநெல்லி இலையுடன் உளுந்து மஞ்சள் ஆகியனவர்றை சேர்த்து அரைத்து நகக் கண்களில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
கீழாநெல்லி இலை கோவை இலை, அசோக மரப்பட்டை நாவல் மரபட்டை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்ரை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு சேற்று புண் போன்றவை குணமாகும்.
கீழாநெல்லி , கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

கிராம்பு மற்றும் லவங்கம் பயன்கள்:

கிராம்பை நீர் சேர்த்து மை போல் அரைத்து நெற்றியிலும் மூக்கிலும் பற்றுப்போட்டால் தலைபாரம் மற்றும் மூக்கு அடைப்பு போன்றவை குணமாகும்.
கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டு சுவைத்தால், தொண்டைப்புண் ஆறும்.
கிராம்பு மற்றும்  கொட்டைப்பாக்கு – இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் பல் துலக்கினால் பல் வலி குணமாகும் ஈறுகளும் பலப்படும்.
கிராம்புப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் போட்டு காய்ச்சி ஆறிய பிறகு ஒரு மணிக்கு ஒருமுறை 30 மில்லி அளவுக்கு குடித்தால் நன்றாக பசி எடுக்கும்.
கிராம்பு நிலாவரை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து , இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மறையும்.
கிராம்பு மற்றும் ஜாதிக்காய் இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து பொடி செய்துகொள்ளவும் இதில் அரை ஸ்பூன் எடுத்து வெற்றிலையில் வைத்து தேனில் குழைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.
நொய் அரிசியுடன் கிராம்பு 3 மிளகு 10 , மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் உடனே தணியும்.
கிராம்பு 5 தண்ணீரில் 2 டம்ளர் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி நீரை மட்டும் குடித்து வந்தால் தலைபாரம் குணமாகும்.

காசினிக் கீரை பயன்கள்:

காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
காசினிக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் கரையும்.
காசினி கீரை சிறுகுறிஞ்சான் இலை – இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டால் கணையக் கோளாறுகள் குணமாகும்.
காசினிக் கீரையுடன் பார்லி மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடலில் நீர் கோத்துக்கொள்வதால் ஏற்படும். வீக்கம் கரையும்.
காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
காசினி கீரையை பயத்தம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

செவ்வாய், 28 மார்ச், 2017

எள்ளு அதன் பயன்கள்:

எள்ளு செடியின் இலைகளை தண்ணீரில் போட்டு அலசினால் பசைபோன்ற திரவம் மிதக்கும். இதனால் கண்களைக் கழுவினால் கண்களில் உண்டாகும் புண்கள் குணமாகும்
எள்ளு செடியின் இலைகளை கஷாயம் வைத்து குடித்தால் சீத கழிச்சல் குணமாகும்.
எள்ளு செடியின் இலைகளை வதக்கி கட்டிகள் மீது வைத்துக்கட்டினால் அவை விரைவில் பழுத்து உடையும்.
எள்ளுக்காயை சுட்டு சாம்பலாக்கி அதை புண்கள் மீது தூவிவந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.
எள்ளை தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

எள்ளை அரைத்து சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டுவந்தால் ரத்த மூல குணமாகும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 

ஏலக்காய்

ஏலக்காய் விதை , ஓமம், சீரகம்தலா 100 கிராம் எடுத்து பொடி செய்துக்கொள்ளவும் இதில் மூன்று வேளையும் உணவுக்கு பிறகு மூன்று கிராம் அளவுக்கு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
ஏலரிசி , சுக்கு , கிராம்பு , சீரகம்தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் , குடல் புண் வயிற்று வலி போன்றவை குணமாகும்.
ஏலக்காய் , பனைவெல்லம் 200 கிராம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து இடித்து , தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் அடிகடி உண்டாகும் தலைவலி மயக்கம் போன்றவை குணமாகும்.
ஏலக்காய் போட்டு கொதிக்கவைத்த தண்ணீர்ல் வாய் கொப்பளித்தால் , வாய் நாற்றம் , பல் அரணை , ஈறுகளில் ஏற்படும் புண் போன்றவை குணமாகும்
ஏலக்காய் , சீரகம்தலா 50 கிராம் எடுத்து , எலுமிச்சை சாறில் ஊறவைத்து காயவைக்கவும் . இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து தேனோடு கலந்து சாப்பிட்டால் தலைவலி மயக்கம் குணமாகும்.


ஏலக்காய் , சாலாமிசரி , அமுக்கராதலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும் . இதில் , இரவு உணவுக்கு பிறகு ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு சூடான பால் குடித்தால் நரம்புகள் முறுக்கேறி உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 

கசகசாவின் பயன்கள்:

கசகசாவை, மாதுளம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
கசகசா சாலாமிசிரி பூனைக்காலி விதை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து கொள்ளவும்  இதில் ஐந்து கிராம் பொடியை , தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
கசகசா முந்திரி பருப்பு , பாதாம் பருப்பு தலா 100 கிராம் எடுத்து அரைத்துக்கொள்ளவும் . இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
கசகசா , மாம்பருப்புஇரண்டையும் விழுதாக அரைத்து பத்து கிராம் அளவு காலை, மாலை இருவேளையும் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ரத்த பேதி சீதபேதி போன்றவை குணமாகும்.
கசகசா முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும் முகம் அழகு பெறும்.
கசகசா ஜவ்வரிசி பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்புவலி குணமாகும்/.
கசகசா முள்ளங்கி சாறில் ஊறவைத்து அரைத்து தேமல் , படை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.
கொத்தமல்லியுடன் 20 கிராம் கசகசா 3 கிராம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரை பயன்கள்

கரிசலாங்கண்ணிக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூச்சிரைப்பு குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டும் கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் & புகைச்சல் குணமாகும்..
கரிசலாங்கண்ணி கீரை சாறு 30 மில்லி , பருப்பு கீரை 30 மில்லி இரண்டையும் ஒன்றாக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரை சாறில் நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரை சாறு எடுத்து அதிகாலையில் 30 மில்லி அளவுக்கு 48 நாள்களுக்கு தொடர்ந்து குடித்தால் பித்தப்பை கற்கள் கரையும்.
கரிசலாங்கண்ணி கீரையை மிளகு சேர்த்து அவித்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
கரிசலாகண்ணி கீரையுடன் இரண்டு கடுக்காயை தட்டிப்போட்டு கஷாயம் வைத்து குடித்தால் மலசிக்கல் குணமாகும்.