திங்கள், 6 செப்டம்பர், 2021

பிரசவ நேரத்தில் கடைபிடிக்க வேண்டிவை                 கர்ப்பப்பை சரியானபடி இறுக்கமடைந்தால் (Contraction) மட்டும்தான் சர்விக்ஸ் இப்படி விரிவடைய முடியும். கர்ப்பப்பை சரியாக இறுக்கமடைகிறது என்று எப்படிச் சொல்வோம் என்று கேட்டால், அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. பத்து நிமிடங்களுக்கு மூன்று முறையாவது இறுக்கமடைந்தால்தான் கர்ப்பப்பை நார்மலாகச் செயல்படுகிறது என்று நாங்கள் கணக்கில் கொள்வோம். சாதாரணமாகவே இயற்கையாக வரவேண்டிய விஷயம் இது. இது சரியானபடி நடக்கிறதா என்று, நாங்கள் உண்மையான பிரசவவலி தொடங்கியதிலிருந்து நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பைக்குள் கைவிட்டுப் பரிசோதிப்போம். சர்விக்ஸ் 5 - 6 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையத் தொடங்கியதுமே, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரமாக உள்புற பரிசோதனைகள் செய்வோம்.

                      இப்படி கையை உள்புறமாக விட்டுப் பரிசோதிக்கும்போது, வெளிப்புறமாக செய்யப்படும் பரிசோதனையைவிட பல கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும். அதன்மூலம் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது மற்றும் குழந்தையின் தலை எந்த அளவுக்கு தாயின் இடுப்பெலும்புப் பகுதியில் இறங்கியிருக்கிறது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது. இந்த சமயத்தில் தாயின் வயிற்றை வெளிப்புறமாகத் தொட்டுப் பார்த்தால், குழந்தையின் தலை இன்னும் தாயின் வயிற்றுக்குள் எந்தளவுக்கு உள்ளது என்கிற விஷயமும் தெரியவரும். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து, எல்லாமே இயல்பாக நடந்தேறினால், இந்த சமயத்தில், இத்தனை மணி நேரத்துக்குள் பிரசவமாகிவிடும் என்று எங்களால் ஓரளவுக்கு முடிவு செய்ய முடியும்.

               எல்லாமே இயல்பாகவே நடந்தாலும் சிலருக்கு நேரத்தோடு பனிக்குடம் உடையாமல் தாமதப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் காத்திருந்து பார்ப்போம். அது தானாகவே உடையாமல் போனால், நாங்களாகவே அதை செயற்கையாக உடையச் செய்துவிடுவோம். இதை மருத்துவரீதியாக Artificial Rupture of Membranes என்போம். இப்படி பனிக்குடம் உடைந்தால்தான் குழந்தை வேகமாகப் பிரசவமாகும்.

              பனிக்குடம் உடையும்போது அதிலுள்ள நீர் வெளிவரும். அதை ‘Liquor Amni’ என்று மருத்துவரீதியாக அழைக்கிறோம். இந்த நீர் நார்மலாகத் தண்ணீர் போல எந்தவித நிறமும் இன்றி இருக்கும். இப்படித்தான் இருக்கவும் வேண்டும். ஆனால், சில சமயம் இந்த நீர் பச்சை, மஞ்சள் கலந்த ஒரு நிறமாக வெளிவரும். இது சாதாரணமான விஷயமல்ல... தாயின் வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிட்டால், இப்படி பனிக்குட நீர் நிறம் மாறி வரும். தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலிலிருந்து இப்படி வெளியேறும் மலத்துக்கு ‘Meconium’ என்று பெயர். குழந்தை இப்படி தாயின் உடலுக்குள்ளேயே மலம் கழிப்பதன் மூலம் ‘நான் உள்ளே சவுகரியமாக இல்லை. சீக்கிரமே வெளியேற வேண்டும்’ என்று நமக்கு உணர்த்துவதாகத்தான் இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

               அவசரமான இந்த நிலைமையில் தாயின் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது என்று பார்ப்பர். 1 - 2 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்த நிலையிலேயே குழந்தை கர்ப்பப்பைக்குள் மலம் கழித்திருந்தால், தாமதிக்காமல் சிசரியன் செய்யத் தயாராகிவிடுவர். அதுவே எட்டு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடைந்துக் கொண்டிருக்கும் நிலையில், நார்மல் டெலிவிரிக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

               பிரசவத்தின்போது அதிமுக்கியமான விஷயம், பாப்பாவின் தலை சரியானபடி இறங்கி வருவதுதான். இதுதான் பிரசவத்தை நார்மல் என்று கூட முடிவு செய்கிறது. பாப்பாவின் தலை உடனடியாக இல்லாமல் மெதுமெதுவாக அம்மாவின் வஜைனாவில் இறங்கி வரும். இயல்பாகவே பாப்பாவின் தலையிலுள்ள எலும்புகள் கொஞ்சம் விலகிய நிலையில்தான் இருக்கும். வஜைனாவில் இறங்கும் பாப்பாவின் தலைப்பகுதி, அங்கே சற்று இறுக்கப்படும்.

                 அப்போது பாப்பாவின் தலைப் பகுதியின் எலும்புகள் இறுக்கமாக ஃபிட் ஆகும். இந்த விஷயம் நார்மலாக நடந்தால்தான் பாப்பாவால் நார்மலாக வெளிவர முடியும். வெளிவந்த பிறகு பாப்பாவின் தலைப் பகுதி எலும்புகள் வழக்கம்போலவே அதே விலகிய நிலைக்கு வந்துவிடும்.

                இந்த விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே CTG (Cardio Tocograph, இதற்கு Electronic Foetal Heart Monitoring என்று இன்னொரு பெயரும் உண்டு) என்கிற ஒரு கருவி வைத்து பாப்பாவின் இதயத் துடிப்பு, அம்மாவின் கர்ப்பப்பை இறுக்கமடைவது போன்ற விஷயங்களைக் கண்காணிப்பர். பெரியவர்களாகிய நம்முடைய இதயத்தின் இயக்கத்தைக் கண்காணிக்க இ.சி.ஜி கருவி பயன்படுவதுபோல, பாப்பாவின் இதயத் துடிப்பைப் பிரசவத்தின்போது கண்காணிக்க இந்தக் கருவி பயன்படுகிறது. இப்படிக் கண்காணிக்கப்படும்போது பாப்பாவின் இதயத்துடிப்பு குறைந்தால் (இது எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதில்லை. பிரச்னைக்குரிய சில பாப்பாக்களுக்கு மட்டுமே இப்படி ஆகலாம்.) அடுத்த கட்ட முடிவுகள் எடுக்க தயாராக வேண்டும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

 

 

SPECIALIST IN:

 

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

 

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

 

For Appointment: 8608400035        

 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

 

What's-app groups 9176176667

 

www.drarunchinniah.com

 

www.drarunchinniah.in

 

www.azoospermiaa.com

 

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

 

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

 

https://twitter.com/Aadhavan_Siddha

 

 

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

 

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக