வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மூலிகைகளின் பயன்கள்அம்மான் பச்சரிசி:

அம்மான்பச்சரிசி செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி , தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்கு பால் சுரக்கும் , முகத்தில் பூசி வர , முகபரு , எண்ணெய்ப்பசை ஆகியன மாறும்., காலில் பூசிவர காலாணி தீரும்.

அரிவாள்மனை பூண்டு:

அரிவாள்மனை பூண்டின் இலைகளை நன்கு அரைத்து தேனில் கலந்து வெட்டுக் காயங்களில் மீது பூசி வர காயங்கள் ஆறும், தழும்புகள் ஏற்படாது.

ஆடாதோடை:

ஆடாதோடையிலைகளை எடுத்து துடைத்து நடுநரம்பை நீக்கி ஒன்றிரண்டாக கத்தரித்து கைப்பிடியளவு எடுத்து 4 டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளர் காய்ச்சி வடித்து பனங்கற்கண்டு சேர்த்து தினம் இரு வேளை குடித்து வர இருமல் , சள் , இரைப்பு , தொண்டைக்கட்டு ஆகியன தீரும்.

ஆடுதிண்டாப்பாளை:

ஆடுதீண்டாப்பாளை இலைகளை பிழிந்து எடுத்து சாறு 50 மிலி உடன் தேங்காயெண்ணெய் 50 மிலி சேர்த்து காய்ச்சி மேலுக்கு தடவி வர தோல் நோய்கள் , சிரங்கு , கரப்பான் , வண்டு கடி ஆகியன தீரும்.

சாதிக்காய்:

சாதிக்காயைச் சுட்டுப் பொடித்துத் தேனுடன் கலந்து தினம் இருவேளை நாவில் தடவி வரக் காதிரைச்சல் வயிற்று போக்கு , சீதபேதி ஆகியன குணமாகும்.

கசகசா:

ஒரு கிராம் கசகசாவைப் பாலிட்டுக் காய்ச்சி குழந்தைக்கு கொடுக்க நல்ல தூக்கமுண்டாகும்.

சிறுகண்பீளை:

சிறுகண்பீளை சமூலத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து கஷாயம் செய்து 30 மிலி தினம் இருவேளை குடித்து வர நீரெரிச்சல் சிறுநீரில் குருதி வருதல் , சிறுநீரக கற்கள் , வெள்ளை ஆகியன குணமாகும்.

சீரகம்:

ஐந்து கிராம் சீரகத்தை பொன்வறுவலாக வறுத்து சூரணம் செய்து அத்துடன் சோற்றுப்பும் நெய்யும் கலந்து சுடுசாதத்துடன் பிசைந்து உண்டு வரச் சுவையின்மை, பசியின்மை, வயிற்று பொருமல் ஆகியன தீரும்.

சிவதை:

சிவதை வேரை பாலில் வேகவைத்து , வெயிலில் காய வைத்து சூரணம் செய்து 1 கிராம் அளவாக வெந்நீருடன் இரவில் மட்டும் கொடுக்க வயிற்று வலியின்றி மலம் வெளிப்படும்.


CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channelகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக