வியாழன், 31 மே, 2018

விந்து விருத்திக்கு ஆண்மை விருத்தி லேகியம்



முருங்கைப்பூ – 10 கிராம்
செம்பருத்திப்பூ – 10 கிராம்
பாதாம்பருப்பு – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
தேற்றான்கொட்டை – 10 கிராம்
முருங்கைப்பிசின் – 10 கிராம்
ஆவாரம் பிசின் – 10 கிராம்

     அனைத்தையும் நன்றாக அரைத்து தூள் செய்து மேற்படி சூரணத்தை கோழிமுட்டையின் வெண் கருவு சேர்த்து விழுதாக்கவும். 200 கிராம் சர்க்கரையை பாகாக்கி, சூரணத்தில் போட்டு கிளறி இறக்கவும். லேகியம் ஆறிய பதத்தில் 100 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
     காலை, இரவு உணவுக்குப்பின் 2 கிராம் அளவில் சாப்பிட விந்து விருத்தியாகும். நரம்புகள் பலப்பட்டு போகம் நீடிக்கம். தேக வலிவு, முகப்பொலிவு ஏற்படும். உறவின்போது ஏற்படும் குறிச் சுருக்கம் என்னும் தளர்வு நிலை தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


சீரகம் மருத்துவக் குணங்கள்:





தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட  இதைச் சாப்பிடலாம்.
உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
சிறிது சீரகம், மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel



திராட்சைப் பழ சத்துக்கள்



ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்று. இதில் வைட்டமின்கள் ‘பி1’, ‘பி2’, ‘பி6’, ‘பி12’ மற்றும் வைட்டமின் ‘சி’ ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதைத் தவிர பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்தும் அதிக அளவில் இருக்கின்றன.
இப்பழத்தைச் சாப்பிட்டால் பித்தம் தணியும். உடல் வறட்சியை நீக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊற வைக்கும் ஆற்றல் இதற்குண்டு. நரம்புகளுக்கு வலுவை அளிக்கவல்லது. இதனால் மூளையும் இதயமும் வலுமை பெறும்.
கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். உஷ்ணத்தினால் உடலில் நமைச்சல், சிறுநீர் தாரையில் எரிச்சலும் சொட்டுச் சொட்டாக நீர் பிரிதலும் இருந்தால் திராட்சைப் பழச்சாறு அதை போக்கும்.

நீர்              : 79.2 கிராம்
புரதம்           : 0.6 கிராம்
கொழுப்பு        : 0.4 கிராம்
மாவுச்சத்து      : 13.2 கிராம்
சுண்ணாப்பு      : 0.02 கிராம்
பாஸ்பரஸ்            : 0.02 கிராம்
இரும்பு         : 0.5 மில்லி கிராம்
ஏ வைட்டமின்   : 0 மைக்ரோ கிராம்
பி1 வைட்டமின் : 0.04 மில்லி கிராம்
நிக்கோட்டினிக் அமிலம் : 0.3 மில்லி கிராம்
பி2 வைட்டமின் : 0.03 கிராம்
சி வைட்டமின் : 1 மில்லி கிராம்
நார்             : 2.8 மில்லி கிராம்
100 கிராம் திராட்சை தரும் சத்து : 71 கலோரிகள்

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




கருப்பு கொண்டைக்கடலையின் ஊட்டச்சத்து



  • கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.
  • கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.
  • வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.
  • குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.
  • இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.
  • இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.
  • அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.
  • வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel



உடலுக்கு குளிர்ச்சி தரும் லஸ்ஸி



தேவையானவை:

கெட்டித்தயிர் – ஒரு கப்

சர்க்கரை – 4 டீஸ்பூன்

செய்முறை:

     மிக்ஸியில் தயிர், சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை அடிக்கவும். ஒரு டம்ளரில் ஊற்றி பருகவும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்து. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும்போது இதை கொடுத்து குணப்படுத்தலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel






புதன், 30 மே, 2018

இயற்கை உணவுவோடு இணைவோம்….!



நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறிவேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.

உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.
மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel






அலசர் குணமாக ஆரஞ்சு கேரட் பானம்



தேவையானவை:

கேரட் (விரல் நீள துண்டு) – ஒன்று

ஆரஞ்சு பச்சுளைகள் – 10

சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை;

     கேரட் துண்டுடன் ஆரஞ்சு சுளைகள், சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதை தினமும் அதிகாலையில் பருக ஆண்மை பெருகும். மேனி பளப்பளக்கும். முக வசிகரமாகும். அலசரினால் குடலில் உண்டாகும் பாதிப்பை  ஆரஞ்சு குணப்படுத்தும். ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்யும். 

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel





மூட்டுவலியை போக்கும் வெல்லம்:



சுக்கு            - 50 கிராம்

தனியா    - 50 கிராம்

வெல்லம் - 50 கிராம்

சீரகம்     - 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து வைத்து கொள்ளவும். இதில் மூன்று வேளை உணவுக்குப்பின் 20 கிராம் வீதம் 15 நாட்கள் சாப்பிட்டால் போதும். எப்பேர்ப்பட்ட மூட்டு வலிகளும் உடனே குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


‪‎காலையில் எழுந்தவுடன்‬ ‪ ‎சாப்பிடக்கூடாத உணவுகள்‬ :


காபி‬
காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

‪‎டீ
காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.‪

தயிர்‬
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

‪‎வாழைப்பழம்‬
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

‪‎சோடா‬
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

‪தக்காளி‬
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

‪‎மாத்திரைகள்‬
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

‪‎ஆல்கஹால்
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, உடல் மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

‪‎காரமான_உணவுகள்‬
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.
‪#‎சர்க்கரைவள்ளிக்_கிழங்கு‬
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்...


          ஆக காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட உணவுககளை தவிர்த்து..
‪#‎தண்ணீர்‬ அல்லது
‪#‎நீராகாரம்‬,
‪#‎சோத்துக்கற்றாழை_கூழ்‬* ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுங்கள்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel