செவ்வாய், 31 அக்டோபர், 2017

கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடுகளால் விளையும் சிறப்பான நன்மைகள்


மலச்சிக்கல், சுருள்சிரை நாளங்கள், முதுகுவலி, சோர்வு போன்ற கர்ப்ப கால வலிகளையும் பிரச்சினைகளையும் உடற்பயிற்சி இலகுவாக்கும்.
பிரசவத்தை எதிர்கொள்ளவும் விரைவாக நலம்பெறவும் உடல் உழைப்பில் ஈடுபடும் கர்ப்பிணிப் பெண் ஆயத்தமாய் இருக்கிறார்.
கர்ப்ப காலத்தில் முன்சூல் வலிப்பும், கர்ப்பகால நீரிழிவும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக் கூடும்.
பேறுகாலத்திற்குப் பின் உடற்தகுதி உள்ள பெண்ணால் விரைவாக உடல்நலத்திற்கு ஏற்ற உடலிடையை அடைய முடியும்.
முறையான உடல்பயிற்சி கர்ப்ப காலத்தில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
செயல்பாட்டுடன் இருந்தால் உளநலம் பாதுகாக்கப்படும். உடற்பயிற்சி செய்துவரும் கர்ப்பிணிப் பெண்கள் சுய மதிப்போடு இருப்பர்; மனவழுத்தமும் மனக்கலக்கமும் ஏற்படும் ஆபத்து குறையும்.
உடற்தகுதிக்கான திட்டத்தைத் தேர்ந்து எடுக்கும்போது கீழ்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:
குத்துச்சண்டை, கால்பந்து, கூடைப்பந்து, பனி ஆக்கி போன்ற வயிற்றில் அடிபடக்கூடிய வாய்ப்புள்ள செயல்பாடுகளைத் தவிர்க்கவும்.
குதிரையேற்றம், மலைச்சறுக்கு, சீருடற்பயிற்சிகள் போன்ற கீழேவிழும் வாய்ப்புகள் உள்ள செயல்களில் அறவே ஈடுபட வேண்டாம்
பாதுகாப்பான ஆரோக்கியமான உடல் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள்
பாதுகாப்பான ஆரோக்கியமான உடற்பயிற்சிக்குப் பின் வரும் குறிப்புகளைக் கடைபிடிக்கவும்:
மெதுவாகத் தொடங்கி, படிப்படியாக வேகப்படுத்தி, மெதுவாக முடிக்கவும்
உடல் பயிற்சி எடுக்கும் போது உங்களால் பேச இயல வேண்டும். அல்லது நீங்கள் மிகையாக செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
அடிக்கடி இடையில் நிறுத்திப் பின் தொடரவும்
முதல் மும்மாதம் முடிந்த உடன் பின்புறம் வளையும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டாம். இது முக்கிய நரம்புகளில் அழுத்தத்தை அதிகரித்து குழந்தைக்கு இரத்த ஓட்டம் செல்வதை பாதிக்கும்.
குதித்தல், துள்ளல், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அசைவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். கர்ப்ப காலத்தில் இணைப்புத் தசைகள் எளிதாக இழுபடும். இதனால் இத்தகைய அசைவுகளினால் மூட்டுக் காயங்கள் ஏற்படும் அபாயம் உண்டு.
சமநிலை இழக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை வளர வளரப் புவி ஈர்ப்பு மையம் மாறுபடுவதால் கீழே விழும் அபாயம் அதிகம். இக்காரணத்தால் மூன்றாம் மும்மாதத்தை நெருங்கும் போது நடையோட்டம், மிதிவண்டி, மட்டை வைத்து ஆடும் விளையாட்டுக்கள் ஆகியவை அபாயகரமானது.
அதிக உயரமான இடங்களில் உடற்பயிற்சி எடுக்கக் கூடாது (6000 அடிக்கு அதிகமாக). குழந்தைக்குத் தேவையான உயிர்வளி கிடைக்காமல் போகலாம்.
உடல் பயிற்சிக்கு முன்னும், உடல் பயிற்சியின் போதும், பின்னும் அதிக நீராகாரத்தை அருந்த வேண்டும்.
அதிக வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் உள்ள நேரத்தில் உடல் பயிற்சி எடுக்க வேண்டாம்.
அசௌகரியம், மூச்சிறைப்பு, அல்லது களைப்பு ஏற்பட்டால் ஓய்வுக்குப் பின் உடல்பயிற்சியைத் தொடரவும்.

கீழ்வருவனவற்றில் ஏதேனும் ஏற்பட்டால் உடல்பயிற்சியை நிறுத்திவிட்டு உடனே மருத்துவரை அணுகவும்:
தலைச்சுற்று
தலைவலி
நெஞ்சு வலி
கெண்டைக்கால் தசை வலி அல்லது வீக்கம்
வயிற்று வலி
பார்வை மங்குதல்
பிறப்புறப்பில் கசிவு
பிறப்புறப்பு இரத்தப்போக்கு
கரு அசைவுக் குறைதல்
பிடிப்புகள்
இடுப்புக்கு பயிற்சி கொடுக்கவும்

மலக்குடல், பிறப்புறுப்பு, சிறுநீர் வடிகுழாய் ஆகியவற்றை இடுப்புத் தளத் தசைகள் தாங்குகின்றன. இத் தசைகளை வலுப்படுத்தி பிரசவத்தின் போது உந்தவும், பிரவசத்துக்குப் பின் மீளவும், கெகல் உடல்பயிற்சி துணைபுரியும். சிறுநீர்ப்பை கசிவையும் மூலநோய் அபாயத்தையும் கட்டுப்படுத்தவும் இது உதவி செய்யும்.
இடுப்புத்தள தசைகள்தான் சிறுநீர்ப்போக்கைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சுருக்க வேண்டிய சரியான தசையைக் கண்டு பிடிப்பது கடினமாகும். சிறுநீர்க் கழிப்பதைத் தடுக்கும் தசையே சரியான தசை என உடற்பயிற்சி செய்யும்போது உறுதியாக இருக்கலாம். அல்லது பிறப்புறுப்பில் ஒரு விரலை வைத்துக்கொண்டு சுருக்கவும். விரலைச் சுற்றி அழுத்தத்தை உணர்ந்தால் இடுப்புத் தள தசையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். வயிறு, கால்கள் அல்லது பிற தசைகளைக் கட்டிப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
கெகல் உடற்பயிற்சி என்றால் என்ன?
மூன்று எண்ணும் வரை இடுப்புத் தள தசையைச் சுருக்கிப் பின் மூன்று எண்ணும் வரைத் தளர்த்தவும்.
ஒரு தடவைக்கு 10-15 முறையாக ஒரு நாளுக்கு மூன்று தடவைச் செய்யவும்
படுத்துக் கொண்டு கெகல் உடற்பயிற்சியைச் செய்யவும். இதுவே எளிதான நிலை. தசை இறுகும்போது, நீங்கள் விரும்பும்படி உட்கார்ந்தும் நின்றும் உடற்பயிற்சியைச் செய்யலாம்.

கர்ப்பமுறுதலின் ஆபத்தான காரணிகள் எவை?
சுற்றுச் சூழல் ஆபத்து

நாம் வீட்டிலோ, வேலையிலோ அல்லது வெளியிலோ இருக்கும்போது நம்மைச் சுற்றி இருக்கும் யாவுமே சுற்றுச்சூழல் ஆகும். நீங்கள் சுவாசிக்கும் அல்லது உட்கொள்ளும் ஒவ்வொரு சிறுசிறு விஷயத்தையும் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும், உங்கள் கர்ப்பத்தை அல்லது பிறக்காத சிறுகுழந்தையைப் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

ஆங்கில மருந்துகளும் ஆண்மைக் குறைவும்


     இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ள ஆங்கில மருந்துவம் – நோயைக் குணப்படுத்துவதில்லை. நோயைக் கட்டுப்படுத்தி இன்னொரு நோயைக் கொண்டு வருகிறது. ஆங்கில மருந்துகளில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களை உடம்பு முழுமையாய் உட்கிரகிப்பதில்லை. எஞ்சியுள்ள ரசாயனங்களை, சிறுநீரகம் தன்னால் இயன்ற அளவு அவைகளைச் சிறுநீராய்ப் பிரிந்து வெளியே அனுப்புகிறது.

     சிறுநீரகத்தாலும் வெளியேற்ற முடியாத கழிவுகள், உடலுக்குள்ளேயே தங்கி வேற பல உடற்கோளாறுகளுக்கு வித்திடுகிறது.

     மக்கள் சாதாரணமாக வேறு சில நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளில் 100 – க்கும் மேற்பட்டவை ஆண்மையை சிதைத்து ஆண்களை மலடுகளாக்கியும் பெண்களை உறவு வேட்கையில் ஈடுபாடு இல்லாமல் செய்துவிடுவதாக ஆங்கில மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

     உளவியல் பிரச்சினைகளுக்குத் தரப்படுகிற சில ஆங்கில மருந்துகள், ரத்தக் கொதிப்பிற்கு தரப்படுகிற மருந்துகள், குடற்புண்ணுக்குத் தரப்படுகிற சில மருந்துகள் ஆண்மைக் குறைவு என்ற பக்க விளைவிற்கு காரணமாய் உள்ளது.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

தோல் நோய்கள் தீர்க்கும் குளியல் பொடி


சந்தன சீவல் – 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்

வேப்பிலை – 100 கிராம்

கடுக்காய் – 100 கிராம்

வெள்ளை மிளகு – 50 கிராம்

கிச்சிலிக் கிழங்கு – 100 கிராம்

ஆவாரம்பூ – 100 கிராம்

துளசி – 100 கிராம்

பறங்கிப்பட்டை – 100 கிராம்

கடலைப்பருப்பு – ½ கிலோ

பச்சைப்பயறு – ½ கிலோ

     இவையனைத்தும் ஒன்று கூட்டி அரைத்து தூளாக்கவும். தேவையான அளவு பொடியை சூடான பாலில் அல்லது நீரில் கலந்து, தேந்து குளிக்க தோல் நோய்கள் அனைத்து தீர்ந்து மேனி பளபளப்பாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel


உணவகங்களுக்கு ஒரு வேண்டுகோள்:


     நவீன வகை உணவுகளைத்தயாரித்துவரும் உணவகங்களில், பண்டைய உணவு வகைகளுக்குத் தனியிடம் ஒதுக்கி கஞ்சி வகைகள், அடை, பணியாரம் போன்ற உண்வுகளைத் தயாரித்துப் பாருங்கள். மக்கள் அமோகமாய் வரவேற்பார்கள்.

     இதேபோல் இயற்கை உணவுகள் தயாரித்து உணவகங்களில் வழங்கினாலும் அதுவும் வரவேற்பைப் பெறும். நிறையபேர்களுக்கு இயற்கை உணவுகள் சாப்பிட விருப்பம் இருக்கும். ஆனால் வீட்டில் அதற்கான வரவேற்பு இருக்காது. இவருக்கு மட்டும் இயற்கை உணவு தயாரிப்பதும் இயலாதது ஆகிவிடுகிறது.


     அவல் சாதம், கீரைசூப், வெஜிடபிள் சாலட், பழக்கலவை போன்ற இயற்கை உணவுகளைத் தரமாக தயாரித்து விற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஹோட்டல் எல்லோருக்கும் முன்மாதிரியாய் இருக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

உடல் பருமனும் நவீன மருத்துவமும்


     நவீன மருத்துவத்தில் (Western Medicine) உடல் பருமனைக் குறைக்க முறையான மருந்துகள் இல்லை என்றே சொல்லலாம்.
நவீன மருத்துவம்-

1. பசியைக் குறைக்க மருந்துகள்

2. ஹார்மோன் மருந்துகள்

3. நீரைப் பிரிக்கும் மருந்துகள்

     ஆகியவற்றை, உடல் பருமனைக் குறைக்க பரிந்துரை செய்கிறது.
     பசியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொண்டால் பசி மந்தப்பட்டு உடல் பலவீனத்தைத் தரும். இத்தகைய மருந்துகளை உட்கொண்டு உடல் எடையைக் குறைத்தாலும், உடலின் சோர்வு அப்படியே காணப்படும். இத்தகைய மருந்துகள் பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது.
     நீரைப் பிரிக்கும் (Diuretics) மருந்துகளை உட்கொண்டு உடல் பருமனைக் குறைக்க முனைந்தால், பல சிக்கல்கள் உண்டாகிறது. நமது உடம்பில் 70 சதவீதம் நீரின் தன்மையே ஆகும். இத்தகைய மருந்துகள் நீரை மட்டுமே பிரிக்கும் தன்மை கொண்டது. கொழுப்பைக் கரைக்கும் தன்மை இல்லாததால், முதலில் எடை குறைவது போல் தோன்றினாலும், பின்னர் உடல் பருமன் அட்டியே நிலைத்துவிடும்.

     ஹார்மோன் (Thyroxine) மருந்துகளை உட்கொண்டு உடற்பருமனைக் குறைக்க முயல்வது மிகவும் ஆபத்தானது. தொடர்ந்து ஹார்மோன் மருந்துகளை எடுத்துவந்தால் காலப்போக்கில் உயிரைப் பறிக்கும் புற்று நோய்க்கு ஆளாக நேரிடும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

மாதவிடாய் கோளாறுகள் நீங்க கற்றாழை பாயாசம்:


பச்சைப் பயறு – 100 கிராம்

வெல்லம் – ¼ கிலோ

ஏலக்காய் – 5 எண்ணிக்கை

சோற்றுக் கற்றாழை – ¼ கிலோ

     பச்சைப் பயிறை நன்கு வேகவைத்து கடைந்துவிடவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து பதமாய் காய்ச்சவும். இதில் பச்சைப் பயறை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் கற்றாழை சேர்த்து இன்னொரு கொதி வந்ததும் இறக்கவும். ஏலக்காய் தட்டிப் போட்டு சுவையாக அருந்தலாம்.

பயன்கள்:


     உடல் பருமன், வாயுக்கோளாறு, மாதவிடாய் கோளாறுகள் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

திங்கள், 30 அக்டோபர், 2017

கர்ப்பம்கலைதல்


முதல் 20 வாரங்களுக்குள் கரு கலைதலே கர்ப்பம் கலைதல் ஆகும். பிறப்புறுப்பு கசிவு அல்லது இரத்தப்போக்கே முதல் அறிகுறி. அதற்குப் பின் சில மணி நேரம் அல்லது சில நாட்கள் தொடர்ந்து வயிற்று வலி.
இரத்தப் போக்கு குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம். வலி தசைப் பிடிப்பு போன்றோ தொடர்ந்தோ, குறைவாகவோ அல்லது கடுமையாகவோ, பின்முதுகு அல்லது இடுப்பு அழுத்தம் போலவோ இருக்கும்.

குறைப் பிரசவம்
கருவுற்று 37 வாரத்துக்கு முன் ஏற்படும் பிரவசம்.
நச்சுக்கொடி முறிவு
பிறப்புக்கு முன் நச்சுக்கொடி கருப்பையில் இருந்து தனியாகப் பிரியும் ஆபத்தான நிலையே நச்சுக்கொடி முறிவாகும்.
அறிகுறிகள் பல்திறப்பட்டன. சில சமயம் திடீர் வெளிப்படையான இரத்தப்போக்கு இருக்கும். சில நேரங்களில் முதலில் வெளிப்படையான இரத்தக்கசிவு இருக்காது அல்லது சிறிதளவு கசிவும் இரத்தப்போக்கும் இருக்கும்.

சிறுநீர்ப்பாதைத் தொற்று
சிறுநீரகத் தொற்று முதற்கொண்டு கர்ப்ப காலத்தில் அனைத்து சிறுநீர்ப்பாதை தொற்று நோய்களும் ஏற்படும்.
சிறுநீர் கழிக்கும்போது வலி, அசௌகரியம் அல்லது எரிச்சல், இடுப்பில் அசௌகரியம் அல்லது கீழ்வயிற்று வலி (பெரும்பாலும் இடுப்பு எலும்புக்கு மேல்), சிறுநீர்ப் பையில் மிகக் குறைவாக சிறுநீர் இருந்தாலும் அடிக்கடியும் தவிர்க்கமுடியாத படியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு, கலங்கிய, துர்நாற்றத்துடன், குருதியுடன் சிறுநீர் ஆகியவையே சிறுநீர்ப்பைத் தொற்றின் அறிகுறி.

பிற காரணங்கள்
வயிற்று வலிக்குப் பிற காரணங்களும் உண்டு. வயிற்று வைரஸ், நச்சுணவு, குடல்வால் அழற்சி, சிறுநீரகக்கல், கல்லீரல் அழற்சி, பித்தப்பை நோய், கணைய அழற்சி, நார்த்திசுக்கட்டி, குடல் அடைப்பு ஆகியவை பரவலான காரணங்கள் ஆகும்.

தாய்ப்பாலூட்டுதல்
கர்ப்ப காலமே தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் குறித்துத் தாய்க்கு ஆலோசனை கூறத் தகுந்த நேரமாகும். இந்தியாவில் தாய்ப்பாலூட்டல் பரவலாக இருந்தாலும் பின்வரும் செய்தியைத் தாயாகப் போகிறவர்களுக்குத் தர வேண்டும்.
பிறந்தவுடன், குறிப்பாக ஒரு மணி நேரத்துக்குள், அறுவை மூலம் பிறப்பாக இருந்தாலும், தாய்ப்பால் ஊட்டுவது சிறந்ததாகும்.

கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடுகள் முக்கியமா?

கர்ப்ப காலத்தில் சரியான உணவு முறையில் இருந்து உடல்நலம் பேணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தல் வரை அனைத்தும் உடற்தகுதியோடு கைகோர்த்துச் செல்கிறது. ஆரோக்கியமான கர்ப்பிணிப்பெண் ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் மிதமான உடல் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

நீரிழிவு நோயாளிகளுக்கான பொதுக்குறிப்புகள்


1. கூடியவரை எளிதாக ஜீரணித்து, ரத்தத்தில் சேரும் இனிப்பு வகைகளையும், பழங்களையும் தவிர்த்துவிடவும். அல்லது குறைந்த அளவில் சேர்க்கவும். கலோரி குறைந்த பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

2. எண்ணெய் மற்றும் தீயில் வறுத்த கொட்டைகளை (முந்திரி, வேர்கடலை) குறைவாக எடுத்துக் கொள்ளலாம். (சுமார் 10 கிராம்)

3. வயிறு நிறைவாக இருக்க காய்கறிகளையும், கீரைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.

4. அதிக பசி இருந்தால் அதைச் சற்றுக் குறைக்கச் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் நீரைப் பருகி, பிறகு சாப்பிடலாம்.

5. குறைவாகச் சாப்பிட்டு வயிற்றில் அல்சர் வராமல் இருக்க அவ்வப்போது மோர் அருந்தலாம். அல்லது சத்துக் குறைவான பொருட்களை உப்பு, பிஸ்கட், பொரி, பாப்கார்ன், வெள்ளரி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

6. இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் கண்டிப்பாக இரவில் பால் அருந்த வேண்டாம். தேவையான போது உபயோகிக்க, பக்கத்தில் குளுக்கோஸ்வில்லைகளை (5 – 10 கி.) வைத்திருக்க வேண்டும்.

7. நீரிழிவுக்காரர்கள், விருந்துகளைக் கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும்.
8. எதையும் அளவோடு உண்டு பழகிக் கொள்ளுங்கள.

9. உங்களுடைய கலோரி அளவு தேவைக்கு ஏற்ப உணவில் நீங்களே மாறுதல் செய்துகொளுங்கள்.

10. வாரம் ஒருதடவை உங்கள் உடல் எடையை சோதித்துக் கொள்ளுங்கள்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel


காபி குடித்தால் நீரிழிவு நோய் வராது!


     காபி குடித்தால் டைப் – 2 நீர்ழிவு நம்மை அண்டாது. சிலவகை புற்று நோய்களும் வராமல் தடுக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

          காபி சாப்பிடுவது மற்றும் நீரிழிவு நோய் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொண்டதின்படி… காபி குடித்தால் டைப் – 2 நீரிழிவு நோய் நம்மை அண்டாது. ஆனால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் காபியை அளவோடு குடிப்பது நல்லது.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

விந்துவை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள்


     உடலுறவில் விந்து விரைந்து வெளியேறும் குறைபாடு கொண்டோருக்கு சில ஆங்கில மருத்துவர்களும், சில மேற்கத்திய கையேடுகளும் விந்துவை கட்டுப்படுத்த சில வழிமுறைகளைச் சொல்வதுண்டு.

     அதாவது உடலுறவில் ஈடுபட்டுருக்கும் ஒருவன் விந்து வெளியாகும் நேரத்தில் அழ்ந்து மூச்சிழுத்து, புணர்ச்சியின் இயக்கத்தை சிறிது நிறுத்தி, விந்து வெளி வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


     இவ்வாறு விந்து வர அறிகுறி தென்படும் போதெல்லாம் மேற்படி அழ்ந்து மூச்சிழுத்து சிறிது ஓய்வுக்குப்பின் மீண்டும் உடலுறவில் ஈடுபடுவது ஆபத்தானது. உடலுறவில் நரம்புகள் உஷ்ணமடைவதும், பின்பு குளிர்விக்கப்படுவதும் இந்த முறையில் அதிகரிக்கப்படுகிறது. ரத்தமும் உஷ்ணநிலை என மாறுபாடு அடைந்துகொண்டே இருக்கிறது.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

மாதவிடாயை சீராக்கும் வெந்தயக்கீரை கடைசல்


தேவையான பொருட்கள்:

     இரண்டு கப் வெந்தயக்கீரை, பூண்டு ஆறு பல், வெங்காயம் ஒரு கைப்பிடி பொடியாக அரிந்தது, தேங்காய்த் துருவல் ஒரு மூடி, மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி, தேவையான உப்பு.

செய்முறை:

     கிரையை அலசி, நீரை வடிய விடவும். பூண்டை தோல் உரித்து ஒரு தட்டு தட்டிப்போடவும். அடுப்பில் வைத்து மேகவிடவும். வெங்காயம் போடவும். கீரை வெந்ததும் இறக்கி வைத்து உப்பு போட்டு மத்தால் கடையவும். தேங்காயைக் பால் எடுத்து கீரையில் ஊற்றவும். மிளகுத்தூளைப் போட்டு பரிமாறவும். இந்த கடைசலை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

பயன்கள்:


     பெண்களின் மாதவிடாயை சீராக்கும். குளிர்ச்சி, நன்கு ஜீரணமடையும். தலைமுடி வளரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

100 கிராம் எள்ளில் உள்ள சத்துக்கள்


நீர்              : 5.1 கிராம்

புரதம்           : 18.3 கிராம்

கொழுப்பு        : 43.3 கிராம்

மாவுச்சத்து      : 25.2 கிராம்

சுண்ணாப்பு      : 1.4 கிராம்

பாஸ்பரஸ்            : 0.57 கிராம்

இரும்பு         : 10.5 மில்லி கிராம்

ஏ வைட்டமின்   : 60 மைக்ரோ கிராம்

பி1 வைட்டமின் : 1.01 மில்லி கிராம்

நிக்கோட்டின் அமிலம் : 4.4 மில்லி கிராம்

பி2 வைட்டமின் : 0.34 கிராம்

சி வைட்டமின் : 0 மில்லி கிராம்

நார்             : 2.9 மில்லி கிராம்

100 கிராம் எள் தரும் சத்து : 564 கலோரிகள்
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

சனி, 28 அக்டோபர், 2017

கர்ப்பம் என்றால் என்ன? - 5

கர்ப்ப காலத்தில் வயிற்று வலி ஏன் வருகிறது?

கர்ப்ப காலத்தில் வயிற்றில் உண்டாகும் அசௌகரியங்கள் இயற்கையே. அதில் தீங்கு எதுவும் இல்லை. கடுமையானதும் தொடர்ந்து இருப்பதுமான வயிற்றுவலியை அலட்சியப் படுத்தக் கூடாது.
வயிற்று வலியுடன் வெள்ளைபடுதல், இரத்தப்போக்கு, காய்ச்சல், குளிர், பிறப்புறுப்புக் கசிவு, மயக்கம், சிறுநீர் கழிக்கும்போது சிரமம் ஆகியவற்றுடன் ஓய்வுக்குப் பின்னும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் வயிற்று வலிக்கு இட்டுச்செல்லும் கடுமையான பிரச்சினைகள் எவை?

இடம் மாறிய கர்ப்பம்
சினைப்படுத்தப்பட்ட முட்டை கருப்பைக்கு வெளியே, பொதுவாக கருமுட்டைக் குழாய் ஒன்றில் பதியம் ஆகும்போது இடம் மாறிய கர்ப்பம் உண்டாகிறது. ஆரம்ப கட்டத்தில் பிடிப்பு போன்ற சில அறிகுறிகளை ஏற்படுத்தும்.
சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது மிகவும் உயிருக்கு ஆபத்தான ஒன்றாகும். கீழ்வரும் அறிகுறிகளில் ஏதாவது தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்:

வயிற்று அல்லது இடுப்பு வலியோ அசௌகரியமோ,
பிறப்புறுப்புக் கசிவு அல்லது இரத்தப்போக்கு (சிவப்பு அல்லது பழுப்பு, அதிகம் அல்லது குறைவு, தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு). உடல் செயல்பாடு, மலம் கழித்தல் அல்லது இருமும்போது வலி அதிகமாதல்.
தோளில் வலி.

கர்ப்பம்கலைதல்

முதல் 20 வாரங்களுக்குள் கரு கலைதலே கர்ப்பம் கலைதல் ஆகும். பிறப்புறுப்பு கசிவு அல்லது இரத்தப்போக்கே முதல் அறிகுறி. அதற்குப் பின் சில மணி நேரம் அல்லது சில நாட்கள் தொடர்ந்து வயிற்று வலி.
இரத்தப் போக்கு குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம். வலி தசைப் பிடிப்பு போன்றோ தொடர்ந்தோ, குறைவாகவோ அல்லது கடுமையாகவோ, பின்முதுகு அல்லது இடுப்பு அழுத்தம் போலவோ இருக்கும்.
குறைப் பிரசவம்

கருவுற்று 37 வாரத்துக்கு முன் ஏற்படும் பிரவசம்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel