திங்கள், 3 பிப்ரவரி, 2020

மூட்டுவலி போக உணவும் சித்தமருத்துவமும்



             நிறைய வாழ்வியல் மாற்றங்கள், மாடர்ன் கிச்சன் மறந்துபோன பாரம்பரியம், கூடிவிட்ட சொகுசுக் கலாச்சாரம், இவை தான் பொருத்துக்களை (JOINTS) இளமையிலேயே வலுவிழக்க செய்திருக்கிறது.
இளம் வயது முதல் உணவில், சரியான அளவில் கால்சியம், இரும்பு, துணை கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகள் அன்றாடம் சேர்ப்பது தான் மூட்டுப் பாதுகாப்பில் பிள்ளையார் சுழி.
              
           1 முதல் ஒன்றரை வயது வரை கட்டாயமாகத் தாய்ப்பால், அதன் பின் 6-8 வயது வரை கண்டிப்பாய்த் தினசரி நவதானியக் கஞ்சி, கீரை சாதம், அடிக்கடி தேங்காய்ப்பால் சேர்த்த காலை உணவு, மோர், பீன்ஸ், அவரை, டபுள் பீன்ஸ், வெண்டைக்காய், கேரட் என காய்கறி கலந்த மதிய உணவு மிக மிக அவசியம். குழந்தைகளை கண்டிப்பாய்த் தினசரி 2 மணி நேரம் வியர்க்க விளையாட விடுங்கள். கம்ப்யூட்டரில் விளையாடும்கேம்அல்ல; கில்லியோ, கிரிக்கட்டோ நல்லா ஓடி வியர்க்க விளையாடும் விளையாட்டை ஊக்குவியுங்கள்; வியர்க்க வியர்க்க ஓடி ஒடி விளையாடும் எந்த விளையாட்டும் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும். குறிப்பாய் மூட்டுக்களை உறுதிப்படுத்தும். அதிக உடல் எடை தான் பெரும்பாலான மூட்டுவலிக்கு முக்கியக் காரணம். ஓடி ஆடி வளர்வது தான், ஆரோகியத்திற்கு குழந்தை போடும் முதல் மூலதனம்.

           ஃப்ரென்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் பொரியல் என கேஸ் மெனுக்களை மூட்டுவலிக்கார்ர்கள், உடல் எடை குறைய விரும்புபவர்கள் விலக்குவது முக்கியம்.

           வலி நிவாரணிகள் பக்கம் அதிகம் போகாமல் இருப்பது மிக மிக முக்கியம். பல வலி நிவாரணிகள் கண்டபடி நெடுநாள் பயன்படுத்தினால் நிச்சயம் சிறுநீரகத்தைப் பாதிக்கும்எண்ணைய் மசாஜ் எனும் பிழிச்சல் சிகிச்சை மூட்டுவலிகளுக்கு மிகச் சிறந்த ஒன்று. வலிஉள்ள மூட்டு தசைப்பகுதியில் நிறைந்து இருக்கும் நிண நீரை (lymphatic drainage) வெளியேற்ற அந்த சிகிச்சை சிறந்த ஒன்று.

         தினசரி 40 நிமிட நடை.பின் 15 நிமிட ஓய்வு. அதைத் தொடர்ந்து 30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரியவணக்கத்துடன் முதலான 4-5 யோகாசன்ங்கள், கால்சியம்-கீரை நிறைந்த, புளி வாயுப் பொருட்கள் குறைந்த உணவு இவற்றுடன் கண்டிப்பாய் ஒரு குவளை மோர், ஒரு கிண்ணம் பழத்துண்டுகள், 30-45 நிமிட மாலை நடை அல்லது விளையாட்டு இருக்குமா உங்களிடம்..மூட்டுவலி அதிகம் உங்களை அணுகாது.


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக