செவ்வாய், 31 மார்ச், 2020

காய்ச்சல், இருமல் நீங்க வீட்டு வைத்தியம்



காய்ச்சல், சளி போற்ற தொற்று நோய் வருவது பொதுவான ஒன்றாகும். பயப்படத்தேவயில்லை, இதற்கான சிகிச்சை சமையலறையில் இருக்கின்றன.
இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, நீர் விட்டு பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். இதை வடிக்கட்டியதும், இந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இது உடல் நலனுக்கு நல்லது.
இலவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் தலைபாரம் குணமாகும்.
துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. துளசி இலையை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு அதிகாலை, இரவு குடித்து வந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது.
கொத்தமல்லி விதையை தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை லேசான சூட்டில் சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் சளி குறையும். கொத்தமல்லி விதை வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உதவும் ஊட்டச்சத்துகள் கொண்டிருக்கின்றன.
பூண்டு சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய பயன்படும். அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது. சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் அதிகாலை மற்றும் மாலையில் உட்கொண்டு வர வேண்டும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக