சனி, 21 ஜூலை, 2018

உணவுக் கட்டுப்பாடு



முட்டைக்கோஸ் உடலுக்கு மிக நல்லது என்றாலும், நிறைய பேருக்கு வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். அதிலும் முட்டைக்கோஸை நிறைய பேர் சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதுண்டு. இது சரியல்ல. வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும். நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் மிகக் குறைவான அளவே வாயுத்தொல்லை உண்டாகும். பொதுவாக காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க நல்லதொரு வழியாகும். இதன் மூலம் வயிற்றிலுள்ள கொழுப்பும் குறையும்.
வேகவைத்து சாப்பிடும் காய்கறிகளும், ஜூஸ், சூப் போன்றவைகள் செய்து சாப்பிடும் காய்கறிகளும், பச்சையாக சாப்பிடும் சில காய்கறிகளும் உடல் எடையைக் குறைக்கும். தொப்பையையும் குறைக்கும். இதற்கு மாறாக அதிக எண்ணெய்யில் பொறிக்கப்படும், வறுக்கப்படும் (Deep Fry) காய்கறி பதார்த்தங்கள் உடல் எடையைக் கூட்டி வயிற்றைப் பெரிதாக்கி விடும். மேலும் காய்கறிகளை அதிக நேரம் அதிக எண்ணெய்யில் வறுத்தெடுக்கும்போது, கெட்டக்கொழுப்பாகிய இடைக்கொழுப்பு (Transfat) நிறைய உடலில் சேர்ந்துவிடுகிறது. இந்த இடைக்கொழுப்பு, உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் எடையைக் கூட்டி, வயிற்றையும் பெரிதாக்கி விடுகிறது.
கட்டுப்பாடான உணவும், கொழுப்பு குறைந்த உணவும், வயிற்றிலும், உடலிலும் கொழுப்பை சேரவிடாது. அதோடு உடற்பயிற்சியும், உடலுழைப்பும் தினமும் இருந்தால், வயிற்றில் கொழுப்பு அறவே சேராது. ஒரு மாதம் தொடர்ந்து நடக்காமல் விட்டுவிட்டாலோ, தொடர்ந்து கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலோ வயிறு பெரிதாகிவிடும். ஆகவே உடலுழைப்பும், உணவுக்கட்டுப்பாடும் மிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக