வியாழன், 26 ஏப்ரல், 2018

பல பலன் தரும் பூண்டு….!


              நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இரத்தத்தை தூய்மை படுத்துகிறது. மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது.
           
               உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்.
             
                   வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது. அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது. புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது. மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும். வியர்வையை பெருக்கி கழிவுகளிள் வெளியேற்றுகிறது. பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
               
                    மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது. கருப்பையை வலுப்படுத்தும். சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது. மூளையை பலம்பெறச் செய்கிறது.தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது. கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. தாதுவை விருத்தி செய்யும், விந்துவைக் கெட்டிப்படுத்தும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

                  பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல நிறைய அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.


CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக